எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 43

“ஸார்.. கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணுங்க ஸார்.. இது டீசன்டான பார்.. ரொம்ப இன்டீசண்டா போறாங்க..!!”

“ஹேய்.. உக்காரு மீரா.. சொல்றேன்ல.. உக்காரு..!!” மீராவை அதட்டிய அசோக்,

“ஸாரி பாஸ்.. நான் பாத்துக்குறேன்.. நீங்க போங்க..!! நான் பாத்துக்குறேன் பாஸ்.. இனிமே இப்படி நடக்காது..!!”

பேரரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான். அப்புறம் எழுந்து எதிரே இருந்த மீராவுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அவளுடைய புஜத்தை இறுகப் பற்றியவன், சற்றே எரிச்சலான குரலில் கேட்டான்.

“எ..என்ன மீரா இது.. எல்லாரும் நம்மை பத்தி என்ன நெனைப்பாங்க..?? ச்ச..!!”

“என்ன வேணா நெனச்சுக்கட்டும்.. எனக்கு கவலை இல்ல..!!”

“ப்ச்.. என்னாச்சு உனக்கு.. ஏன் இப்படிலாம் பண்ற..??” அசோக் இப்போது சலிப்பாக கேட்க,

“எனக்கு மனசே சரி இல்ல அசோக்.. அதான்..!!” மீரா பாவமாக சொன்னாள்.

“அதுக்காக..??”

“யாரையாவது புடிச்சு சப்பு சப்புன்னு அறையணும் போல இருக்கு..!!”

“ஹ்ம்ம்.. அவ்வளவுதான..?? சரி.. என்னை அடி.. எவ்ளோ வேணா என்னை அடிச்சுக்கோ.. உன் கோவத்தை என் மேல காட்டு..!! ம்ம்.. கமான்..!!” அசோக் சீரியஸாக சொல்ல, மீரா இப்போது சிரித்தாள்.

“ஹ்ஹ.. உன்னை எதுக்கு அடிக்கணும்..?? நீ… என் செல்…ல ஹனிபனி..!!” என்று கண்சிமிட்டியவள், உடனே அந்த கல்லூரி பையனை நோக்கி கைநீட்டி..

“எனக்கு அவனைத்தான் அடிக்கனும்.. அவன் ஃபேஸ்-கட்டே எனக்கு சுத்தமா பிடிக்கல..!! ப்ளீஸ் அசோக்.. ரெண்டே ரெண்டு அறை.. அவனை போய் அறைஞ்சுட்டு வந்துர்றேன்.. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்..!!” என்று கெஞ்சலாக கேட்டவாறே எழ முயல, அசோக் அவளை பிடித்து அமுக்கினான்.

“என்ன வெளையாடுறியா.. உக்காரு மீரா..!!”

“ப்ளீஸ் அசோக்..!!”

“ப்ச்.. சொல்றேன்ல..?? வேணுன்னா என்னை அறைஞ்சுக்கோ..!!”

“உன்னை அறைய மாட்டேன் போ.. யு ஆர் எ குட்பாய்..!!”

“ஹாஹா.. யாரு.. நானா..??” அசோக் சிரிப்புடன் கேட்டான்.

“யெஸ்ஸ்ஸ்..!! அசோக் இஸ் எ குட்பாய்..!! மீரா இஸ் எ பேட் கேர்ள்.. வெரி வெரி பேட் கேர்ள்..!!!” மீரா திடீரென அவ்வாறு சீரியஸான குரலில் சொல்ல, அசோக் அப்படியே உருகிப் போனான்.

“ஹேய்.. ஏன் இப்படிலாம் சொல்ற..??”

“யெஸ்.. இட்ஸ் ட்ரூ..!!”

“ப்ச்.. அதுலாம் ஒன்னுல்ல.. மீரா ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு.. எனக்கு நல்லா தெரியும்..!!”

மீராவின் கலைந்திருந்த கூந்தல் கற்றையை சரி செய்தவாறே, அசோக் காதலாக சொன்னான். மீரா இப்போது எதுவும் பேசாமல், அசோக்கையே அமைதியாக பார்த்தாள். இமைகளை அசைக்காமல்.. ஒருவித சலனமற்ற பார்வை..!! பிறகு..

“உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுத்திட்டேன்ல..?? ஸாரி..!!” என்றாள் இரக்கமாக.

“ஹேய்.. மீரா.. எ..என்ன இது..??”

“தப்பான நம்பர் குடுத்து பிரச்னைல மாட்டிவிட்டு.. டிக்கெட் விக்க சொல்லி தெருதெருவா அலையவிட்டு.. கடலை கூடைலாம் உன் தலைல தூக்க வச்சு..!! எல்லாம் உனக்கு தேவை இல்லாத கஷ்டம்ல.. ஸாரிடா.. ஸாரி..!!”

“ப்ச்.. என்ன மீரா நீ..?? உன்னை நான் எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா..?? உனக்காக இது கூட பண்ண மாட்டேனா..?? அதில்லாம.. அர்பனேஜ்ல அந்த கொழந்தைங்க.. ட்ரெயின்ல அந்த தாத்தா.. அந்த ப்ரக்னன்ட் லேடி.. எல்லாரும் அவங்க மனசார எனக்கு தேங்க்ஸ் சொன்னப்போ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா..?? அந்த மாதிரி ஒரு சந்தோஷத்தை நான் அனுபவிச்சதே இல்ல.. அதெல்லாம் உன்னாலதான..?? இ..இன்னும் சொல்லப் போனா.. உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே.. நீ இந்த மாதிரி பண்ற இம்சைதான்.. தெரியுமா..?? உன்கிட்ட சொன்னதில்ல.. பட்.. ஐ ஜஸ்ட் லவ் தட்..!!” மீராவுக்கு இதமளிக்குமாறு அசோக் அவ்வாறு சொல்ல, அவள் இப்போது பட்டென முகம் மலர்ந்து போனாள்.

“ரியல்லி..????” என்றாள் கண்களில் ஒரு மின்னலுடன்.

“யெஸ்..!!!”

“வாவ்..!! ஐ’ம் ஸோ ஹேப்பி நவ்..!!!” மீராவின் குழந்தைத்தனமான குதுகலம் அசோக்கிற்கு சிரிப்பை வரவழைத்தது.

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.