எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 8 44

சொல்லிவிட்டு அசோக்கை பார்த்து கண்ணடித்தாள். அவனுக்கோ இப்போது உடனடியாய் ஒரு வெட்கம். உதட்டில் அழகான புனனகையுடன்,

“ஆமாம்.. அடிக்கடி இது ஒன்னை சொல்லிடு.. ‘ச்சோ ச்ச்வீட், ச்சோ ச்ச்வீட்’ன்னு..!!” என்றான்.

“ஹையோ.. வெக்கத்தை பாரு.. என் ஹனிபனிக்கு..!!”

இளிப்புடன் சொன்ன மீரா, படக்கென சேரில் இருந்து எழுந்தாள். ஹஸ்கியான செக்ஸியான குரலில் அவள் பாட்டுக்கு பாட ஆரம்பித்தாள்.

“யூ’ஆர் மை பம்கின்.. பம்கின்.. ஹெலோ ஹனிபனி..!! ஐ’ம் யுர் டம்ளிங்.. டம்ளிங்.. ஹெலோ ஹனிபனி..!! ஃபீலிங் சம்திங்.. சம்திங்.. ஹெலோ ஹனிபனி.. ஹனிபனி.. டோகோ டோகோ..!!”

இடுப்பில் ஒரு கையும், தலையில் ஒரு கையுமென.. மாறி மாறி வைத்துக்கொண்டு.. தனது பின்புறத்தை இப்படியும் அப்படியுமாய் அழகாக அசைத்து அசைத்து.. இமைகளை படக் படக்கென வெட்டியவாறே.. அசோக்கை பார்த்து பாடிக்கொண்டே அவள் ஆட.. இப்போது பாரில் இருந்த அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர்.. ‘உய்ய்ய்..’ என்று கத்தியவாறே உற்சாகமாக கைதட்டினார்கள்..!! அசோக்கிற்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது..!!

“ஹேய்.. என்ன பண்ற நீ..?? எல்லாரும் பாக்குறாங்க.. உக்காரு மீரா.. ப்ளீஸ்.. உக்காரு..!!”

அவளுடைய தோள்களை பற்றி அழுத்தி, அரும்பாடு பட்டு அவளை அமரவைக்க வேண்டியதிருந்தது அசோக்குக்கு..!!

அப்புறம் சிறிது நேரம் மீரா அடித்த கூத்துக்கும், செய்த ரகளைக்கும் அளவே இல்லை. அசோக்தான் நொந்து போனான். அவளை கண்ட்ரோல் செய்வதே கடினமான காரியமாக இருந்தது. ஏற்றிய கொஞ்ச நஞ்ச போதையும் இறங்கிப்போனது. நான்காவது லார்ஜ் கொண்டு வந்து ஊற்றிய பேரர்,

“என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!” என்ற மாமூலான டயலாக்கை உதிர்க்க, மீரா

“ரிப்பீட்..!!” என்றாள். இன்னொரு லார்ஜ் கேட்கிறாளோ என்று அந்த ஆள் குழம்ப,

“இல்ல.. இப்போ நீங்க ‘என்ஜாய் யுவர் டிரிங்’னு ஸ்டைலா சிச்சுக்கிட்டே சொன்னீங்கள்ல.. அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. இட்ஸ் ச்சோ.. ச்ச்வீட்..!! ரிப்பீட் ப்ளீஸ்..!! இன்னொரு மொறை சொல்லுங்க..!!” என்று மீரா இளித்தாள். அந்த பேரர் ஓரிரு வினாடிகள் திருதிருவென விழித்தான். அப்புறம்..

“எ..என்ஜாய் யுவர் டிரிங் மேடம்..!!” என்று முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னான்.

“வாவ்… ச்சோ.. ச்ச்வீட்..!! இன்னொரு மொறை இன்னொரு மொறை.. ப்ளீஸ் ப்ளீஸ்.. ரிப்பீட்..!!”

அந்த ஆள் இப்போது அசோக்கை பரிதாபமாக பார்த்தான். ‘எப்படியாவது இந்த இம்சைட்ட இருந்து என்னை எஸ்கேப் பண்ணி வுடு ராசா..’ என்பது போல இருந்தது அவன் பார்வை..!!

“ஹேய்.. விடு மீரா அவரை..!! ஸார்.. நீங்க போங்க ஸார்..!!” என்று அசோக்தான் அந்த பேரரை காப்பாற்றினான்.

ஐந்தாவது லார்ஜ் வந்தபோது..

“ஜானிப்பயல சும்மா சொல்லக்கூடாது.. ஜம்முனு இருக்குறான்..!!” என்று திடீரென சொல்லி, அசோக்கை குழம்ப வைத்தாள்.

“யாரு ஜானிப்பய..??”

“இதோ இவன்தான்..!!” விஸ்கியை தட்டிக்காட்டிய மீரா,

“வாக்கர்னு பேரை வச்சுக்கிட்டு.. உள்ளபோய் என்னமா தடதடன்னு ஓடுறான்..!!” கருவிழிகளை சுழற்றிக்கொண்டே சொல்ல,

“ஷ்ஷ்.. ப்பா.. இப்போவே கண்ணை கட்டுதே..!!” சலிப்பானான் அசோக்.

விஸ்கியை உள்ளே ஊற்றிவிட்டு.. கடித்துக்கொள்ள ஷீக் கபாபை கையில் எடுத்தவள்.. வாயென்று நினைத்து மூக்கில் திணித்துக் கொண்டாள்..!! அசோக் பதறிப் போனான்..!!

“ஹேய்.. மூக்கு அது..!!”

“ஓ.. மூக்கா இது..?? அப்போ வாய் எங்க..?? வேர் இஸ் மை வாய்.. வேர் இஸ் மை வாய்..??”

என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள்.. இடது கையால் தன் முகத்தை தடவி.. வாயை கண்டுபிடித்து.. இரண்டு விரல்களால் வாயை திறந்து.. மூடி விடாமல் பிடித்துக்கொண்டு.. வலது கையிலிருந்த ஷீக் கபாபை வாய்க்குள் லபக்கென்று போட்டாள்..!! போட்டுவிட்டு..

“எப்பூடி..??” என்றாள் பெருமையாக.

“கிழிஞ்சது..!!” தலையில் அடித்துக்கொண்டான் அசோக்.

ஆறாவது லார்ஜ் குடிக்கும்போது வேறொரு பிரச்சினை..!! சற்று தூரத்தில் அமர்ந்து குடித்துக்கொண்டிருந்த நான்கு கல்லூரி மாணவர்களில் ஒருவன்.. எதேச்சையாக இவளை திரும்பி பார்த்துவிட்டான் போலிருக்கிறது.. மீரா கொதித்து போய் விருட்டென எழுந்தாள்..!!

“ஒய்.. என்னடா இங்க லுக்கு..?? இங்க என்ன படமா காட்றாங்க..??” என்று காலி க்ளாஸை கையில் எடுத்தாள்.

அந்தப் பையன் மிரண்டு போய் அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். மீராவுடைய செய்கையில் அசோக்கும் அதிர்ந்து போயிருக்க, பேரர் அவசரமாக இவர்களை நோக்கி ஓடி வந்தான்.

3 Comments

  1. இந்த கதை ரொம்ப குழப்பமா இருக்கு !

  2. Mannichudnga ram story continue
    Panunga admin

  3. Mannichudnga ram story continue
    Panunga admin

Comments are closed.