இந்த வீட்டின் உரிமையாளர் 3 100

இவ்வளவு உதவி செய்யும் ஒரு நண்பனுக்கு சாப்பாடு விருந்து போல இருக்கணும் என்ற நினைப்பில் சமையல் அறைக்குள் சென்றேன், இருந்த பொருட்களையெல்லாம் உபயோகித்து உணவு ரெடி செய்தேன் உணவு ரெண்டு பேருக்கு தான் நவீனுக்கு டாக்டர் சொல்லற உணவு தான் என்பதால் எனக்கும் ரோஷனுக்கும் மட்டும் செய்து வைத்தேன். முடிக்கும் தருவாயில் மொபைல் அடிக்க இடுப்பில் சொருவி இருந்த மொபைலை எடுத்து சொல்லு ரோஷன் என்றதும் ரெண்டு பேரும் வரப்போவதில்லை நான் மட்டும் தான் வருகிறேன் நவீன் ஹாஸ்பிடலில் மூன்று நாட்கள் இருக்கனுமாம் என்றான். கண்டிப்பாக ரோஷன் நன்றாக விசாரித்த பிறகு தான் நவீன் ஹாஸ்பிடலில் இருக்க சம்மதம் சொல்லி இருப்பான் என்று உறுதியாக நம்பினேன்
உண்மையில் நடந்தது வேறு நவீனை ரோஷனுடைய கடையில் வேலை செய்யும் ஒரு பையனோடு காரில் ஏத்தி மூகாம்பிகை கோவில் போகிற வழியில் ஒரு சத்திரம் இருக்கு அதில் குடிக்கு பழக்கமானவர்களை கொண்டு போய் சேர்த்து விட்டு அவர்கள் கேட்கும் பணத்தை குடுத்து விட்டால் அப்படிப்பட்ட குடியர்களை குறைந்தது ஒரு மாதம் வைத்து இருந்து அவர்களை குணப்படுத்துகிறேன் என்ற போர்வையில் ஹிப்னோடிசம் செய்து ஒரு நடைபிணமாக மாற்றி அவர்கள் வீடு குடும்பம் எல்லாவற்றையும் மறக்க செய்து பிறகு அவர்களை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள். இதை பற்றி ரோஷன் நன்கு தெரிந்து இருந்ததால் நவீன் அங்கு சேர்த்து விட்டால் பிறகு ஒரு மாதம் போதும் நித்தியாவை அவனுடைய வழிக்கு கொண்டு வர என்ற கணக்கு போட்டு செயல் பட்டான்.

பிறகு நவீன் வீட்டிற்கு சென்றான். உடம்பெல்லாம் ஒரே அலுப்பு வலியும் சேர்ந்து இருக்கு என்று நித்து கிட்டே சொல்லி விட்டு அவ அவனுடைய நிலையை பார்த்து பரிதாபத்துடன் ரோஷன் படுத்து ரெஸ்ட் எடுங்க காலையில் பேசி கொள்ளலாம்னு சொன்னாள். ரோஷன் கண்டிப்பா முடியாது இந்த உடல் நிலைக்கு சூடாக குறைந்தது அரை மணி நேரம் ஹாட் வாட்டரில் குளிச்சாதான் நல்லா இருக்கும் ஹீட்டர் இருக்கு இல்ல என்று பாத்ரூமை தேட நான் ஹே இந்த வீட்டிலே இருப்பது ஒரு பாத்ரூம் அதுவும் எங்க அறையில் தான் இருக்கிறது, போ ஆசை தீர குளி என்று அனுமதித்தேன்.

அவன் பாத் ரூம் உள்ளே சென்ற பிறகு தான் அங்கே நானும் நவீனும் உபயோகிக்க ரெண்டு சோப்பு மட்டும் இருந்தது அதில் சமீபத்திய சண்டையில் நான் நவீன் சோப்பை எடுத்து டஸ்ட்பின் னில் போட்டது நினைவுக்கு வர கப்போர்டில் இருந்த ஒரு புது சோப்பு கட்டியை எடுத்து பாத் ரூம் கதவை தட்டி ரோஷன் இந்தா புது சோப்பு உள்ளே நான் யூஸ் பண்ணும் சோப்பு தான் இருக்கு என்று சொல்ல அவன் நல்ல வேளை சொன்னே நித்து நான் அந்த சோப்பு ஒரு வேளை நவீன் யூஸ் செய்யறதோ அதை நானும் யூஸ் செய்தால் அவன் செய்த பாவம் எல்லாம் எனக்கும் ஒட்டி கொள்ளுமோ என்று யோசித்து கொண்டிருந்தேன். நீ யூஸ் பண்ணற சோப்புனா எனக்கு ஓகே சோப்பு மணத்தோட உன் மணமும் சேர்ந்து இருக்கும் இரு ஒரு முறை முகர்ந்து பார்க்கிறேன் என்று சொல்ல நான் தலையில் அடித்து கொண்டு எவ்வளவு தான் எச்சரிக்கையுடன் இருந்தாலும் இப்படி நானே போய் அவன் வலையில் சிக்கி கொள்கிறேனே என்று நொந்து கொண்டேன்.

1 Comment

  1. Next part mng lanthu waiting

Comments are closed.