இந்த வீட்டின் உரிமையாளர் 1 140

நவீன் இன்னும் என்னை சீண்டி கொண்டு தான் இருந்தார் ஆனாலும் அந்த பொம்பளையின் ஞாபகம் வந்த பிறகு எனக்கு இவரின் சீண்டல்கள் சுவையாக இல்லாமல் நெருடலாகத்தான் இருந்தது. ஒரு வழியாக நவீனை தள்ளி விட்டு எழுந்து சென்றேன். கூடவே ஒட்டியப்படி அவரும் படுக்கை அறைக்கு வந்தார். நான் குளித்து கொஞ்ச நேரம் தான் ஆகி இருந்தது என்பதால் குளியல் அறையில் நான் குளித்து கழுவி விட்ட அந்த செனட்டின் நறுமணம் இன்னும் வீசி கொண்டு தான் இருந்தது. நவீன் அதை சென்ட் என்று எடுத்து கொள்ளாமல் நித்தி என்ன டாய் லெட் கிளீனர் வாங்கி இருக்கே அந்த வாசம் தானா இது என்று கேட்க என் மண்டை மறுபடியும் குழம்பியது இவருக்கு இந்த செனட்டின் வாசம் கண்டிப்பா தெரிஞ்சு இருக்கணும் அப்படி இருக்கும் போது அவன் அதை டாய் லெட் கிளீனர் என்று நினைக்க மாட்டார் . அப்படி இல்லை என்றால் அவன் சென்ட் என்று புரிந்து கொண்டு நாடகம் ஆடுகிறார் .

சரி எவ்வளவு தூரம் நடிக்கிறார் என்று தெரிந்து கொள்ள வாஷிங் மெஷினில் இருந்த துணிகளை எடுத்து குளியல் அறையிலேயே காய வைத்தேன். என்ன செய்கிறான் என்று பார்க்க. இவ்வளவு சாமர்த்தியமா அவரை பரிசோதித்து கொண்டிருந்த நான் ஒன்றை சுத்தமாக மறந்து விட்டேன். ரோஷன் குடுத்த சென்ட் பாட்டில்களை கட்டில் மேலேயே வைத்து இருக்கிறேன் என்று. என்னை காட்டி குடுக்க அது ஒன்று போதாதா அவர் கட்டில் மேலே சாய்ந்து கைகளையும் கால்களையும் நீட்டி படுக்க அவர் கால்களில் அந்த பாட்டில்கள் இருந்த கவர் தட்டுப்பட எழுந்து உட்கார்ந்து அந்த கவரை திறந்து பார்த்தார் . உள்ளே புது சென்ட் புட்டிகள் இருப்பதை பார்த்து அதை வெளியே எடுத்து அவர் தன்னுடைய பின் கையில் சிறிது தெளித்து முகர்ந்து பார்க்க பிறகு படுக்கையில் இருந்தே குரல் குடுத்தார் நித்தி இந்த சென்ட் வாசம் தான் அது யார் வங்கி வந்து குடுத்தாங்க என்று கேட்க நான் சுதாரித்து கொண்டு மறந்தே போச்சு நவீன் காலையில் அண்ணா வந்து இருந்தார் அவர் தான் வாங்கி வந்தார் என்றேன். நவீன் அடுத்த கேள்வி என்னை மொத்தமாக வீழ்த்தியது அண்ணா எப்போ வந்தார் அப்போவே வாங்கி வந்து இருந்தாரா நீ காலையில் என்னிடம் பேசும் போது அவர் வந்து இருப்பதை சொல்லவே இல்லையே என்று கேட்டு அத்துடன் நிற்காமல் என்ன நித்தி பொய் சொல்லறே இது மாலை நாலு மணி அளவில் வாங்கி இருப்பதாக பில்லில் இருக்கு உண்மையை சொல்லு யார் வந்தது என்றார்

Updated: December 14, 2021 — 6:01 am