இந்த வீட்டின் உரிமையாளர் 1 140

இருந்தாலும் கிளம்பியாச்சு அப்படியே இன்னைக்கு முடியவில்லை என்றாலும் நாளைக்கோ நாளை மறுநாளோ பேசலாமே என்று சம்மாதானம் செய்து கொண்டேன். ஒரு வழியாக போரம் மால் சென்று அங்கிருந்த கோனிக்கா ஷாப்பில் போட்டோ எடுக்க நுழைந்தோம் ஆர்டர் எடுக்கறவன் நாங்க இருவரும் இந்தி தெரிந்தவர்கள் என்று நினைத்து முதலில் இந்தியில் ஏதோ கேட்க ரோஷன் சாரி வி டோன்ட் ஸ்பீக் ஹிந்தி என்று சொல்ல நான் ரோஷன் உனக்கு தான் ஹிந்தி தெரியுமே என்று காதை கடிக்க அவன் தெரியும் நித்தியா ஆனா அவன் என்ன சொல்லுகிறானு உங்களுக்கும் தெரியணுமே அதனால் தான் சொன்னேன் என்று பதில் அளிக்க கடைக்காரன் அடுத்து இங்கிலிஷில் போட்டோ ஆஸ் பெர் ஆர் இன்டிவிஜுவல் என்று கேட்க ரோஷன் அவன் முதுகை தட்டி ப்ரெண்ட் வி ஆர் நாட் கப்பில் ஷி ஜஸ்ட் எ ப்ரெண்ட் என்று சொல்ல அவன் சாரி என்று சொல்லி எங்களை உட்கார சொல்லி விட்டு போட்டோ எடுக்க தயார் செய்தான்

காமிரா முன் உட்கார்ந்ததும் படம் எடுப்பவன் பொக்ஸ் சரி செய்து பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ரோஷனிடம் ஏதோ ஹிந்தியில் சொல்ல ரோஷன் என் அருகே வந்து என் முகவாயை பிடித்து தலையை நேர்ப்படுத்த அவனை நான் முதல் முறை சந்தித்த போதே கைகுலுக்கி இருக்கிறேன் என்றாலும் என்னவோ இப்போ அவன் கை என் முகத்தில் படும் போது கூச்சம் கலந்த ஒரு உணர்வு ஏற்ப்பட்டது. நல்ல வேளையாக படம் எடுப்பவன் அதற்கு மேல் ஏதும் சொல்லாமல் படத்தை எடுத்து முடித்தான். ரோஷன் வெளியே ஆர்டர் எடுத்தவனிடம் எங்களுக்கு உடனே படம் தேவை படுகிறது என்று சொல்ல அவன் அரை மணி நேரம் ஆகும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்றான். அந்த கடையில் உட்கார இடங்கள் இல்லாததால் வெளியே செல்ல வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது. அங்கிருந்த கடைகளின் கண்ணாடியில் விண்டோ ஷாப்பிங் செய்ய ரோஷன் திடீரென்று என் தோளை தட்டி நித்தியா உங்களுக்கு அதிர்ஷ்டம் ரொம்ப இருக்குனு நினைக்கிறேன் என்று சொல்ல நான் புரியாமல் அவனை பார்க்க அவன் நாங்க நின்று கொண்டிருந்த கடைக்குள் என் வயது உடைய ஜீன்ஸ் டாப்ஸ் போட்டு கண்ணில் கூக்ல்ஸ் போட்டிருந்த ஒரு பெண்ணை காட்டி நித்தியா நீங்க யார் கூட பேச நினைக்கறீங்களோ அவங்க தான் அது என்று சொல்ல என் பார்வை இப்போ இன்னும் கவனமாக அந்த பெண்ணின் மீது பதிந்தது.

என்னுடைய முதல் கணிப்பு பார்க்க நல்லாவே அம்சமாக இருக்கிறாள் பணத்தில் புரண்டவள் என்ற முத்திரை இருந்தது. அவளை பார்க்கும் போது கண்டிப்பாக அவளுக்கு நவீனை விட பல அழகான கவர்ச்சியான ஆண்கள் கிடைப்பது வாய்ப்புகள் மிக அதிகம் அப்படி இருக்க இவ எதுக்கு நவீனை வளச்சு போடணும் நவீன் என்னை பொருத்தவரை அழகிலோ அம்சங்களிலோ அறிவிலோ குறைந்தவன் இல்லை ஆனால் பணம் என்ற அந்தஸ்து கண்டிப்பாக குறைவாக தான் இருக்கும் மனைவி என்ற முறையில் எனக்கு அது கண்டிப்பாக தெரியும். இந்த மன ஓட்டத்தில் நான் இருக்கும் போது அந்த பெண் தன்னுடைய ஷாப்பிங் முடித்து விட்டு காஷ் கவுன்ட்டர் கிட்டே வர ரோஷன் மறைந்து நின்று ரகசிய குரலில் கிளம்பிடலாம் நித்தியா என்று சொல்ல நானும் அவன் முன்னே செல்ல அவனை தொடர்ந்து நடந்தேன், {இத்தனைக்கும் எனக்கு தெரியாத ஒரு விஷயம் பிறகு பல நாட்கள் கடந்த பிறகு தெரிந்து கொண்ட உண்மை இந்த பெண்ணிற்கும் நவீனுக்கும் எந்த வித சம்ம்பந்தமும் இல்லை என்று.}

Updated: December 14, 2021 — 6:01 am