இந்த வீட்டின் உரிமையாளர் 1 140

ரோஷன் நித்தியா அரை மணி நேரம் ஆயிடுச்சு போன் செய்து பார்க்கவா என்றான். எனக்கு திடீர் ஞானோதயம் ரோஷன் ஒன்னு யோசிக்கணும் கொஞ்ச நேரம் முன்னே தான் நீங்க உங்க நம்பரில் இருந்து நவீன் கிட்டே பேசனீங்க அதுவும் அந்த பெண்ணை குறிப்பிட்டு பேசனீங்க இப்போ இதே நம்பரில் இருந்து நான் பேசி அந்த பெண் நம்பர் நோட் செய்து நவீன் கிட்டே சொன்னா அவர் நீங்க என்னை தூண்டி விட்டு பேச வச்சீங்கன்னு கண்டு பிடிச்சுடுவாறே என்றேன். ரோஷன் எழுந்து நின்று என் முதுகில் தட்டி குடுத்து நித்தியா நீங்களும் ரொம்ப நல்லா யோசிக்கறீங்க நீங்க சொல்லறது சரி தான் அப்போ இப்போ பேச வேண்டாம் நான் என்னுடைய புது நம்பர் சிம் எடுத்து வரேன் அது போட்டு பேசலாம் என்றான். ஆனால் பெண்ணுக்கே உரிய பொறாமை எனக்குள் கின்டி விட நான் ரோஷன் சிம் வாங்கறது ஈஸி தானே உடனே புது சிம் வாங்க முடியாதா என்றதும் அவன் யோசிப்பது போல இருந்து வாங்கலாம் ஆனா என் கிட்டே என்னுடைய அடையாள ஆதாரம் இப்போ இல்லை உங்க கிட்டே இருந்தா கடுங்க வாங்கலாம் என்றான். நான் யோசித்து அடையாள ஆதாரம் இருக்கு ஆனா புகைப்படம் இல்லையே என்றேன்.

புகைப்படம் எடுப்பது பெரிய விஷயம் இல்லை உங்களுக்கு என் கூட வர சம்மதம்னா ஒரு மணி நேரத்திலே எல்லாம் முடிச்சுகிட்டு சிம் வாங்கி கிட்டு வந்துடலாம் என்று பொடி வைக்க நான் உடனே சரி ரிஉங்க நான் ரெடி ஆகிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு படுக்கை அறைக்கு போகும் போது ரோஷன் நீங்க பைக்ல வந்து இருக்கீங்களா அதுலே என்னாலே வர முடியாது என்றேன். ரோஷன் ஐயோ நித்தியா நான் பைக்ல வந்து இருந்தா உங்களை அழைத்து இருக்கவே மாட்டேன் நான் என்னுடைய காரில் தான் வந்து இருக்கேன் என்றதும் நான் சரி பத்து நிமிஷத்தில் ரெடி ஆகிவிடுவேன் என்று படுக்கை அறைக்குள் சென்றேன்.

என் அலமாரியை திறந்து எந்த உடை அணியலாம் என்று தேர்ந்தெடுக்கவே ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. பொதுவாகவே ஒரு பெண் வெளியே கிளம்புகிறாள் என்றால் அவள் உடையிலும் முக அலங்காரத்திலும் அதிக கவனம் செலுத்துவாள் நானோ புகைப்படம் வேறு எடுக்க போறேன் சொல்லவா வேண்டும். உடை மாற்றி வெளியே வரும் போது நான் சொன்ன பத்து நிமிடம் போல சில பத்து நிமிடங்கள் கடந்து இருந்தது. ரோஷன் ஹாலில் யாருடனோ போனில் பேசி கொண்டிருந்தான். நான் அவன் பேசி முடிக்கும் வரை காத்திருந்து போகலாமா என்றேன். அவன் கிண்டலாக அவன் கடிகாரத்தை ஒரு முறை பார்த்து கொள்ள அது பற்றி நான் கவலை படவில்லை. காரில் ஏறி BTM லே ஆட் இல்லிருந்து கோரமங்களா போவதற்குள் எப்படியும் அரை மணி நேரம் ஆகி இருக்கும் இப்போ நான் கடிகாரத்தை பார்த்தேன் மணி நான்கு தாண்டி இருந்தது. இப்போ போட்டோ எடுத்து எப்போ சிம் கார்ட் வாங்கி எப்போ பேசுவது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

Updated: December 14, 2021 — 6:01 am