இடை அழகி மேடம் சங்கீதா 14 83

அதையெல்லாம் விட சூப்பர் புக் அது..” “என்ன புக்.. சொல்லேன் நானும் படிக்குறேன்..” – ஆர்வமாய் கேட்டள் சஞ்சனா.. “ஹஹ்ஹா.. ரொம்பல்லாம் யோசிக்காத… வார கடைசில நியூஸ் பேப்பர் கூட போடுற இலவச இணைப்புல வர்ற குடும்ப மலர்ல படிச்சதுதான் இந்த குட்டி கதை..” “ஒஹ்… அதுலயா?..” ஆச்சர்யமாய் கேட்டாள் சஞ்சனா.. “என்ன ஒஹ்..?.. அந்த புஸ்தகத்துக்கு என்ன குறைச்சல்? படிக்கிற விஷயம் எங்கிருந்து வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனா சொல்ல வேண்டிய இடத்துல நச்சுனு சொல்லணும்.. கரெக்டா சஞ்சு?….”

ஏற்கனவே ஒருமுறை கார்த்திக் அவளை சஞ்சு என்றழைத்தது நியாபகம் வந்தது.. அவன் அவளை அப்படி அழைப்பதை உள்ளுக்குள் மிகவும் ரசித்தாள் சஞ்சனா.. “ஹலோ.. மேடம்.. உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்… நான் சொன்னது கரெக்ட் தான..?..” “ஹ்ம்ம் கரெக்ட் தான்..” அவன் சொன்னது என்னவென்று கூட கவனிக்காமல் அவன் கண்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே பதிலளித்தாள் சஞ்சனா.. இருவரும் பேசிக்கொண்டே நடக்கையில் அலுவலகத்தில் இருந்து சஞ்சனாவின் வீட்டை அடைந்த தூரத்தை அவர்களுடைய கால்கள் அறியவில்லை.. “ஃபர்ஸ்ட் டைம்….” என்று சொல்லி கார்த்திக்கைப் பார்த்து அதிக மகிழ்ச்சியுடன் “வெல்கம் டூ மை லிட்டில் ஸ்வீட் ஹோம்..” என்று தன் இரு கைகளையும் வாசப்படியை நோக்கி காண்பித்து மனம் முழுக்க சந்தோஷத்துடன் சிரித்தபடி ஒரு எக்சைட்மென்டில் கார்த்தியை உள்ளே வரவேற்றாள் சஞ்சனா..

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.