இடை அழகி மேடம் சங்கீதா 14 83

லண்டனில் இருந்து நம் தாயகத்துக்கு வருவோம்.. இங்கே நம் வாத்தும் சஞ்சனாவும் என்ன செய்கிறார்களென்று பாப்போம்..) காலையில் எழுந்த போதிருந்தே கார்த்திக்கின் மனமும் உடலும் பரபரப்பாய் இயங்கியது. மனதில் ஓடிய இளைய ராஜாவின் பாடலை ஹம் செய்து கொண்டே தன் லூசான உடைகளை அணிந்து கண்ணாடியில் பெருமை பொங்க தன் அழகை ரசித்தான். வெளியில் கார் ஹாரன் சத்தம் ஒலிக்க, அவசரமாய் கண்ணாடியை பார்த்து தலை வாரிக்கொண்டு, முகத்தை அங்கும் இங்குமாய் திருப்பிப் பார்த்துவிட்டு கடைசியாய் தன்னைப் பார்த்து தானே கண் அடித்து “செமையா இருக்க டா மாப்ள..” என்று கார்த்திக் தன்னைப் பார்த்து சொல்லிக்கொள்ளும் போது ஒரு வேலை அந்த கண்ணாடிக்கு உயிர் இருந்திருந்தால் தன் கண்களை இறுக்க மூடி கூச்சப்படிருக்கும்..!! தான் அணிந்திருக்கும் பான்டுக்கு பெல்ட் போட்டு, ஷூவுக்குள் இரு கால்களையும் ஏனோ தானோ என்று சொருகிக்கொண்டு அவசரமாய் வண்டியில் ஏறினான்.. கார்த்திக் காரில் ஏறியபோது “பொன் மாலைப் பொழுது… இது ஒரு பொன் மாலைப் பொழுது.. வான மகள் நானுகிறாள், வேறு உடை பூணுகிறாள்..” – என்று IOFI Benz வண்டியில் உள்ள ஸ்பீக்கர்களில் நிழல்கள் பாட்டு ரம்யமாக ஒலிக்க, அதற்கு ஏற்ப விரல்களால் தாளம் போட்டுக்கொண்டே ஒரு புது உற்சாகத்துடன் சஞ்சனாவைப் பார்க்க சென்றுகொண்டிருந்தான் கார்த்திக். இன்று கார்த்திக் இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்கு காரணம் அவன் எனிமி ஊரில் இல்லாத போது சஞ்சனாவுடன் அதிக நேரம் நிம்மதியாய் கடல போடலாமே என்ற சந்தோஷம்தான் வேறென்ன. “ஏன் தம்பி, கேக்குறேன்னு தப்பா நினைக்க கூடாது.. இந்த சைனீஸ் படங்கள்ல வரா மாதிரி லூசா பான்ட் ஷர்ட் போடுறீங்களே? இது உங்க ஊருல ஃபேஷனா?.. இல்ல நீங்க ஏதாவது ப்ரூஸ்லி ரசிகரா? ஹா ஹா..” – ட்ரைவர் தாத்தா கார்த்திக்கை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்து கிண்டலாய் கேள்வி எழுப்பினார்.. “நீங்க கூட அப்பப்போ சஞ்சனா கிட்ட மொக்கையா கடல போடுறீங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. அது உங்க வாலிப வயசுக்கேத்த கோளாறா Mr.டாம் க்ரூஸ்?.. ஏன் நீங்க முறைப்படி உங்க மனைவி கிட்ட சொல்லி அவளை பொண்ணு கேக்க கூடாது?.. பாவம் அந்த புள்ளையும் தனியாதான சுத்திட்டு இருக்கு.. என்ன நான் சொல்லுறது கரெக்ட் தான..?” – என்று டிவியில் காம்பியரிங் பண்ணும் பெண்களைப் போல கழுத்தை ஆட்டி ஆட்டி நக்கலாய் பேசினான் கார்த்திக். தாத்தா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கார்த்திக்கைப் பார்த்து முழிக்க.. சிக்னல் போட்டுடாங்க, சீக்கிரம் வண்டி எடுங்க.. ஹ்ம்ம் ரைட் ரைட்.. என்றான் கார்த்திக்.. “அந்த பொன்னே பரவாயில்ல போல இருக்கே..” என்று முனு முனுத்துக்கொண்டார் தாத்தா.. ஆடிஷனுக்கு காத்திருக்கும் அறைகுறை மாடர்ன் உடை இளம் பெண்களை பார்த்து ரசித்தபடி IOFI வளாகத்துக்குள் நுழைந்தான் கார்த்திக்.. கொய்யால நம்ம தூக்கத்தை கெடுக்க ஒவ்வொன்னும் தனித்தனியா வித விதமா வளத்து உட்டுருக்கானுக என்று அந்த பெண்களை பெற்ற அப்பன் மார்களை திட்டிக்கொண்டே சஞ்சனா இருக்கும் மீட்டிங் ஹாலுக்கு சென்றான். வேர் ஆர் யு என்ற இவனின் எஸ்.எம்.எஸ் க்கு “நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், நீ கொஞ்சம் வெயிட் பண்ணு என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தாள் சஞ்சனா.. அதைப் பார்த்து விட்டு மீட்டிங் நடக்கும் கண்ணாடி அறையின் வெளியே அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் கார்த்திக்.. அந்த அறையினுள், ஒரு பெரிய வெள்ளை போர்டில் உலக அளவிலான ரிசஷன் (Recession) என்ற தலைப்பு தெரிந்தது, கூடவே சுமார் இருவதில் இருந்து இருவத்தைந்து வயதுடைய ஸ்டைலீஷான பெண்களும் முன் புறம் உள்ள சொட்டையை சற்றே ஸ்பைக் ஸ்டைல் என்ற பெயருடன் மறைத்து நாகரீகமாக ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கும் ஆண்களையும் பார்த்து தனக்குத் தானே சிரித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அந்த பெண்களில் சஞ்சனா வித்தியாசமாக ஜொலிப்பதை அவனால் உணர முடிந்தது. ஒரு சில நிமிடங்களில் சஞ்சனா கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு அனைவரையும் நோக்கி எதோ சொல்ல, ஒவ்வொருவரும் சூடான விவாதத்தில் இறங்கினார்கள்.

சில நிமிடங்கள் கழித்து நான்கு இளைஞர்கள் வேறு அறைக்கு சென்றார்கள். அமர்ந்திருந்த மீதி இளசுகளில் கூர்மையான கண்களும், நீளமான வழு வழு முடியும் கொண்டு திமிரான பார்வையில் ஒரு பெண் சஞ்சனாவிடம் எதோ வாக்குவாதம் நடத்துவது தெரிந்தது… அப்போது சஞ்சனா எதேர்ச்சையாக திரும்பவும் அவளைப் பார்த்து “வந்துட்டேன்” என்று சிக்னல் குடுத்தான் கார்த்திக்.. “ஹேய் கார்த்தி.. அவ்வளோ சீக்கிரம் வந்துட்ட?.. என்ன பண்ற இங்க?..” – உள்ளே இருப்பவர்களிடம் எக்ஸ்யூஸ் கேட்டு கார்திக்கை பார்த்தவுடன் எதோ ஒரு பரவசத்தில் வெளியே வந்து பேசினாள் சஞ்சனா..

“ரூம்ல போர் அடிச்சுது, கூடவே நீயும் இன்னிக்கி உனக்கு கொஞ்சம் வேலை கம்மின்னு சொல்லி இருந்த இல்ல, அதான் என்ன பண்ணுறதுன்னு தெரியாம உன் பாய் ஃபிரன்டுக்கு ஃபோன் பண்ணி என்னை இங்க கூட்டிட்டு வர சொன்னேன்..” என்றான் நக்கலாக.. அவன் பாய் ஃபிரன்டு என்று சொன்னவுடன் எதோ சிந்தனையில் சஞ்சனா லேசாக குழம்பினாள்.. பின் அவனுக்கு பின்னால் நிற்கும் டிரைவர் தாத்தாவைப் பார்த்துவிட்டு மென்மையாக சிரித்தாள்.. “அடங்கவே மாட்ட டா நீ..” – என்னதான் சிரித்த முகமாக பேசினாலும் அவள் முகத்தில் ஒரு டென்ஷன் இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்.. “ஆமா என்ன நடக்குது உள்ள.. சூடா வாக்கு வாதம் நடக்குறா மாதிரி தெரியுது.. ஏதாவது பிரச்சினையா?” “ச்சே ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. உள்ள இருக்குறவங்க பெரிய பெரிய ஃபேஷன் ஸ்கூல்ல இருந்து IOFI ல சேருரதுக்கு இன்டெர்வியூக்கு வந்திருக்காங்க.. ராகவ் எப்போவுமே இந்த மாதிரி புதுசா வர்றவங்களுக்கு பேசுற திறமை எப்படி இருக்குன்னு பார்க்க குரூப் டிஸ்கஷன் வெக்க சொல்லுவான்.. அவன பொறுத்த வரைக்கும் என்னதான் திறமை இருந்தாலும் வாய் ரொம்ப முக்கியம்னு சொல்லுவான் அதுக்குதான் இந்த செஷன்.. “ஹ்ம்ம்.. வாயிலேயே வடசுட்டு CEO ஆனவனாச்சே..!! இல்லன்னா அந்த எனிமி எப்படி இந்த பொசிஷன்ல இருக்க முடியும்..?” “ஹஹா.. நல்லா பேசுறடா லூசு கிறுக்கா, கொஞ்சம் வெயிட் பண்ணு உள்ள கொஞ்சம் டிஸ்கஷன் முடிச்சிட்டு வந்துடுறேன்..” – என்று சஞ்சனா சிரிக்கையில் அவளது சிரிப்பை அப்பட்டமாக அவளுக்கு தெரியும் விதம் வாய் அகல விரிய பார்த்து ரசித்தான் கார்த்திக். “டேய் வாத்து.. மவுத் க்ளோஸ் பண்ணு.. ஈ உள்ள போய்ட போவுது.. ஹஹா..” – என்று கார்த்திக் தன்னைப் பார்த்து ஊத்துவதை உணர்ந்து நக்கலடித்தாள்.. “ச்சே..

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.