இடை அழகி மேடம் சங்கீதா 14 83

கூடவே கேரன் அவளது ஹான்ட் பாக் ஜிப் சற்று திறந்து வைத்திருந்தாள்…. வேண்டுமென்றே காட்டுகிறேன் என்ற அர்த்தத்தில் இல்லாமல் தான் ஒரு அஜாக்ரதையான பெண் என்பதுபோல தன் உடல்மொழி அவனுக்கு புரியும்விதம் நடந்துகொண்டாள்.. பாதியாய் திறந்த அவளது ஹான்ட் பாகினுள் கட்டு கட்டாக பணம் இருப்பது அவன் கண்ணுக்கு தெரியும் விதம் அவனருகில் வைத்திருந்தாள்…. “ஹாய்ய்..” – வசியமான குரலில் பேசினாள் கேரன்.. “ஹ்ம்ம்..” – சற்று பயத்தில் இறுக்கமாக பேசினான் சம்பத்.. “Are you from India?…” – நேராக பார்த்து மார்பழகு தெரியும்விதம் பேசினாள்.. “yes..” என்று சொல்லி சற்று அவளைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்.. “My hubby is too bad.. he is an indian too..” என்றாள்..

“oh..” என்றான்.. “you know something?… but still I love indians.. they are good in everything..” “nice..” “oh,, my goodness.. pls have an eye on my bag I will get a candy and come quickly..” – என்று சொல்லி அருகில் உள்ள கடைக்கு சென்றாள் கேரன்.. சம்பத் அவளுடைய ஹான்ட் பாக் மீது ஒரு கண் வைத்திருந்தான், அந்த பாக் மீது கை வைக்க ஆரம்பத்தில் ரொம்பவே தயங்கினான்.. பின் சில நிமிடங்கள் கடந்தும் அவள் திரும்பி வராமல் இருப்பதைப் பார்த்து மெதுவாக அவளது ஹான்ட் பாக் திறந்து எவ்வளவு தேறுமென்று எண்ணினான்.. Candy shop வரை சென்று வருகிறேன் என்று சென்றவளை ஒரு முறை எட்டிப் பார்த்தான்.. இன்னும் அங்கேயே தான் இருந்தாள். அந்த கடையில் பரபரப்பாக எதோ பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தாள்.. அப்போது சற்று உஷாராக, மீண்டும் விட்ட இடத்திலிருந்து எவ்வளவு இருக்கிறதென்று அந்த பணத்தை எண்ணினான்.. அப்போது அந்த பணக்கட்டினுள் ஒரு சின்ன காகிதம் இருந்தது.. அதைப் படித்துப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.. அதில்: “இந்த பணம் உனக்கு தான்.. ஆனா இதை எடுத்துக்குறதுக்கு முன்னாடி துரை உனக்கு ஒரு விஷயம் சொல்ல சொல்லிருக்கான்…. அதை தெரிஞ்சிக்க அந்த பாக் எடுத்துட்டு சைலண்டா நான் நிக்குற இடத்துக்கு வா..” என்று எழுதி இருந்தது.. அதைப் படித்தவுடன் அவனுக்குள் ஒரு படபடப்பு ஏற்பட்டது உடனே அவளை பார்க்க முயற்சித்தான்.. ஆனால் அந்த Candy shop அருகே அவளை காணவில்லை.. இருக்கும் குளுரிலும் அவனுக்கு இப்போது வியர்க்க தொடங்கியது.. மீண்டும் அவள் எங்கே இருக்கிறாள் என்று அங்கும் இங்கும் திரும்பி திரும்பி பார்த்தான்.. ஆனால் அவன் பார்வைக்கு அவள் தென்படவில்லை.. அவன் இருக்கும் இடத்தில் இருந்து அந்த candy shop இரண்டு நிமிடமாவது நடந்து செல்ல வேண்டுமென்ற தூரத்தில் இருந்தது.. அப்போது அவன் சூட்கேசுடன் அவளது ஹான்ட் பாகையும் எடுத்து மெதுவாக கூட்டத்துடன் கூட்டமாக நடக்க துவங்கினான்.. அவன் கிட்ட தட்ட மெதுவாக நடந்து அந்த கடை இருக்குமிடம் வறை சென்று விட்டான்.. அவள் எங்கே இருக்கிறாள் என்று அங்கே தேடுகையில் அவனுக்கு பின்னால் இருந்து உரத்த குரலில் ஒரு பெண் “That bastard has taken my hand bag and running away.. please catch him.. please.. he is stealing my bag..somebody please catch him please” என்று அலரி கத்துவது அவன் காதுகளுக்கு கேட்டு அங்கிருந்து ஓடுவதற்குள் டூரிஸ்ட் செக்யூரிட்டி ஆட்கள் அவனை மடக்கி பிடித்தார்கள்.. அப்போது ராகவ் அங்கே என்ன நடந்ததென்று தெரியாதது போல் வந்தான்.. அங்கே உள்ள செக்யூரிட்டி ஆபீசர்கள் இடையே சில நிமிடங்கள் தனியே சென்று சம்பத்தின் IOFI duplicate Identity card காண்பித்து தானும் யார் என்பதை விளக்கி, கேரன் அவனிடம் விளையாட்டாக எதோ செய்த விஷயம் என்றும், அவர்கள் அனைவரும் IOFI ஊழியர்கள்தான் என்று விளக்கி அங்கே சம்பத்தை அவர்களிடமிருந்து விடுவித்து அவனை தனியாக அழைத்து வந்தான்..

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.