இடை அழகி மேடம் சங்கீதா 14 83

ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே.. ந…நான் எதோ உன்ன பார்த்து ஜொள்ளு விடுறேன்னு தப்பா நினைச்சிகாத..” என்று சமாளித்தான்.. “நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே..” – ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தாள் சஞ்சனா…. “நீ சொல்லலதான்.. இருந்தாலும் அப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்துட கூடாதுன்னு முன் கூட்டியே நான் உனக்கு சொல்லிட்டேன்.” – என்னதான் கார்த்திக் உதடுகள் மெனக்கெட்டு பேசினாலும் அவன் கண்கள் சொல்வது என்னவென்று புரிந்து மெளனமாக அவனை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றாள் சஞ்சனா.. சில நிமிடங்கள் கழித்து மூடிய கண்ணாடி அறையை தாண்டியும் சத்தம் சற்று வெளியே கேக்கும்விதம் இருந்தது கார்த்திக்கின் காதுகளுக்கு. “எக்ஸ்கியூஸ் மீ சஞ்சனா.. எதாவது பிரச்சினையா?” – கதவை லேசாக திறந்து கேட்டான் கார்த்திக்.. “ஒன்னும் இல்ல கார்த்திக் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணு.. நான் வரேன்..” – என்று சஞ்சனா சொல்வதைக் கேட்டு கார்த்திக் கதவை சாத்துவதற்குள் மீண்டும் அந்த பெண் சற்று குரலை உயர்த்தினாள்.. அதைக் கேட்ட பிறகு அங்கிருந்து செல்ல மனமில்லாமல் உரிமையுடன் மீண்டும் அந்த அறையின் உள்ளேயே வந்து சஞ்சனாவிடம் “என்ன பிரச்சினை சஞ்சனா” என்றான்.. கார்த்திக்கின் அருகே வந்து மெதுவாக பேசினால் சஞ்சனா.. “நடந்த குரூப் டிஸ்கஷன்ல இவங்கள நான் ரிஜக்ட் பண்ணிட்டேன்.. அந்த வெறுப்புல உனக்கு மட்டும் ரிசஷன் டாபிக் பத்தி என்ன பேச தெரியும்?… சும்மா கண் துடைப்புக்கு குரூப் டிஸ்கஷன்னு ஒன்னுத்த வெச்சி யார் யாரை ஏற்கனவே செலக்ட் பண்ணணுமோ அவங்கள மட்டும் செலக்ட் பண்ணிட்டு இந்த ரவுண்ட்ல எங்கள எலிமினேட் பண்ணுறதுதான உங்க பிளான்.. அப்படி.. இப்படின்னு அவ பாட்டுக்கு இஷ்டத்துக்கு கத்திட்டே போறா.. நான் இதுக்கெல்லாம் பதில் பேசினா, IOFI பேருதான் கெடும்….” “அதுக்காக நீ எதுவும் பேச கூடாதுன்னு அர்த்தம் இல்லையே?” – அந்த பெண்ணை நக்கலாக பார்த்தபடி கார்த்திக் சஞ்சனாவிடம் இதை சொல்ல.. “ஹலோ.. மிஸ்டர்.. வாட் இஸ் யுவர் ப்ராப்லம்?….” என்று கார்த்திக்கையும் நோக்கி பாய்ந்தாள் அந்த பெண்…. “பொறுமை.. பொறுமை.. மிஸ்.மாடர்ன் நீலாம்பரி..” – மீண்டும் அதே நக்கல் சிரிப்புடன் பார்த்தான் கார்த்திக்.. “வாட் தி ஹெல் யூ திங்க் ஆஃப் யூவர்செல்ஃப்?.. ஹொவ் டேர் யூ வில் கால் மீ லைக் தட்?….” – இன்னும் சீறினாள்.. “ஷ்ஷ்ஷ்.. கார்த்திக்.. முட்டாள் மாதிரி அவ கூட கூட பேசாத.. கொஞ்சம் வெளியே இரு.. இவங்கெல்லாம் இன்னைக்கி ஒரு நாள்தான் உள்ளே இருக்க போறாங்க.. இவங்க கிட்டெல்லாம் பேச்சு வெச்சிகிட்டா வெளியே போயி பேர கேடுப்பாங்க.. ஏன் புரிஞ்சிக்காம அவள வம்பிழுக்குற?.. ராகவ் ஊருல இல்லாத வரைக்கும் நான்தான் டா எல்லாத்தையும் இங்க பார்த்துக்கணும்.. அந்த பொறுப்பு எனக்கு இருக்கு.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ..” – கார்த்திக்கின் கைகளை மெதுவாய் பிடித்து சொன்னால் சஞ்சனா..

“ஹ்ம்ம்.. அந்த பருப்பு ஊற சுத்திகிட்டு உனக்கு பொறுப்பு குடுத்துட்டு போவான்.. அப்போ இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்தா எனக்கு வெறுப்பு மட்டும் வந்துட கூடாது… இல்ல?..” சற்று சுதாரித்துக்கொண்டு அந்த பெண்ணை நோக்கி “மிஸ்.. உங்களுக்கு அப்ஜக்ஷன் இல்லன்னா அதே ரிசஷன் பத்தி நான் சுருக்கமா சொல்லி காட்டவா?” என்றான்.. அந்த பெண் எதுவும் பேசாமல் சலிப்பு கலந்த பார்வையுடன் கார்த்திக் சஞ்சனா இருவரையும் பார்த்தாள்.. அப்போது கார்த்திக் தொடர்ந்தான்.. “ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கு ஒரு பணக்காரன் தங்குறதுக்கு வந்திருக்கான்.. அப்போ அவன் பர்ஸ்ல இருந்து ஒரு 100 டாலர் பணம் கீழ விழுந்திருக்கு…“ “அந்த ஹோட்டல் மேனேஜர் ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு சொல்லிட்டு அவன் டிரைவர் கிட்ட வெச்சி இருக்குற 100 டாலர் கடனை குடுத்துடுறான்..” “அதே 100 டாலரை அந்த டிரைவர் ஒரு விலை மாது கிட்ட குடுத்து அவன் கடனை செட்டில் பண்ணிட்டான்..” “அந்த விலை மாது அதே 100 டாலரை ஒரு ப்ரோவிஷன் ஷாப்ல குடுத்து அந்த வாரத்துக்கு தேவையான வீட்டு சாமான்களை வாங்கிட்டா.” “அந்த ப்ரோவிஷன் ஷாப் முதலாளி அவருடைய சப்ளையர் கிட்ட அதே 100 டாலரை குடுத்து அவன் கடன் தீர்த்துட்டான்…” “அந்த சப்ளையர் கடைசியா அந்த ஹோட்டல் மேனேஜர் கிட்ட அதே 100 டாலர் குடுத்து அவர் கிட்ட இருந்த கடனை தீர்த்துட்டான்.” “இப்போ அந்த பணக்காரன் ஹோட்டலுக்கு இரவு நேரம் உள்ள வரும்போது அந்த மேனேஜர் “இது உங்க காசுதான்” னு சொல்லி திருப்பி குடுத்துடுறான்.” “ஒரு சில மணி நேரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் கடன் வெச்சி இருந்த பல பேரோட பண பிரச்சினை தீர்ந்துடுச்சி.. ஆனா நடந்ததெல்லாம் என்னென்னா ஒரு 100 டாலர் அந்த பணக்காரன் பர்ஸ்ல இருந்து வெளியேறி மேனேஜர், டிரைவர், விலை மாது, ப்ரோவிஷன் ஷாப் முதலாளி, சப்ளையர்னு சுத்தி கடைசியா அந்த மேனேஜர் கைக்கு வந்து அந்த பணக்காரன் பர்ஸ் உள்ளயே போய் அம்சமா உட்கார்ந்துடுச்சி..”

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.