இடை அழகி மேடம் சங்கீதா 14 83

“இதுல நடுவுல யாராவது ஒருத்தர் கிட்ட அந்த பணம் அடுத்த கட்டத்துக்கு போகாம இருந்திருந்தா அங்க பண வீக்கம் எட்டி பார்த்திருக்கும்.. கரெக்டா?.. என்று சொல்லிவிட்டு சஞ்சனாவை பார்த்து கண் அடித்தான் கார்த்திக்..” “அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவனையே கவனித்தாள் அந்த பெண்..” “ஆர் யூ கண்வின்ஸ்ட் மிஸ்..?” – என்று அந்த பெண்னை பார்த்து சிரித்தபடி சொல்லிவிட்டு சஞ்சனாவின் காதுகளில் மெதுவாக “யோசிக்குறாங்கலாம்….ஹிஹி..” என்று அந்த பெண் எதிரிலேயே நக்கலாக சிரித்துவிட்டு வெளியே சென்று அமர்ந்தான் கார்த்திக்.. அவன் முகம் கூட பார்க்காமல் தனது ஹான்ட் பாக் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பெண்ணிடம் “இவளுக்கு பேச தெரியுமான்னு கேட்டா எவனோ ஒருத்தன் வந்து பேசறான்….ச்சே” “ஹேய் யூ?….” – என்று சஞ்சனாவை நோக்கி விடை பெறுவதற்கு முன் எதோ விறைப்பாக சொல்ல அருகில் வந்தாள் அந்த பெண்.. “மை நேம் இஸ் சஞ்சனா..” – பெயர் தெரியாதவளுக்கு சிறிதும் பின் வாங்காமல் நேருக்கு நேர் அவள் கண்களைப் பார்த்து தன் பேரை சொன்னாள் சஞ்சனா…. “என்ன நெனச்சிட்டு இருக்க?.. எங்கள ரிஜக்ட் பண்ணதுக்கு உன்னதான பேசி காமிக்க சொன்னோம்…? உன்னால முடியலைனா உனக்கும் நல்ல கம்யூனிகேஷன் திறமை இல்லன்னுதான் அர்த்தம்… ஆனா நீ உள்ள இருக்க.. நாங்க இல்ல.. அவ்வளோதான் வித்யாசம்..” – என்று அந்த பெண் சற்று உறும, அவள் அருகில் அவளைப்போலவே டென்ஷனாக இருக்கும் மற்றொரு ஜீவன் “விடுடி… அவ ஆளா இருப்பான்.. அதான் திடீர்னு உள்ள பூந்து பேசிட்டு போறான்… ஃபேஷன் கம்பெனில ஜாயின் பண்றதுக்கு IT கம்பெனி மாதிரி குரூப் டிஸ்கஷன் வெக்குறாங்க.. ச்சே” என்று சஞ்சனா காது பட அவர்கள் முணுமுணுத்துக்கொண்டே வெளியேறும்போது சஞ்சனாவின் இயல்புக்கு அவர்கள் சொன்ன வார்த்தைகளால் இயற்கையாக கோவம்தான் வர வேண்டும்.. மாறாக “அவ ஆளா இருப்பான்” என்று மற்றொரு பெண் கார்த்திக்கை குறி வைத்து சொன்னது அவள் மனதுக்குள் எழுந்த கோவத்தையெல்லாம் அணைத்துவிட்டு ஒரு இனம் புரியா சந்தோஷத்தை எட்டிப் பார்க்க வைத்தது…. “ஹலோ..” – கதவை மீண்டும் மெதுவாக திறந்து அந்த இரு ஓய்யாரிகளும் போய்டாங்களா என்று எட்டிப் பார்த்தான் கார்த்திக்.. “ஆங்.. சொல்லுடா..” – கார்த்திக் உள்ளே வந்து சஞ்சனாவை சற்று உலுக்க, எதோ ஒரு இன்ப மயக்கத்தில் இருந்தவள் சுதாரித்துக்கொண்டாள்…. “என்ன ஆச்சு? அப்படியே நிக்குற? திரும்பி எதாவது சொன்னாளா?.. கூப்டு கலாய்கவா?..” “ஹேய்.. ஒன்னும் சொல்லல டா நீ பேசாம வா..” – உதடில் ஒரு மெல்லிய சிரிப்புடன் சொன்னாள் சஞ்சனா.. இருவரும் IOFI வளாகத்தில் சஞ்சனாவின் வீட்டை நோக்கி நெடும் பாதையில் எதிர் திசையில் ஜில்லென்ற காற்றடிக்க மரங்கள் தரும் நிழலில் நடந்தார்கள்…. அப்போது அவனை ஒரு நிமிடம் உற்று கவனித்தவள் “கார்த்தி, ஒரு நிமிஷம் இரு..” என்று சொல்லிவிட்டு தன் காபினுக்கு சென்றாள்… சற்று நேரம் கழித்து மீண்டும் தனது முதுகில் மாட்டிக்கொள்ளும் பாக் உள்ளே ஏதோ ஒன்றை வைத்து ஜிப் போட்டு மூடியபடி நடந்து வந்தாள்… அடிக்கும் காத்துக்கு முடிகளை தன் கைகளால் கோதிவிட்டு காலரை சற்று கேஷுவலாக தூக்கி விட்டபடி அவள் வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் கார்த்திக்கிடம் ரொம்பவும் பெரிய அளவிலான பர்சனாலிட்டி இல்லையென்றாலும் பார்த்தவுடன் பளிச்சென தென்படும் ஒரு வசீகரத்தை ரசிக்க தவறவில்லை சஞ்சனா.. “என்ன ஆச்சு? ஏதாவது மறந்து வெச்சிட்டு வந்துட்டியா?..” என்றான். “அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. வா நடக்கலாம்..” – சஞ்சனாவின் முகத்திலும் ஒரு சந்தோஷம் தெரிவதை கவனிக்க தவறவில்லை கார்த்திக்.. “லாஸ்ட் ஒரு மாசமா நானும் உன்ன வந்து பார்க்கணும் பார்க்கணும்னு நினைப்பேன்.. ஆனா ஃபோன்ல மட்டும்தான் டெய்லி பேச முடிஞ்சிது….” என்றான்.. “ஹ்ம்ம்.. நானும் இந்த ஒரு மாசமா ராகவ் செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் செய்யுறதால இங்க அங்க கூட நகர முடியல டா.. செப்பா அவன் வேலைங்க இருக்கே…..” லேசாக சலித்துக்கொண்டு மேலும் தொடர்ந்தாள்.. “நமக்குன்னு ஒரு வேலை குடுத்து முடிச்சிட்டு போக சொல்லும்போது நிம்மதியா காலைல வந்துட்டு சாயந்திரம் ஜூட் விட்டுடலாம்.. ஆனா இப்படி மத்தவங்கள வெச்சி மேய்ச்சி வேலை வாங்குறதிருக்கே…. அவன்தான் டா அதுக்கு லாயிக்கி.. என்ன சொல்லுற?” என்று சஞ்சனா கார்த்திக்கை பார்த்து சொல்லும்போது.. “இன்னைக்கி காத்து நல்லா அடிக்குதில்ல?… அவ்வளோவா வெயிலும் இல்ல.. நல்ல கிளைமேட்..” – என்று சம்மந்தமே இல்லாமல் அவன் பதில் சொல்லும்போது, நம்மள தவிர வேறெது பற்றியும் பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று அவன் சொல்லாமல் சொல்வதை புரிந்துகொண்டு அவனைப் பார்த்து மெலிதாய் ஒரு புன்னகை தந்தால் சஞ்சனா.. இப்போது பேச்சை மாற்றினால்.. “நான் உன்ன என்னமோ நினைச்சேன் டா.. ஆனா இன்னிக்கி நீ சொன்ன அந்த ரிசஷன் கதை நல்லா இருந்துச்சி.. எதாவது எகனாமிக்ஸ் புக் படிச்சியா?” “ச்சே ச்சே..

2 Comments

  1. Next post please. Very superb…

  2. Next please 15

Comments are closed.