அதிர்ஷ்டகாரண் – Part 2 145

வித்தியாசமான அந்த சத்தம் கேட்டு திடுக்கிட்ட நாங்கள் இருவரும் சட்டென எழுந்தோம்.

நான் ஓடிப்போய் டியூப் லைட்டை ஆன் செய்தேன். அதற்குள் அந்த சத்தம் நின்று அத்தை மூச்சு விட திணறுவது தெரிந்தது.

அவள் அத்தையின் அருகே சென்று “அம்மா, அம்மா” என்று கூப்பிட்டாள்.

நான் வேகமாக வெளியே சென்று டியூட்டி டாக்டர் யாரையாவது கூட்டிவரலாம் என்று பார்த்தால், ஒருவர் கூட அந்த வார்டில் இல்லை

சேரில் உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக்கொண்டிருந்த நர்ஸை எழுப்பி “பேஷண்ட் மூச்சு விட திணறுராங்க… கொஞ்சம் வாங்க”ன்னு ரூமுக்கு கூட்டிக்கொண்டு வந்தேன்.

நர்ஸ் வந்து பார்க்கும் போது, திணறல் இன்னும் கொஞ்சம் அதிகமானது போல் தோண்றியது.

அம்மாவின் நிலையைப் பார்த்து கீதா அழ ஆரம்பித்திருந்தாள்.

வேகமாக வெளியே சென்ற நர்ஸ், கொஞ்ச நேரத்தில் எங்கேயோ படுத்து தூங்கிக்கொண்டிருந்த டாக்டரை எழுப்பி கூட்டிக்கொண்டு வந்திருந்தாள்.

டாக்டர் வந்து உடனடியாக ஆக்ஸிஜன் வைக்க ஏற்பாடு செய்ய, படிப்படியாக அத்தையின் சுவாசம் நார்மல் நிலைக்கு வந்தது போல் தோன்றியது.

அடுத்து பெரிய டாக்டருக்கு போன் செய்ய, அவரும் வந்து பார்த்துவிட்டு, “ஒன்றும் கவலைப்பட வேண்டாம், சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு “எதற்கும் ICU வில் காலை வரை இருக்கட்டும்” என்று சொல்லி ஏற்பாடு செய்து விட்டு சென்றார்.

ICU வில் அட்மிட் செய்ய வேண்டும்” என்று டாக்டர் சொன்னதுமே, கீதா மிகவும் பயந்து போய் என் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். “அண்ணா, அம்மாவுக்கு ஒன்றும் ஆகிவிடாதே?” என்று பதறினாள்.

“பயப்படாதே கீதா, தைரியாமா இரு… ஒன்னும் ஆகாது” என்று சொன்னாலும் எனக்கும் உள்ளூர கவலையாகத்தான் இருந்தது.

அப்பாவிற்கு போன் செய்து விசயத்தை சொன்னேன்.

அப்பா, சுரேஷையும் சகுந்தலாவையும் கூட்டிக்கொண்டு உடனே வந்து சேர, நாங்கள் அனைவரும் ICU வாசலிலேயே தேவுடுகாக்க, அன்றைய தினம் எங்களுக்கு சிவராத்திரியாக கழிந்தது.