அதிர்ஷ்டகாரண் – Part 2 145

உடனே நான், “ஏய் கதை விடாத… நான் எங்க குறட்டை விட்டு தூங்கினேன்? நானும் முழுச்சுகிட்டேதான் இந்த பென்சில படுத்துக்கிட்டு இருந்தேன்”.. என்று அவளை அடக்கினேன்.
சகுந்தலா, “சரி சரி ரெண்டு பேரும் இப்ப சண்டை போட்டுக்க வேண்டாம்… இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் ராத்திரி வீட்டுக்கு போய் நல்லா தூங்குங்க.. நான் அம்மாவுக்கு துணையா இருக்கிறேன்”னு சொன்னதும் நாங்க ரெண்டு பேரும் உடனே ஒரே குரல்ல…” ஐயையோ நாங்க அப்படி சொல்லலை.. நாங்களே அம்மாவுக்கு துணையா இருக்கோம்”ன்னு சொன்னோம்.

“அக்கா, நான் இத ஒரு கஷ்டமா நினைக்கலை… அம்மாவுக்கு பணிவிடை செய்ற பாக்கியமாதான் நினைக்கிறேன்.. சும்மா விளையாட்டுக்குத்தான் அப்படி சொன்னேன்”னு கீதா சொல்லவும்.. சகுந்தலாவும் “எனக்கும் தெரியும் கீதா”ன்னு சொல்லி அவளை இழுத்து அணைத்துக்கொண்டாள்.

“சரி பசியோட இருப்பீங்க, சீக்கிரமா வந்து சாப்பிடுங்கம்மா”ன்னு சகுந்தலாவை கையை பிடித்து உட்காரவச்சு, சாப்பாடு பரிமாற ஆரம்பித்தேன். தாயன்போடு அவளுக்கு நான் சாப்பாடு போடறதை கீதா ரசித்து பார்த்துகொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும், “அக்கா, உண்மையிலேயே இத்தனை பாசக்கார பிள்ளை கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கனும்”னு சொல்ல, “நான் ரொம்ப புகழாத கீதா எனக்கு கூச்சமா இருக்கு”ன்னு சொல்லி சிரித்தேன்.

தங்கை பேசியதை கேட்டு முகம் நிறைய பெருமையோடும், கண்களில் நன்றியோடும் என்னை பார்த்த சகுந்தலா, தன் தங்கையை நோக்கி, “அடியே கண்ணு போட்றாதடி”ன்னு சொல்லி சிரித்தாள்.

சாப்பிட்டு எழுந்த சகுந்தலா, தங்கையின் அருகில் சென்று உக்கார்ந்து கொண்டவள், “உன்னை மாதிரி பாசக்கார தங்கை கிடைக்கவும் நான் கொடுத்துதான் வச்சிருக்கேன்”னு சொல்லி அவளை தன் மடி மீது சாய்த்து கொண்டு நீ அப்படியே படுத்து தூங்கு” என்று அவளின் முதுகை தட்டி கொடுக்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்தில் கீதா தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தாள். அதை பார்க்கும் போது எனக்கும் சற்று பாவமாக இருந்தது..
அவளையே பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து “என்ன யோசனை சுந்தர்?”ன்னு சகுந்தலா கேட்டாள்.

“ஒன்னும் இல்லேம்மா… உங்க சாப்பாட நான் மட்டும் கொண்டு வந்து கொடுத்துட்டு, கீதா தூக்கத்த டிஸ்டர்ப் பண்ணாம சாயங்காலம் போய் கூட்டிட்டு வந்திருக்கலாமோன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்”னு சொன்னேன்.

“சரி விடு சுந்தர், வீட்ல தனியா இருக்கிறதுக்கு பதில் இவ இப்படி நம்ம கூட சேர்ந்து இருக்கிறதும் நல்லதுதான்”னு சொல்லும் போதே நர்ஸுகள் புடை சூழ டாக்டர் அம்மா உள்ளேவர, தங்கையின் தூக்கம் கலையாமல் அவளின் தலையை மெதுவாக தலையனையில் வைத்து சகுந்தலா எழுந்து நின்றாள்.

டாக்டர் பரிசோதித்து முடியும் வரை வெளியே நிற்போம் என்று ரூமை விட்டு வெளியே வந்து நின்றேன்.

தனியார் மருத்துவமனை என்பதால் மிகவும் தூய்மையாக மெயிண்டைன் செய்து கொண்டிருந்தார்கள். அந்த பிளாக் கொஞ்சம் வசதியானவர்கள் தங்குவது. ஏசி, டீவி என்று வீட்டில் இருக்கும் அத்தனை சவுகரியங்களும் இருந்தது. பணம் செலவானலும் பரவாயில்லை, treatment நன்றாக இருக்கும் என்பதால் அப்பா இங்கேயே சேர்த்துவிடுவோம் என்று சேர்த்திருந்தார். அந்த ஹாஸ்பிடலின் chief doctor பாரீன் சென்று திரும்பியவர். மிகவும் கண்டிப்பான, கைராசி டாக்டர் என்று பெயரெடுத்திருந்தார். வெளியூரிலிருந்தெல்லாம் இந்த ஹாஸ்பிடலுக்கு பேசண்ட்ஸ் வந்து குவிந்து கொண்டிருந்தனர். இரவில் இரண்டு பேருக்கு மேல் தங்க அனுமதிக்க மாட்டார்கள். பிசினெஸ் நன்றாக போய் கொண்டிருப்பதால் ஹாஸ்பிடல் எக்ஸ்டெண்சன் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.