வாசமான ஜாதிமல்லி 3 14

இது பிரபுவின் தாய்யாக தான் இருக்கணும்,” என்று மீரா நினைத்தாள். அநேகமாக அவள் கணவர் பிரபுவின் தந்தையின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார்.

“ஓ, நீங்க பிரபுவைத் தொடர்பு கொள்ள முடிந்ததா….” பிரபு பெயர் குறிப்பிடப்படுவதைக் கேட்ட மீராவின் காதுகள் ஊக்கத்துடன் எழுந்தன.

“ஆ ஹா ………………… .. ஓ ………………… ..ஆ ஹம் ………………… ..சரிங்க, வெச்சிடுறேன்.”

அவள் கணவரும் பிரபுவின் தாயும் வேறு என்ன பேசினார்கள் என்பது அவளுக்குத் தெரியாது. அதை தெரிந்துகொள்ள ஆவலுடன் துடித்தாள், ஆனால் அவள் அதை பத்தி எப்படி கேட்க முடியும் ??? அவள் கணவர் அந்தத் தகவலைத் தானாகவே சொல்லுவார் என்று அவள் வேண்டிக்கொண்டாள், இல்லையெனில் அவரிடமிருந்து அந்தத் தகவலை தந்திரோபாயமாகப் எப்படி கேட்பது என்ற வழியை அவள் யோசிக்க வேண்டும்.

பிரபுவின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதால் அது சம்மந்தமா என்ன நடக்குது என்று அறிந்துகொள்ள உள்ளுக்குள் பரபரப்புடன் மீரா இருந்ததாள். அவள் உள்ளுக்குள் எவ்வளவு பரபரப்பு உணர்வில் இருக்கிறாள் என்பதை மறைக்க அவள் முடிந்த அளவு முயற்சி செய்தாள். பிரபு திரும்பி வருகிறானா? அவன் தனியாகவா அல்லது மனைவியுடன் வருகிறானா? அவன் எப்போது இங்கே இருப்பான்? ஆனால் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு அவர் எதையும் கூறவில்லை, மௌனமாகவே இருந்தார். அவர் சும்மா குழந்தைகளுடன் டிவி பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தார்.

அந்த நேரத்தில் அவன் எப்படி உணருகிறான் என்பதை சரவணனுக்குத் தெரியவில்லை. பிரபு, அவன் தந்தையைப் பார்க்க அவர்கள் அவனை இங்கே வர சொன்னால் அவர்கள் மீது கோபப்பட மாட்டேன் என்று அவன் மிகவும் கருணையுடன் பிரபுவின் தாயிடம் சொல்லிவிட்டான். இப்போது அது உண்மையாக நடக்க போகுது என்றபோது, அவனுக்கு ஒரு சங்கடமான உணர்வு இருந்தது. எப்படி இருந்தாலும் அவன் மனைவியை முதலில் அவனுக்கு தெரியாமல் பிறகு தெரிந்த பிறகும் முழுதாக அவன் இஷ்டப்படி அனுபவித்தவன் வருகிறான் என்றபோது சங்கடம் உருவாவது இயற்க்கை தானே.

பிரபுவின் தாயிடமிருந்து அவன் பல புதிய தகவல்கள் அறிந்துகொண்டான். அதில் சில விஷயங்கள் ஆசிரியமும் அதே நேரத்தில் கொஞ்சம் அச்சத்தையும் கொடுத்தது. அவனது கண்கள் டிவி திரையில் கவனம் செலுத்துவதாகத் தோன்றினாலும், அவன் மீராவை மறைமுகமாக கவனித்து கொண்டிருந்தான். அவள் மனதில் சஞ்சலப்படுகிறாள் என்று அவனால் காண முடிந்தது ஆனால் அதை மறைக்க ஒரு பெரிய முயற்சியை எடுக்கிறாள் என்பதும் புரிந்தது. இதற்க்கு காரணம் அவன் போனில் ‘பிரபுவை தொடர்பு கொள்ள முடிந்ததா’ என்ற வார்த்தைகள் அவன் சொன்னதால் என்று அவனுக்கு தெரியும்.

அவள் இதைக் கேட்டிருக்க வேண்டும். இவ்வளவு காலத்திற்குப் பிறகும் என் மனைவியின் உள்ளத்தின் மீது அவனுக்கு அவ்வளவு வலிமையான பிடிப்பு இருக்கு என்று அவன் நினைத்தான். அது அவனை பெரிதும் பாதித்தது. இந்த முறை எப்படியும் இந்த நிலைமைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மனதில் உறுதியோடு இருந்தான். அவன் வாழ்க்கையை இது தொடர்ந்து பாதித்து கொண்டு இருக்க கூடாது. அன்று இரவு அவர்கள் படுக்கைக்கு செல்லும் போது, மீராவும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவன் முடிவு செய்தான். அவர்கள் இருவரையும் அவன் பலவந்தமாகப் பிரித்தது வேலை செய்யவில்லை, இனியும் வேலை செய்யப் போவதும் இல்லை. அவன் நிலைமையை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வகையில் பிரபு இப்போது இங்கு வருவது நல்லது.

“உனக்கு தெரியும்மா, பிரபுவின் அம்மாவால் பிரபுவைத் தொடர்பு கொள்ள முடிந்தது, அவன் இப்போது இங்கு வருகிறான்,” அவன் கூறியதை கேட்டு என்ன எதிர்வினை மீரா முகத்தில் வருகிறது என்று பார்த்தபடியே இப்படி கூறினான்.

ஒரு அரை விநாடிக்கு அவள் முகம் பிரகாசமானது , ஆனால் அவளால் அதைக் உடனே கட்டுப்படுத்த முடிந்தது மற்றபடி அவள் வெளிப்புறமாக எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. “ஓ அப்படியா? நல்லது, ஒருவேளை அவரைப் பார்த்தால் அவரது தந்தை உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். ”

இன்னும் மோசமாகாமல் இருந்தாலே நல்லது. அவர் தானே அவனை இங்கே வர கூடாது என்று தடை செய்தது என்று சரவணன் மனதுக்குள் நினைத்தான்.

அந்த அரை நொடியில் அவன் பார்த்த அந்த எதிர்வினை, சரவணனுக்கு அவளுடைய உண்மையான உணர்வுகளை அறிய போதுமானதாக இருந்தது. “அவன் தன் மனைவி மற்றும் மகளுடன் வருகிறான்,” என்று கூறினான்.

இந்த முறை மீராவால் தன் உள் உணர்வுகளை சரவணனிடமிருந்து மறைக்க இயலவில்லை. என்ன அது, நான் பிரபுவுக்கு ஒரு மகள் இருப்பதைக் குறிப்பிடும்போது அவள் முகத்தில் பொறாமை ஏற்பட்டதா? அல்லது அந்த பொறாமை நான் அவன் மனைவியை பற்றி குறிப்பித்துக்காகவா? பிரபுவுக்கு இப்போது ஒரு மனைவி இருக்கிறாள் என்பதை நினைவூட்டுவது அவளுக்கு பிடிக்கவில்லையா?

“அவருக்கு ஒரு மகள் இருக்கிறாளா? ஆமாம், அவர் திருமணமாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, அவருக்கு இப்போது ஒரு குழந்தை இருப்பது இயல்பு தானே.”