வாசமான ஜாதிமல்லி 3 14

“புது இடங்கள் போவது, புது புது உணவகம் எப்படி இருக்கு என்று ருசித்து, சில நேரத்தில் ஒன்னும் செய்யாமல் நீண்ட வாக் போவது பிடிக்கும், உனக்கு?”

“எனக்கு அப்படி எதுவும் கிடையாது. நான் பள்ளி முடித்தவுடன் வீட்டில் தான் இருந்தேன். என் பெற்றோர் மேலும் படிக்க விடவில்லை. நான் வெளியே தனியாக போகவும் விட மாட்டார்கள். ரொம்ப கண்டிப்பானவர்கள்.”

அதனால் தான் இப்போ சுதந்திரத்துக்கு நீ ஏங்குற, என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

“உன் பழைய பள்ளி தோழிகளுடன் கூட போனது கிடையாதா?”

“அத்தி பூதப்பலா எப்போதாவது ஒரு முறை, அதுவும் சீக்கிரம் சென்று சீக்கிரம் வீட்டுக்கு வரவேண்டும்.”

“நான் கேள்வி பாட்டன் உங்கள் இருவருக்கும் 23 வயது இருக்கும் போது கல்யாணம் நடந்தது என்று.”

“ஆமாம், அவரும் என் மாமியாரும் என்னை பெண் பார்க்க வந்தார்கள், என் பெற்றோர் இந்த சமந்தத்துக்கு ஒத்து கொண்டார்கள்.”

அப்படி என்றாள் இது உன் பெற்றோர் முடிவு, உன் முடிவு அல்ல. நல்ல சொற்படி நடக்கும் பெண்ணாக சரவணனை கட்டிக்கொண்ட என்று பிரபு மனதில் நினைத்து சந்தோஷப்பட்டான்.

“அப்போ கல்யாணம் முடிந்த பின்பு வெளியே போக வாய்ப்பு இருந்திருக்குமே?”

பழைய நினைவுகள் மீண்டும் நினைவுக்கு வர மீராவின் முகத்தில் லேசான வருத்த உணர்வு தெரிந்தது. “போனோம் அனால் அவர் அம்மா ரொம்ப சீக்க இருந்தாங்க. அவுங்க இறக்கும் வரை அவங்களை பரத்துக்கு வேண்டியதாக இருந்தது.”

“ஆமாம் கேள்வி பாட்டன். பாவம் அவங்க ரொம்ப கஷ்டப்படாமல் இருந்திவிட்டாங்க. அதற்க்கு அப்புறமாவது உனக்கு சுதந்திரமாக போக வாய்ப்பு இருந்திருக்குமே?”

மீரா சற்று நேரம் யோசித்தபிறகு பதில் சொன்னாள். அவனிடம் எனக்கு உள்ள வருத்தம் எல்லாம் சொல்லலாமா? இதை யாரிடமும் நான் பகிர்ந்துகொள்ளவில்லை. அவள் கணவன் காசு சேமிக்க அப்போது பல வேலைகளை செய்யும் நேரம். அவர் அப்படி கடும்மையாக உழைக்கும் போது அவள் ஆசைகளை சொல்லி அவருக்கு சுமை மேலும் ஏற்ற அவள் விரும்பவில்லை. அவள் விருப்பு, வெறுப்பை பற்றி கேட்கும் முதல் ஆள் பிரபு, அவனிடம் பகிர்ந்து கொள்வதில் என்ன பிரச்சனை.

“அப்போது என் மகள் பிறந்துவிட்டாள், அவளையும் வீட்டறையும் கவனிக்கணும். அவர் கடும்மையாக உழைக்கும் நேரம். அவர் லட்சியம் நிறைவேற்ற இரவும் பகலுமாக வேலை செய்தார். நான் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் அப்போது.”

உன் கனவுகள் என்ன ஆனது என்று பிரபு நினைத்தான். அவள் இளமை காலம் அவள் பெரிதாக ஒன்னும் அனுபவிக்காமல் போய்விட்டது. அவளுக்கு இப்போது 30 வயது ஆகிவிட்டது. இளமை காலம் வீணாகிவிட்டதே என்ற வருத்தம் நிச்சயமாக இருக்கும். மீதி இருக்கும் இளமையும் வேகமாக போய்க்கொண்டு இருந்தது. அவள் மிகவும் ஏதுநிலையில் இருக்கும் பெண்.

“நான் வெளிநாட்டில் வேலை செய்திருக்கேன். பல இடங்கள் போய்வந்திருக்கேன். இருப்பினும் இப்போது 27 வயது ஆகிவிட்டதே இன்னும் வாழ்கை ஜாலியாக அனுபவிக்கனும் என்ற ஆசை இருக்கு.”

அவளுக்கு 30 வயதில் அவள் இளமையும் அழகும் இன்னும் ரொம்ப நாளுக்கு இருக்காது என்று அவளுக்கு புரியவேண்டும் என்பதுக்காக பிரபு அதை கூறினான். அவள் ஆழ்ந்து யோசிக்க துவங்குவதை பார்த்து மகிழ்ந்தான். நல்லது அவள் சிந்திக்க துவங்கிவிட்டாள்.

“வாழ்கை இப்போதோ குறிகிய காலம், நான் அதை வீணடித்து பிறகு வறுத்த பட விரும்பவில்லை.” நிலைமையை வலியுறுத்த மேலும் பிரபு இவ்வாறு சொன்னான்.