லைக்கு பின்னால் இருக்கும் ஓவியம் 2 50

அர்ச்சனாவுக்கு கோபம் இப்போது பீறிட்டு கொண்டு வந்தது…

எதனால் கோபம் யார் மீது கோபம் ஒன்றும் புரியவில்லை…

“சரிங்க நான் போனை வைக்கறேன்.”

ராஜேஷுக்கு புரிந்தது.. ஏதோ நடந்திருக்கிறது… ஆனால் என்னவென்று புரியவில்லை.. இதற்கு மேல் அர்ச்சனாவிடம் என்ன பேச என்று புரியவில்லை..

“அர்ச்சு ஏதாச்சும் ப்ராப்ளமா”..

“சொல்றதை ஒழுங்கா சொல்லாதீங்க.. இப்போ மட்டும் வந்து கேளுங்க.. நானே பார்த்துக்கறேன்” என்று போனை கட் செய்தாள்..

படுக்கையறை விட்டு வெளியே வந்தாள் அர்ச்சனா. அசோக் சோபாவில் அமர்ந்து டிவி ரிமோட்டில் விரல்களை விளையாடி கொண்டிருந்தான்.. அர்ச்சனாவிற்கு அந்த ரிமோட்டின் மீது பொறாமை வந்தது. அவள் மீது கோபமும் வந்தது..
நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழஞ்சொல் அவளுக்கு மனதில் தோன்றியது.. தான் மட்டும் ஒன்றும் பேசாமல் இருந்திருந்தால் இப்போது இந்த விரல்கள் தன் உடலில் எங்கெங்கோ விளையாடி கொண்டிருக்கும்… ஒரு பெருமூச்சு மட்டுமே வெளி வந்தது..

அர்ச்சனா மெதுவாக அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.. அசோக் அவளுக்கு உட்கார இடம் விடுவது போல சிறிது நகர்ந்து இடைவெளி விட்டு அமர்ந்தான்.. அர்ச்சனா மேலும் அவனை நோக்கி நகர்ந்து வர….

“அர்ச்சு பிரெண்ட் போன் பண்ணினான் ஏதோ அர்ஜென்ட்டாம் நான் போயிட்டு வந்துடறேன்..”

“எப்போ வருவீங்க அசோக்.. இப்பவே லேட்டாயிடுச்சு. நைட் சீக்கிரமா வந்துடுங்க..”

“தெரியல அர்ச்சனா லேட்டாகும்னு நினைக்கறேன்.. நீ கதவை தாழ் போட்டுட்டு தூங்கு.. நான் என் ரூமுக்கு போய்டறேன்.”

அர்ச்சனாவிற்கு அதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை

“அசோக் ப்ளிஸ் எவ்ளோ நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்துடுங்களேன்.” சொல்லி அவன் கை பிடித்தாள்..

அந்த மென்மையான கைககளின் ஸ்பரிசம் மறுக்க முடியாது..

“சரி அர்ச்சனா இங்கே வர ட்ரை பண்றேன்..” சொல்லி விட்டு அவளை திரும்பி பார்க்க மனமின்றி… அசோக் வாசல் கடந்து சென்றான்…

அர்ச்சனாவோ ஏதோ ஒன்றை இழந்ததை போல இருக்க. அவள் கண்களில் ஒரு துளி எட்டி பார்த்தது அசோக் செல்வதை பார்க்க..