கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 26 5

“தத்தஜம் தித் தத்தஜம் தத் திதத் தஜம் தஜம் தஜம் த
தகிடதாம் தகதாம் ததாம் தரிகிடதாம்”

ஆணின் மீது மையல் கொண்ட பெண் எதற்கும் பயப்படுவது இல்லை. மீனா அவனை நோக்கிப் போக போக, சீனு பின்னால் நகர்ந்தான். சீனு பின்னால் நகர நகர அவனை நோக்கி மீனாவும் கண்களில் விஷமத்துடன், அவனை நோக்கி முன்னேறினாள். நாலடி பின்னால் நகர்ந்த பின் அதற்கு மேல் நகரமுடியாமல் மாடிப்படிக்கட்டு சுவரில் முட்டிக்கொண்டு நின்றான். அவர்கள் அங்கே நிற்பதை தெருவில் செல்லுபவர்களால் பார்க்க முடியாது. வீட்டுக்குள் இருப்பவர்களாலும் பார்க்க முடியாது. ஒரு அங்குலம் அசைந்தாலும், மீனாவின் மார்பை சீனு உரசவேண்டிய நிலை! காற்று மட்டும் அவர்களுக்கு இடையில் நுழைந்து சென்று கொண்டிருந்தது. சீனுவின் மனதில் பாடலும், உடலில் நடுக்கமும் ஒரு சேர எழுந்தன.

“தத் தி கிடதகதா தகதிமி தத் தத் ததீம்த தத் ததீம்த தகஜணு தா
தத்தஜம் தித் தத்தஜம் தத் திதத் தஜம் தஜம் தஜம் த”

“இதுக்கு மேல எங்கே போவீங்க நீங்க?” மீனாவின் கண்களில் குறும்பு கொப்பளித்துக்கொண்டிருக்க, அவள் குரலில் எல்லையில்லாத உல்லாசம் பொங்கியது.

“தகிடதாம் தகதாம் ததாம் தரிகிடதாம்
தஜம் தஜம் தஜம் தஜம் தரிகிடதாம்
தகதிமி தரிகிடதாம்”

“மீனா … பிளீஸ்.. சொன்னாக் கேளு! யாரவது வந்துடப் போறாங்க… அப்புறம் அசிங்கமா போயிடும்..” சீனுவின் குரல் தயங்கி தயங்கி வந்தது..

“தாம் தாம் தரிகிடதை தரிகிடதாம்”

“ஆம்பிளைங்க பயப்படலாமா?” மீனா தன் கண்களை அபாயகரமாக சுழட்டினாள்.

தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தரிகிடதை

“என்னைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும் … நான் எதுக்கும் பயப்படமாட்டேன்னு?”

“இப்பத்தானே சொன்னீங்க… பயமா இருக்குன்னு?”

“யார் தப்பு பண்ணாலும், அது கடைசியா என் மேலத்தான் வந்து விழும்… அதனால அப்படி சொன்னேன்!”

“இப்ப நான் தப்புப் பண்ணப் போறேன்னு… யார் சொன்னது உங்ககிட்ட?”

“மீனா …. ப்ளீஸ்… உன் கிட்ட என்னால இப்ப … இங்க பேச முடியலை…” அவன் தன் கைகளை தன் மார்பில் கட்டிக்கொண்டு நின்றான்.

“நீங்க இந்த மீசை தாடியெல்லாம் இல்லாம, பாக்கறதுக்கு இப்ப எவ்வள ஹேண்ட்சம்மா இருக்கீங்க தெரியுமா?” மீனா இந்த உலகத்திலேயே இல்லை.

“செல்வா கார் சாவியோட வந்துடுவான் … மீனா … கொஞ்சம் நகர்ந்து நில்லேன்..”

“அவனுக்கு கார் சாவி கிடைக்காது… நீங்க அதைப்பத்தி கவலைப்படாதீங்க! அவன் கொஞ்ச நேரம் தேடட்டும்.” மீனா உறுதியாக சொன்னாள்.

“அடிப்பாவி முதல்லேயே நீ எடுத்து ஒளிச்சு வெச்சிட்டியா?” சீனுவின் குரலில் முதல் தடவையாக நடுக்கம் சிறிது குறைந்திருந்தது.

“ஒளிச்சில்லாம் வெக்கல.. அதைப்பத்தி அப்புறம் பேசிக்கலாம்…”

“சரி … இப்ப உனக்கு என்ன வேணும்?”

“எனக்கு நீதான் வேணும்!” மீனா தன் கண்களை சிமிட்டினாள்.

“என்னடி சொல்றே?” சீனுவுக்கு குறைந்த உடல் நடுக்கம் மீண்டும் அதிகமானது.

“ஒரு முத்தம் குடுடான்ன்னு சொல்றேன்…” மீனா இதுவரை சீனுவுக்கு கொடுத்துக்கொண்டிருந்த மரியாதையை காற்றில் பறக்கவிட்டாள். அவள் ஒருமையில் பேசி தன் உள்ளத்து ஆசையை அவனுக்கு உணர்த்தினாள். அவள் மனதில் ஓடும் எண்ணங்கள் நன்றாக புரிந்தும் புரியாதவனாக தன் கண்ணியம் காத்து நின்று கொண்டிருந்தான் சீனு.

மீனா தன் முகத்தை நிமிர்த்தினாள். சீனுவின் கண்களை உற்று நோக்கினாள். சீனுவுக்கு அவன் ரத்தம் தலைக்கேறியது. இவளை எதுல சேர்க்கறது? நிலைமை புரியாம, ஒரு குழந்தை மாதிரியில்லா பிஹேவ் பண்றா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *