எனக்கு இதுக்குலாம் நேரம் இல்ல தம்பி 9 54

“சூசயிடா..?? என்ன.. நீ அடுத்து எழுத போற ஸ்க்ரிப்டுக்கு டைட்டிலா..?? என் படத்தை பாக்குறதும்.. இதுவும் ஒண்ணுதான்னு சிம்பாலிக்கா சொல்லப் போறியா..?? ஹாஹாஹாஹா..!!” சொல்லிவிட்டு மீரா சிரிக்க, அசோக் கடுப்பானான்.

“ஹிஹி.. வெரி ஃபன்னி..!!” என்று பலிப்பு காட்டினான்.

“பின்ன என்ன..?? சும்மா சூசயிட்னா என்ன அர்த்தம்..??”

“ஒரு டாகுமன்ட்ரி பண்ணப் போறோம் மீரா.. ‘Suicide Prevention Awareness’ பத்தி..!!”

“ஓ..!! யாரு க்ளையன்ட்..??”

“கவர்மண்ட்..!!”

“ஹ்ம்ம்.. என்ன திடீர்னு.. அட்வர்டைஸ்மன்ட் விட்டுட்டு டாகுமன்ட்ரில எறங்கிட்ட..??”

“அதனால என்ன..?? நல்ல காரியம்னு தோணுச்சு.. அதான்..!! நீ கால் பண்றப்போ கூட அந்த சென்டர்ல தான் இருந்தேன்.. அங்க கவுன்சிலிங் வந்தவங்ககூட பேசிட்டு இருந்தேன்..!! ச்சே.. அவங்கல்லாம் எவ்வளவு பாவம் தெரியுமா.. ஒவ்வொருத்தர் பின்னாடியும் ஒவ்வொரு கதை இருக்கு மீரா.. நாமலாம் எவ்வளவோ லக்கி..!! இப்போ நாம பேசிட்டு இருக்குற இந்த நிமிஷத்துல கூட.. உலகத்துல ஏதோ ஒரு மூலைல யாரோ ஒருத்தர் சூசயிட் பண்ணிட்டு இறந்திருப்பாங்க..!! நான் எடுக்கப்போற இந்த டாகுமன்ட்ரி பாத்து.. அட்லீஸ்ட் ஒருத்தராவது அந்த தற்கொலை எண்ணத்தை கைவிட்டா.. அது எவ்வளவு பெரிய விஷயம்..??”

“ஹ்ம்ம்.. சூசயிட் பத்தி நெறைய விஷயம் தெரிஞ்சுக்கிட்ட போல இருக்கு..??”

“ம்ம்.. ஆமாம்.. ஒரு இன்ட்ரஸ்டிங் கோட் கூட தெரிஞ்சுக்கிட்டேன்..!!”

“என்ன அது..??”

“Suicide is permanent solution to a temporary problem..!!”

“ஹாஹா.. நைஸ் கோட்..!!”

மெலிதான புன்சிரிப்புடன் சொன்ன மீரா, பட்டென அமைதியானாள். அசோக்கின் முகத்தையே ஒருவித சலனமற்ற பார்வை பார்த்தாள். அசோக்குக்கு அவளுடைய பார்வையின் அர்த்தம் புரியவில்லை.

“ஹேய்.. என்னாச்சு..??” என்றான் புன்னகையுடன்.

“இல்ல.. ஒன்னுல்ல..!!”

சொன்ன மீரா அவன் முகத்தில் இருந்து பார்வையை விலக்கிக் கொண்டாள். அகலமாக விரிந்திருந்த ஏரியையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் திடீரென திரும்பி ,

“ஹேய் அசோக்.. இந்த எடத்துல எவ்வளவு ஆழம் இருக்கும்..??” என்றாள் குரலில் ஒரு புது உற்சாகத்துடன்.

“ஏன் கேக்குற..??”

“சொல்லேன்..!!”

“ம்ம்.. எப்படியும் ஒரு இருபது இருபத்தஞ்சு அடி இருக்கும்னு நெனைக்கிறேன்..!!”

“அப்போ.. இங்க இருந்து உள்ள குதிக்கிறவங்க செத்து போயிருவாங்களா..??”

“நீச்சல் தெரியலன்னா சாக வேண்டியதுதான்..!!”

“எனக்குத்தான் நீச்சல் தெரியாதே..??”

“நீதான் உள்ள விழலையே..??”

“இதோ.. இப்போ குதிக்கப் போறேனே..??”

“என்னது..???”

“நீ சூசயிட் பத்தி பேசுனியா.. எனக்கு உடனே சூசயிட் பண்ணிக்கணும்னு ஆசை வந்துடுச்சு..!!”

“ஹாஹா.. வெளையாடாத மீரா..!!”

“இல்ல.. சீரியஸா..!! நீ சொன்னல.. ‘Suicide is permanent solution to a temporary problem..!!’ன்னு.. பெர்மனன்டா இப்படி ஒரு சொல்யூஷன் இருக்குறப்போ.. எதுக்காக சாப்பாடு, பணம், ட்ரஸ், வீடு, வசதின்னு.. தெனம் தெனம் டெம்போரரி ப்ராப்ளம்ஸ் கூட போராடனும்..?? பேசாம எல்லாரும் சூசயிட் பண்ணி செத்துப் போயிட்டா.. எல்லாருக்கும் நிம்மதிதான..?? நான் முடிவு பண்ணிட்டேன்.. சூசயிட் பண்ணிக்கப் போறேன்..!!” மீரா அந்த மாதிரி பேசியது, அசோக்குக்கு சிரிப்பையே வரவழைத்தது.

“ஹாஹா.. லூஸு மாதிரி ஏதாவது உளறிட்டு இருக்காம.. கெளம்பு.. டைம் ஆச்சு..!!”

சிரிப்புடன் சொல்லிவிட்டு, அசோக் கேஷுவலாக முன்னால் நடந்தான். ஒரு ஐந்து எட்டு கூட எடுத்து வைத்திருக்க மாட்டான். அவனுக்கு பின்னால் இருந்து, ‘டமார்..’ என எதுவோ நீரில் விழுகிற சப்தம் பெரிதாக கேட்டது. அசோக் படக்கென திரும்பி பார்த்தான். பாலத்தில் மீரா இல்லை..!!! அவ்வளவுதான்.. பக்கென அதிர்ந்து போனான்.. பரபரப்பு தொற்றிக்கொண்டது அவனை.. அட்ரினலின் ஜிவ்வென சுரந்து உடலெங்கும் தாறுமாறாய் ஓடியது..!!

“மீரா..!!!!!”

என்று அலறியவாறே ஓடினான். கைப்பிடி தடுப்பை பற்றிக்கொண்டு ஏரியை குனிந்து பார்த்தான். நீரலைகள் அமைதி குலைந்து போய், வட்ட வட்டமாய் விலகி ஓடிக் கொண்டிருந்தன. மீரா கண்களுக்கு தட்டுப்படவில்லை. அசோக் அதன்பிறகும் ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை. கைப்பிடி தடுப்பில் கால்வைத்து ஏறி, சரக்கென ஏரிக்குள் குதித்தான். குத்தித்த மறுநொடியே, உடலை சுழற்றி நீருக்குள் மீராவை தேடினான். நீருக்குள் மூழ்கி மூழ்கி தேடியவன், பிறகு மேற்பரப்புக்கு வந்து கத்தினான்.