இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 40

சுபர்ணா வின் கட்டளையை பின்பற்றுவதில் இருந்து கிஷோருக்கு வேறேதும் சிறப்பான வழி எதுவும் தென்படவில்லை. அவன் அங்கிருந்து நகல முற்பட, ராகுல் தன் கையை நீட்டி கிஷோருக்கு அணை போட்டான்..

பக்கா கிளாஸ் ஆக மட்டுமே ராகுலை பார்த்த கிஷோர் அன்று தான் தரை லோக்கல் ஆக பார்த்தான்..

ராகுல்: ஓத்தா நில்லுடா.. என்கிட்ட பம்மி பம்மி பேசிட்டு, வெளிய போயி இப்படி தான் ஓலு ஓக்கிறயா??

காதல் சுரப்பி கலைக்குள் வேகமாக சுரக்க, அவளால் அந்நியன் ஒருவன் கிஷோரை திட்டுவதை ஏற்க முடியவில்லை.. ராகுல் எவ்வளவு மோசமானவன் என தெரிந்தும் அவனை எதிர்க்க துணிந்தாள்..

“hey mind your words, take your filthy hand of him, let him go”

“ஹே நான் உன்கிட்ட பேசல டி.. பிச்சைக்காரி.. நான் வாங்கி கொடுத்த வேலைல தான் உன் பொழப்பே ஓடுது.. மூடிட்டு ஒதுங்கி நில்லு.. என்கிட்ட வச்சுக்கிட்ட உன் வாழ்க்கை முழுக்க மறக்க முடியாத மாதிரி செஞ்சுருவேன்”

“ராகுல் இதான் லிமிட்.. கலையை பத்தி மரியாதை இல்லாம பேசாத” என்று கலைக்காக ராகுலை எதிர்த்தான் கிஷோர்..

“ஒம்மாள.. என்னடா லிமிட்” என்றவன் கிஷோரின் நெஞ்சு சட்டையை பிடித்து அவனை இழுத்தான்..

அவ்வளவு தான் பொளாஆஆஆர் என்ற சத்தம் தான் அந்த கடையை நிறைத்தது. கிஷோர் அப்படியே உறைந்து போனான்.. சுபர்ணா வாயை இரு கைகளால் பொத்திக் கொண்டு சிலையாகிப் போனாள்..

ராகுலுக்கு சில வினாடிகள் உலகமே இருளாகிப் போனது, தலையில் பொறி கலங்கியது.. என்ன நடந்தது என்று அவனால் சில வினாடிகள் யூகிக்க முடியவில்லை..

காரணம் ராகுலின் கன்னத்தில் கலை கொடுத்த அரை.. ராகுலின் கைகள் இன்னும் கிஷோரின் நெஞ்சு சட்டையை பிடித்திருக்க “கையை எடுடா நாயே” என்று முதல் அரையை மிஞ்சும் வகையில் இரண்டாவதாக ஒரு அரை ராகுலின் கன்னத்தில் விழுந்தது..

கிஷோரின் சட்டையில் இருந்து கையை எடுத்த ராகுல் முகத்தில் எந்த ஒரு பாவனையும் காட்டாமல் அமைதியாக இருந்தான்..