இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 65

“போடா லூசு!! உன் அருமை உனக்கும் தெரியல, உன்னை சுத்தி இருக்கிறவங்களுக்கும் தெரியல.. ஊரு என்ன வேணா சொல்லலாம் டா, ஏமாளி, அம்மாஞ்சி, பேக்கு, கையாளாகாதவன் ன்னு சொல்லுவாங்க,, ஆனா என்னை பொறுத்த வரைக்கும் நீ பரிசுத்தமானவன் டா, உள்ளத்துல அழுக்கு இல்லாதவன் டா.. அது போக முக்கியமா உன்னோட, உன் குடும்பத்தோட பாசத்தால என்னோட விடாப்பிடியான கொள்கையே விட்டுடலாம் ன்னு இருக்கேன் டா”

கலையின் மனதில் அவளின் உடல் கிஷோருக்கு மட்டுமே என முடிவெடுத்து அதை அவனிடம் சொல்ல இருந்தாள்..

“உனக்கு லவ் அதிகம் ஆகிருச்சு ன்னு நினைக்குறேன், அதான் என்னென்னமோ சொல்ற, சரி அது என்ன விடாப்பிடியான கொள்கை?”

அவள் சொல்ல வாயெடுக்குமுன் அவள் மொபைலில் ஒரு மெசேஜ் வந்தது.. அதை பார்த்தவுடன் அவள் முகத்தில் இருந்த கலை காணாமல் போனது..

“என்னாச்சு டி, என்ன மெசேஜ் அது?”

“சேலரி மெசேஜ் டா, சம்பளம் போட்ருக்காங்க”

“சரி அதுக்கு ஏன் டி மூஞ்சி டல்லா ஆகுது”

“கிஷோர், இன்னும் ஒரு வாரம் அப்புறம் தான் சம்பள நாள் வருது, இப்போ எனக்கு வந்தது செட்டில்மென்ட் டா, சுபர்ணா அக்கா என்னை வேலை ல இருந்து எடுத்துட்டாங்க டா, என்னோட அம்மா ட்ட நான் சொல்றது, இதுல அவங்க வேலை இருக்குமா ன்னு கூட தெரியல”

“கலை இது பத்தி எதுவும் இப்போ நினச்சு மனச கொளப்ப வேண்டாம், என் குடும்பம் மொத்தமும் இருக்கிறோம் ல, இவ்ளோ ஏன் வனிதா வோட அப்பா கொஞ்சம் பெரிய ஆள் தான், அவர் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவாரு.. இப்போ வா நான் உன் வீட்டுல உன்னை ட்ராப் பண்ணிடுறேன்”

“உடனே என்ன அவசரம், சாயந்திரம் வரைக்கும் இருந்துட்டு போ” என்ற கிஷோரின் அம்மாவின் அன்பு கட்டளையை ஒரு வழியாக சமாளித்து கலையின் வீட்டிற்கு இருவரும் வந்து கதவை திறக்க அங்கே ராகுல் கலையின் அம்மா வுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.

குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஒரு பால் பாக்கெட்டை எடுத்து அதன் நுனியை கத்திரிக்கோளால் வெட்டி, அதை ஒரு சட்டியில் ஊற்றி கீழே ஸ்டவ்வை பற்ற வைத்தாள் கலை..

சட்டியில் இருந்த பால் கொதிக்க கொதிக்க கலையின் மனமும் கொதித்து கொண்டிருந்தது.. போயும் போயும் இவனுக்கு பால் காய்ச்சி கொடுக்க வேண்டியதா போயிருச்சு.. என்னோட வேலையை போக வச்ச இவனுக்கு நான் பால் காய்ச்சி கொடுக்கணும், எல்லாம் என்னோட நேரம்..