இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 65

கலை மற்றும் கிஷோரின் நிலையை ராகுல் வெகுவாக மோசமாக்கி விட்டிருந்தான். வேலை போன விஷயத்தை பக்குவமாக பேசி, பின்பு வனிதா வின் தந்தை மூலமாக வேறு ஒரு நல்ல வேலை பெற்று, பின்பு தன் காதலை வெளிப்படுத்தலாம் என்று கலை தீட்டியிருந்த எண்ணத்தை ராகுல் வெறும் இரண்டு கேள்விகளில் தவிடுபொடியாக்கி விட்டான்..

மஞ்சு திகைத்து போய் உட்சபட்ச கோபத்தில் கலையை பார்வையாலே எரிக்க, அவள் வாயை திறக்குமுன் ராகுல் கேள்வி எனும் பேரில் அடுத்த குண்டை தூக்கி எறிந்தான்.

“ஆமா கலை, உங்க பக்கத்துல இருக்காருல்ல இவர் யாரு?” கலை மௌனமாய் ராகுலை முறைக்க, அவன் “ஒருவேளை இவர் தான் (இரண்டு வினாடி இடைவெளி விட்டு) உங்க” என்று இழுத்து நிறுத்தினான்.. (ராகுல் வந்ததில் இருந்து கிஷோரை சிறிதும் தெரியாதவன் போல நடந்து கொண்டான்)

கிஷோர் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் அப்பாவியாய் திகைத்து இருந்தான்.

பெரிதாய் மூச்சை இழுத்து விட்ட மஞ்சு ஒரு பத்திரகாளியாகவே மாறியிருந்தாள்.. இவ்வளவு நேரம் கலையை மட்டுமே கோவ பார்வையை வீசியவள் இப்பொழுது கிஷோர் மேலும் வீசினாள்..

“சொல்லுடி முண்ட, யாரு இது?”

“அம்மாஆஆ” கலை கண்களில் நீர் கோர்த்தது.. அவளின் காதல் என்று அழகிய குளத்தில் ராகுல் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட்டு பெரிய அதிர்வை உண்டாக்கினான்..

“ராகுல் தம்பி இருக்குன்னு பாக்குறேன், இல்லேன்னா எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு உன்னை வெளக்கமாத்தாலயே சாத்தியிருப்பேன்.. ஒழுங்கா சொல்லு டி யாரு இது?”

கிஷோர் சங்கடத்தில் நெளிந்தான்..கலையின் கண்களில் இருந்து சில துளி கண்ணீர் வடிந்து கீழே சொட்ட அதை கண்டு ராகுல் ஆனந்தம் கொண்டான்.. இப்போதைக்கு இது போதும், இவளையெல்லாம் ஒரேடியா அழ வைக்க கூடாது, கொஞ்சம் கொஞ்சமா அழ வச்சு அதை ரசிக்கணும் என்று நினைத்த ராகுல் சூழ்நிலையை மாற்றுவதற்கு அவனுடைய திட்டத்தில் அடுத்த காயை நகர்த்தினான்..

“ஆண்ட்டி!!! கூல் கூல். ஏன் இவ்ளோ கோவப்படுறீங்க.. இந்த காலத்துல லவ் பண்றதுலாம் நார்மல் ஆண்ட்டி.. எனக்கும் கலை மேல சின்ன கோவம் தான். நான் சுபர்ணா ட்ட பேசி கொஞ்சம் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த வேலையை இப்பிடி வீசி எறிஞ்சுட்டு வந்துருக்காங்களே ன்னு.. (உள்ளுக்குள் சிரித்தான் அவ வேலையை போக வச்சதே நான் தான்) சரி முடிஞ்சு போச்சு, வேலை போச்சு, இனி என்ன பண்ண?” என்றவன் கலையின் முகத்தில் இருந்த கண்ணீரை பார்த்து ரசித்து ஆனந்தம் கொண்டு மேலும் தொடர்ந்தான்.