இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 65

அப்பொழுது தான் கலைக்கு அருகிலிருந்த கிஷோரை கவனித்த ராஜாராம் கையிலிருந்த காஃபியை கீழே வைத்துவிட்டு முகத்தில் சின்ன புன்னகையுடன் “தம்பி யாரும்மா? இவ்ளோ நேரம் நான் கவனிக்கவே இல்ல” என்று கலையிடம் கேட்டார்..

“அப்பா!! இது கிஷோர்.. இவர்ர்ர்ர்…” என்று அடுத்து என்ன சொல்வதெனயறியாமல் தயங்கிக் கொண்டிருக்க

அவளது தயக்கத்தை பார்த்து மனதில் ஒன்று ஊகித்த ராஜாராம் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வெளியில் சாதாரணமாக “உன்னோட பிரண்ட் ஆ!! ம்மா”

அவருக்கு தன் மகள் கலையின் மீது அதீத நம்பிக்கை எப்பொழுதும்.. எதை தேர்ந்தெடுத்தாலும் சரியாக இருக்கும் என்று ஆழமான நம்பிக்கை அவருக்கு.. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, என்னதான் கலை அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு முரண்பாடான, உலகத்துக்கு ஒவ்வாத ஒரு கொள்கையை பிடித்துக் கொண்டிருந்தாலும் அந்த கொள்கையுடனே வாழ்க்கையை வாழ, அவள் தேர்தெடுத்த கிஷோர் பத்துக்கு பதினைந்து பொருத்தத்தில் இருந்தான். ஆக இங்கு ராஜாராம் தன் மகள் மீது கொண்டிருந்த நம்பிக்கை சரிதான் போலும்.. மேலும் ராஜாராம் அவருடைய கூர்மையான பார்வையை கிஷோரின் மேல் சில வினாடிகள் மேய விட்டு ஆராய்ந்து நல்ல சாதுவான பையன் தான் என்று முடிவுக்கு வந்திருந்தார்..

ராஜாராம் ராகுலிடம் நடந்து கொண்ட விதத்தையும் கிஷோரிடம் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு உள்ளுக்குள் சந்தோசத்துடன் “ஆ.. ஆமாப்பா” என்று புன்னகையுடன் ராஜாராமிடம் சொன்னாள்..

ராஜாராம் ராகுலிடம் நடந்து கொண்ட விதத்தையும் கிஷோரிடம் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு உள்ளுக்குள் சந்தோசத்துடன் “ஆ.. ஆமாப்பா” என்று புன்னகையுடன் ராஜாராமிடம் சொன்னாள்..

சரி கலை நான் கிளம்புறேன் என்று கிஷோர் அங்கிருந்து விடைபெற முற்பட..கலை அவனை செல்லமாக முறைத்து அவன் கையை பிடித்து அழுத்தினாள்.. “இருடா அதுக்குள்ளே உனக்கு என்ன அவசரம்” என்று கலை மெதுவாக அவனிடம் சொல்லிவிட்டு ராஜாராமிடம் திரும்பி “ப்பா!! மேல மாடிக்கு வாங்களேன்.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..”

கலை எதைப்பற்றி பேச அழைக்கிறாள் என்பதை ராஜாராம் உடனே ஊகித்துவிட்டு அடுத்த வினாடியே சோஃபாவில் இருந்து எழுந்து நின்றார்..

மஞ்சு: ஏய் தனியா? என்னடி தனியா? இங்க வச்சு பேச முடியாதோ?

ராஜாராம்: உன் முன்னாடி பேச புடிக்காம தான் தனியா பேசணும் ன்னு சொல்றா? கொஞ்ச நேரம் உன் ஓட்ட வாய மூடிக்கிட்டு உக்காரு.. நான் பேசிட்டு வந்து சொல்லுறேன்..