இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 65

“இல்லமா!! நைட்டு வீட்டுக்கு வந்த உடனே அவகிட்ட இருந்து மெசேஜ், அப்போ போன் கைல எடுத்தேன், காலங்காத்தால 3 மணிக்கு தள்ளி வச்சேன்.. சரி அதான் இப்போ சொல்லிட்டேன் ல, உங்க எல்லாருக்கும் ஓகே தான?”

“பாருங்கப்பா அண்ணன் அப்பாவி ன்னு நாம நினைச்சுட்டு இருக்கோம், ஆனா அவன் அமைதியா என்ன பண்ணிட்டு இருக்கான் பாத்திங்களா?” என்றான் ராம் ஏதோ தான் ரொம்ப யோக்கியம் என்பது மாதிரி.. அதையே பார்வையால் கிஷோர் அவனுக்கு சொல்ல அமைதியாக தலையை திருப்பிக் கொண்டான்..

“சும்மா இருடா ராம், இப்போ தான் அவனே ஒரு பொண்ணை பாத்து பிடிச்சு போயி இவ்ளோ தூரம் கொண்டு வந்திருக்கான்.. அது நினச்சு சந்தோசப்படு” என்று கிஷோரை விட்டுக் கொடுக்காமல் பேசினார் நாகராஜன்..

“சரி நீங்கலாம் சும்மா இருங்க.. டேய், கலையை எப்போடா கூட்டி வரப்போற வீட்டுக்கு.. இன்னைக்கே கூட்டி வாடா” என்று ஆசையாக கேட்டாள் கிஷோரின் அம்மா..

“இல்லமா!! இன்னைக்கு அவளுக்கு வேலை இருக்கு.. நாளைக்கு வரேன் ன்னு சொல்லி இருக்கா”

“அடப்போடா வேலையாம் வேலை.. இப்போ ஒழுங்கா போய் கூட்டி வா, நான் பிரியாணி சமைச்சு வைக்கிறேன், டேய் ராம் நீயும் கூடவே போ.. அது என்ன கடலையா?? ஆஹ் அது தான் இவன் போட்டுட்டு இருப்பான். நீ கூடவே போய் கூட்டி வந்துரு ரெண்டு பேரையும்” என்றால் கிஷோர் அம்மா..

அம்மாவின் அன்பு கட்டளைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல் கிஷோரும் ராமும் இரு வண்டிகளில் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்குள் நுழைந்தனர். அடுத்து சுத்தி முத்தி வேடிக்கை பார்த்துக்கொண்டே அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இருவரும் கடைக்குள் நுழைந்தனர்..

கிஷோரை எளிதாக அடையாளம் கண்ட சுபர்ணா அவனை பார்த்து “ஹேய் கிஷோர்” என்று கையை காட்டினாள்..

கிஷோரும் மகிழ்ச்சியாக அவளிடம் கையை காட்டி “ஹாய்” என்று சொல்வதற்கு வாய் எடுக்கும் முன்பே ராம் சுபர்ணாவிடம் சென்றிருந்தான்..