இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 5 60

தகுதி இல்ல எனக்கு, கண்டிப்பா இல்ல, இவ்ளோ பாசத்துக்கு நான் தகுதியானவ கிடையாது.. என்னதான் உடம்பு மனசு ன்னு பேசுனாலும், அதை வெளிய சொன்னா ஊரும் உலகமும் எனக்கு என்ன பேரு கொடுக்கும் ன்னு நல்லா தெரியும்.. எல்லாம் தெரிஞ்சும் கிஷோர் என்னை மனசார விரும்புறான்.. ஆனா எவ்ளோ நாளு ன்னு சொல்ல முடியாது.. மனுசனோட மனசு குரங்கை விட மோசம், காலப்போக்குல அவன் என்னை வெறுக்க ஆரம்பிச்சா?? அதுக்கு பதில் என்கிட்டே இல்ல.. நல்ல வசதியான வாழ்க்கைக்காக உடம்பை வளச்சு கொடுத்து போறது பெரிய முட்டாள் தனம் ன்னு இவங்களோட பாசம் தோண வைக்குது. இவங்களோட இந்த பாசத்துக்கு முன்னாடி வசதியான வாழ்க்கை ஈடாகுமா?

நாகராஜன்: கலை ஏன் மா பிரியாணி ய சாப்பிடாம எதையோ யோசிக்கிற? என்ன உங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்களோ ன்னு பயப்படுறியா? அந்த கவலை எல்லாம் எங்க பக்கம் விட்டுடு. நாங்க பாத்துக்குறோம்.. இல்ல என் பொண்டாட்டி பிரியாணி நல்லா இல்லையா?

கலை: ஐயோ இல்ல அங்கிள், பிரியாணி சூப்பரா இருக்கு..

கிஷோர் அம்மா: அதெல்லாம் கலை விரும்பி சாப்பிடுறா, உங்களுக்கு என் சமையலை நொட்டம் சொல்லி சாப்பிட்டா தான் உள்ள இறங்கும்.. டேய் கிஷோர் பேருக்கேத்த மாதிரியே பொண்ணு நல்ல கலையா அழகா இருக்குறா டா? பரவால்ல பொண்ணு தேடுற சிரமத்தை எங்களுக்கு கொடுக்காம நீயே பாத்துக்கிட்ட.. நாங்க பாத்திருந்தா கூட இவ்ளோ அழகா அம்சமா பாத்திருக்க முடியாது..

கலை வெட்கப்பட்டு குனிந்து கொண்டு தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தாள்.

மொட்டைமாடியில் மர நிழலில் சுவர் ஓரத்தில் கலை தனியாக உட்கார்ந்திருந்தாள்.

அமைதியாக வந்த கிஷோர் பின்னாலிருந்து அவள் இடுப்பில் கை கோர்த்து அவள் முதுகில் முத்தமிட்டான்..

“என்னடி இங்க வந்து தனியா உக்காந்திட்டு இருக்குற”

திரும்பிய கலையின் கண்களில் நீர் கோர்த்து இருந்தது. “கிஷோர் நிஜமாவே நான் வேணுமா டா உனக்கு, நான் உனக்கு ஒர்த் யே இல்ல டா”

“ஹே என்னாச்சு இப்போ உனக்கு, லூசு மாதிரி பேசுற. உனக்கு பிடிக்காத மாதிரி நாங்க ஏதாச்சும் நடந்துக்கிட்டோமா?”

“போடா!! நான் சொல்றது கூட புரிஞ்சுக்காத அளவு வெகுளியா இருக்குற”

“இல்ல டி நான் வெகுளி ன்னு சொல்றது விட ஏமாளி ன்னு சொல்லலாம். அப்புடிதான் எல்லாரும் என்னை பத்தி நினைக்கிறாங்க.. என் தம்பி கூட அப்டி தான் நினைக்கிறான், ராகுல் விசயத்துல அவன் தலகிடாம இருந்தா இந்நேரம் எந்த பிரச்னையும் வந்துருக்காது.. அதனால நான் தான் சொல்லணும், நான் உனக்கு ஒர்த் இல்ல ன்னு”