“ என்னுடைய தலைஎழுத்து 12 வருஷத்துக்கு முன்னாடி என்னை பெத்தவங்க பண்ண தப்பால் இன்னிக்கி நான் அனுபவைக்குறேன், commerce படிச்சிட்டு charted accountant எக்ஸாம் கு கூட கஷ்ட பட்டு ரா பகலா கண் விழிச்சி படிச்சி பாஸ் பண்ணி மனசளவில நான் விரும்பிய வேலைய தேர்ந்தேடுக்குற உரிமைய மட்டும் தன் ஆண்டவன் எனக்கு குடுத்து இருக்கான் ரம்யா….. கணவனை தேர்ந்தேடுக்குற வாய்ப்பை குடுக்கல, வசதியான குடும்பம்னு சொல்லி என் வீட்டுல இருக்குறவங்க என்னை அவர் தலைல கட்டி வெச்சாங்க, ஆனா அவருடைய குடும்பத்துல எதுக்கும் உதவாத அவரை தள்ளி வெச்சிடாங்க, இவனுக்கு ஒரு மனைவி இருக்காளே னு என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கல, அதே சமயம் நான் கர்பமாகவும் இருந்தேன், அதை பத்தியும் அவங்க பெருசா எடுத்துக்கல, அவருக்கு சேர வேண்டிய பங்கை கூட செரிவர குடுக்கல. கைல ஒரு தொகைய குடுத்து நீயாச்சு உன் குடும்பம் ஆச்சு, உன் பொழப்பை கவனிசிகுட்டு உன் வாழ்கைய பார்த்துக்கோ எங்களை தொந்தரவு பன்னதேன்னு சொல்லிட்டாங்க” பேசும்போது லேசாக கண்களின் ஓரத்தில் கண்ணீர் தென் படுவதை கவனித்த ரம்யா அவளுடைய hand kerchief எடுத்து குடுக்க, அந்த நிமிடம் மிகவும் தேவையான பொருளாக அதை சங்கீதா வாங்கிக்கொண்டால்.
எதனால மேடம் அவர் மேல அவளோ வெறுப்பு அவங்களுக்கு”
“படிக்க வெச்ச காலத்துல செரியா படிக்கலா, அதை அவர் பெத்தவங்க ஒரு பெரிய விஷயமா எடுத்துக்கல.. ஒரு வயசுக்கு அவர் வந்த பிறகு டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் வெச்சி குடுத்தாங்க, எந்த வேலைய செயன்ஜாலும் அதுல involve ஆகி முயற்சி செஞ்சி கஷ்ட படாம ஒன்னும் கிடைக்காது, ஆனா இந்த மனுஷன் ஒரு வாரம் போயி இருக்காரு, அதுக்கு அப்புறம் எனக்கு இந்த வேலை பிடிக்கல எனக்கு வேற எதாவது கடை வெச்சி குடு னு தொந்தரவு பண்ணி இருக்காரு…. அதுக்கும் சரி னு சொல்லி ஒரு சின்ன Coffee Shop வெச்சி குடுத்து இருக்காங்க…. அதுல அவங்களால முடிஞ்சா அளவுக்கு பணத்தை போட்டு உதவி செஞ்சாங்க, பாவம் அவங்களும் வயசானவங்க, போதாததுக்கு இன்னொரு பொன்னுக்கும் கல்யாணம் பண்ணனும், கூடவே அவங்களோட எதிர்காலத்துக்கு கொஞ்சம் காசு சேர்த்து வெக்கணும்… எவளவோ commitments இருக்கு பலருக்கு வாழ்க்கைல இவற மாதிரியா ஊதாரியா இருப்பாங்க. இதை எல்லாம் கூட பொருத்துகுட்டங்க, ஒரு நாள் ராத்திரி இவருக்கு ஏதோ அவங்க அம்மா செஞ்ச சாபட்டுல ருசி பிடிக்கலைன்னு தட்டை துக்கி எரிஞ்சி இருக்காரு, அது அவங்க மேல எதேச்சைய பட அதை பார்த்து என் மாமனாருக்கு கோபம் அதிகம் ஆயிடுச்சி , இனியும் உன்னை கட்டிகுட்டு அழனும் னு எங்களுக்கு அவசியம் இல்லை எங்கயாவது போயி உன் வாழ்கைய வாழ்ந்துக்க னு சொல்லி சண்டை ஆரம்பிசுது, முக்கியமா நாங்க தனிய வரதுக்கு காரணம் அதுதான்”
“ எல்லாம் சரி மேடம், நீங்க எதையாவது பேசி சமரசம் செய்ய முயற்சி பண்ணி இருப்பீங்களே, கண்டிப்பா சும்மா இருந்து இருக்கே மாடீன்களே”
“பேசினேன், தனியா என் கணவர் இல்லாத பொது அவங்க கிட்ட பேசினேன், நான் வேணும்ன மாச சம்பளத்துக்கு வேலைக்கு போறேன், உங்களுக்கும் அவருக்கும் சேர்த்து சம்பாதிக்குறேன் குடும்பத்துல நானும் கஷ்டத்துல பங்கு எடுத்து உங்களுக்கு உடவுறேன்னு சொன்னேன், ஆயிரம் இருந்தாலும் பெத்தவனுக்கு இந்த உலகத்துல மாமனார் மாமியார் உடனே support பண்ண வருவாங்க. அப்படியெல்லாம் ஒன்னும் தேவை இல்லைமா, நாளைக்கு யாரவது வெளியில நீதான் என்னமோ எங்களை கவனிசிக்குற, காப்பாத்துற னு ஒரு அவலமான பேரு எங்களுக்கு வேண்டாம் னு என்னுடைய மாமியார் strict ஆ பேசினாங்க, அதன் பிறகு என் மாமனார் நீ உறுதியான பொண்ணு மா, எங்களுக்கு அதுல நம்பிக்கை இருக்கு, எப்படியும் அந்த உதவாக்கர பயலால 4 காசு சம்பாதிச்சி தர முடியாது, எங்கள புரிஞ்சிகுட்டு நீயாவது உதவி செய் னு சொல்லி எங்கள தனி குடுதினம் பண்ணிகொங்க னு சொல்லி அனுப்பிட்டாங்க.