இடை அழகி மேடம் சங்கீதா 1 235

“ Sir, நான் சொன்னதை தப்பா எடுத்துக்க வேண்டாம், நானும் ஏதோ எதேச்சையாக தான் சொன்னேன், உங்களை கிண்டல் செய்வதற்கில்லை. உங்க மனதிற்கு தவறாக பட்டால் மன்னிக்கவும்.”– சற்று தயக்கத்துடன் கூறினாள்.

“ மறுபடியும் Sir போட்டு கூப்பிடுறீங்களே Miz.சங்கீதா”– அவள் பெயர் இவனுக்கு தெரியாது, முகத்தை லேசாக சாய்த்து அவளின் மேஜை மீது இருக்கும் பெயர் பலகையில் “Sangeetha – Assistant Manager” ஐ பார்த்து விட்டு அவளிடம் கூறினான்.

“நான் மிஸ் இல்லை Mr.Raghav, மிஸ்ஸஸ்” என்று புன்னகைத்தாள்.

“நான் சொன்னது ஆங்கிலத்தில் Miz என்று, Miss க்கும் Miz க்கும் வித்யாசம் உள்ளது. Miz என்றால் கல்யாணம் ஆனவளாகவும் இருக்கலாம், இல்லை ஆகதவளாகவும் இருக்கலாம். நமக்கு ஒரு பெண் கல்யாணம் ஆனவளா இல்லை ஆகாதவளா என்று தெரியாத பொது இதை சொல்லலாம் Mrs.சங்கீதா..”– லேசாக சிரித்தான்..

உங்களிடம் பேசிக்கொண்டே இருந்தால் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது. உங்க வயசு 23 என்று சொன்னீர்கள், ஆனா எப்படி ஒரு கம்பெனிக்கு CEO ஆக இருக்கிறீர்கள்? அதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது….”–என்று சொல்லி மென்மையாக புன்னகைத்தாள்.

“ India one Fashion International என்னுடைய குடும்பம் நடத்துற கம்பெனி, its a big family tree, இருந்தாலும் குடும்பதுகுள்ளையும் நிறைய போட்டி இருக்கும். அதனால்தான் இன்னிக்கி கம்பெனி இந்திய அளவுல டாப் ரேங்க்கில் இருக்கிறது….அது மட்டும் இல்லாமல் ஒரு சில இடங்களில் சிறிய வயதில் எவளவோ சாதனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள், இதெல்லாம் சாதாரணம்..”– என்று சாதாரனமாக சொன்னான்.

“அப்போ உங்களுக்கு என் கணவர் குமார்…..” என்று சங்கீதா ஆரம்பிக்க அவனுடைய செல் போன் சினுங்கியது..

“ஹலோ, ஒஹ் சொல்லுங்க, ஓகே இதோ வந்துட்டேன், bank ல் cash deposit பண்ண வந்தேன், வேலை முடிஞ்சிது, இப்போ கிளம்பினால் சீக்கிரம் வந்துடுவேன்” என்று சொல்லி போன் கட் செய்துவிட்டு சங்கீதாவை பார்த்து நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே” என்றான்..

“ஒன்னும் இல்லைங்க, முக்கியமானது ஒன்னும் இல்லை..” என்று புன்னகைத்தாள்….