“சரி, உன்னை கடைசியா பார்ப்போம், முதல்ல அவனுங்களை பார்ப்போம். ” என்றவாறு அவள் கன்னத்தில் கிள்ளினேன். எதோ தோண கழுத்தில் கை வைத்தேன். நல்ல அனல். ” ரொம்ப ஃபீவர் இருக்கா”
“சரி, ரெஸ்ட் எடு, நான் dinner வாங்கிட்டு வரேன், ஏதும் சமைக்காத, சாப்பிட்டுட்டு டேப்லெட் போட்டு தூங்கு, காலைல என்ன பண்ணலாம் சொல்றேன்”
“உம்”
வெளியில் பூட்டி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்டு முடிக்க ஆர்த்தி phone வந்தது.
” ஏங்க, சுரேஷ் இப்போ தான் வந்தான், சாபிடுரான், முடிச்சதும் உங்களை பார்க்க வரட்டா?”
“அவனை 9 மணிக்கு மேல மாடி ரூமுக்கு வர சொல்லு, நீ இப்போ வா”
“ஏன்”
“அம்மாவுக்கு உடம்பு சரியில்லை போல, நல்ல காய்ச்சல், தலைவலி, ஆளு ரொம்ப tired ஆக இருக்காங்க, நீ பேசாம நைட்டு அம்மா கூட கம்பனிக்கு இரு”
“அது வந்து”
“உன் வீட்டுல நான் சொல்லிக்கிறேன், உடனே வா, இங்கேயே நைட்டு இருக்க மாதிரி”
“சரி” வந்தாள்.
“என்னாச்சு ஆன்டி” அம்மா நெற்றியை கழுத்தை தோட்டுப் பார்த்தாள், “நல்ல ஃபீவர், காட்டனுமா”
“இல்ல, இப்போ டேப்லெட் போட்டு இருக்கு, டின்னர் ஆச்சு, காலைல இருந்தா டாக்டர் கிட்ட போலாம்”
“அம்மா கூட படுத்துக்கோ, பார்த்துக்கோ”
“சரி” என்றவள் வெளியே என்னிடம் தனியாக மெதுவாக கேட்டாள்.
“ஏங்க, அவன் சுரேஷுக்கு ஏதும் பிரச்சினையா?? அவன் ஆளே ஒரு மாதிரி நடுக்கத்துல இருந்தான், நீங்க வேற அவனை பார்க்கணும்னு ரெண்டு மூணு தரம் இன்னைக்கு கேட்டீங்க”
“அவன் கிட்ட கேட்டியா??”
“உம், காலேஜ் பக்கம் எதோ சின்ன பிரச்சினை சொன்னான்”
அதையே நானும் மெயின்டெய்ன் செய்தேன். “ஆமா, கொஞ்சம் பிரச்சினை, போலீஸ் கேஸ் ஆனதா சொன்னாங்க”
“அய்யோ, இவனுக்கு ஏதும்”
அவள் இடுப்பில் கை போட்டு அனைத்து “நான் பார்த்துக்கிறேன், விடு”
” அவனை அடிச்சாவது திருத்துங்க, college போன பின்னாடி ஆளு ஒரு வருசமா சரியில்லை.”
“நான் பார்த்துக்கிறேன், விடு”
அப்போது தான் உணர்ந்தாள், அணைத்தபடி நின்று இருந்ததை “அய்யோ வராண்டால” என்று பதறி விலகினாள், யாரேனும் பார்க்கிறார்களா என பார்த்தாள், யாரும் இல்லை. நான் எதோ தோண வீட்டில் உள்ளே பார்த்தேன். அம்மா இவ்வளவு நேரம் எங்களைப் பார்த்தபடி இருந்தவள் நகர்ந்தாள்.
