எதிர்பாரா விதமாக கிடைத்த ஓய்வு – Part 4 78

“அவ என் வீட்டிலேயே இருக்கட்டும் என் பொண்ணு மாதிரி”

“புரியல amma’

“அவ உங்க வீட்டு பொண்ணு இல்ல, இனி எங்க வீட்டு பொண்ணு”

“அம்மா, அது… ” என இழுத்தவர் புரிந்து டக்கென எழுந்து அம்மாவின் காலில் விழுந்தார். குறைந்தது ஒரு ஏழெட்டு வருடமாவது பெரியவர் ஆக இருப்பார்.

“அம்மா, உங்க குடும்பம் எங்கே, என் பொண்ணு எப்படி”

“அய்யோ எந்திருங்க” என பதறினாள்.

“இல்ல உங்க பெரிய மனசு வராதும்மா யாருக்கும்” என்றபடி என்னைப் பார்த்து “தம்பி சார்” என நகர

எனக்கு எங்கே இந்த மனிதன் என் காலிலும் விழுந்து விடுவாரோ என தோணியது, சங்கடமாக இருந்தது. பின்னே நகர்ந்த படி

“முதல்ல எந்திருங்க சார்” என்றேன்.