எதிர்பாரா விதமாக கிடைத்த ஓய்வு – Part 4 78

“சுரேஷ் என்ன பண்றான்”

“கண்ணுகிட்ட அடி, டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொன்னாரு இல்ல, அதான் வீட்டில தான் இருக்கான், தேடறதுக்கு அவனும் போறேன்னு சொல்றான், அது தான் நான் உங்களுக்கு வேற வழியில்லாம பண்றேன்.”

“பரவால்ல, நீ அவனை ரெடி யா இருக்க சொல்லு, அவன் வண்டிலாம் ஓட்ட வேணாம், என் கூட வர சொல்லு, ரெண்டு பேரும் போயி தேடரோம்”

காரில் ஏறியதும் சுரேஷ் சொன்னான் “அண்ணா, அந்த area முதல்ல தேடலாம்”

“வேணாம், நாம GH போலாம், மதியம் அந்த area வில ஒரு ஆக்ஸிடென்ட் சொன்னாங்க, நாம பார்த்துடலாம்”

“அண்ணா, என்ன ஆக்சிடென்ட், என்னாச்சு” சற்றே பதட்டமானான்.

“ஒரு லாரி கார் ஆக்ஸிடென்ட், கார்ல இருந்த 3 பேர் ஸ்பாட் அவுட்டு, ரெண்டு பசங்க, ஒரு லேடி”

“ஓ” என்றான்.

“அந்த பசங்கள்ள ஒருத்தன் தினேஷ்”

“அண்ணா” அதிர்ச்சியாக கேட்டான்.

“நாம போயிப் பார்ப்போம், அது உன் அம்மாவா இல்லையான்னு பார்த்தா தான் தெரியும், இப்பவே எதையும் நினச்சு பயந்துக்காதே”

தட்டிக் கொடுத்தேன்.
அவன் எதுவும் பேசாமல் இருப்பினும் மிகுந்த வருத்தத்தில் இருந்தான் என பட்டது.

சென்று பார்த்தோம். அவள் தான். அவளின் போன் மிஸ் ஆகி இருந்தது, நாங்கள் போன சமயத்தில் தான் தினேஷ் சித்தப்பா அவரும் எங்களுக்குப் பின்னர் வந்தார். அடையாளம் காட்டினார். உடன் இருந்த கார் ஓட்டியவன் யாரென்று அவருக்கு தெரிய வில்லை. தினேஷ் க்கு நிறைய நண்பர்கள் உண்டு, சிலரைத் தான் தனக்கு தெரியும், இவனை தெரியவில்லை என்றார்.

நாங்கள் சுரேஷின் அப்பாவை ஹாஸ்பிடல் வர சொன்னோம், ஆர்த்திக்கும் போன் செய்து “அவளின் அம்மாவுக்கு ஆக்ஸிடென்ட்” என்பது மட்டும் சுரேஷை சொல்ல செய்தேன். அம்மாவிற்கு போன் செய்து மதியம் தினேஷ் உடன் இருந்த இறந்த பெண் சுரேஷின் அம்மா என்று சொன்னேன். ஆர்த்தி க்கு துணையாக அவள் வீட்டிற்கு செல்ல சொன்னேன். இவன் சுரேஷ் பிரமை பிடித்தவன் போல இருந்தான். வற்புறுத்தி காபி சாப்பிட வைத்து திரும்ப அவனின் அப்பா வந்தார், செய்தி அறிந்து அவரின் அழுகை பார்க்க சகிக்க வில்லை.

போஸ்ட் மார்ட்டம் மற்றவை முடிந்து கிடைக்க காலை சற்று லேட் ஆகும் என்று சொன்னார்கள். சுரேஷ் அப்பா அவரின் நண்பர்கள் சிலருக்கு சொல்ல வந்தனர். அவர்களோடு அவரை அங்கே விட்டு சுரேஷ் உடன் வீட்டிற்கு கிளம்பினேன். “நான் இங்கேயே இருக்கேன் அண்ணா”

“டேய், அப்பா இங்க பார்த்துப்பாரு, நீ வீட்ல ஆர்த்தி கூட இரு, அங்க கொஞ்சம் arrangement பண்ணனும், சொந்தக் காரங்க கிட்ட சொல்லணும். நீ வீட்டுக்கு வந்தா தான் முடியும்”

சுந்தர் சாரிடம் அங்கே உள்ளதை கவனிக்குமாறும் மற்ற உறவினர்களிடம் தகவல் சொல்வது, மற்ற ஏற்பாடுகள் பார்த்துக் கொள்வதாக சொல்லி கிளம்பினோம்.

“ப்ரெண்ட் வீட்டுக்கு போறப்போ வழில யார் வண்டிலயோ லிஃப்ட் கேட்டு போகும்போது ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு” என்பதாக தான் ஆர்த்தி இடம் சொன்னோம், மற்ற எல்லா உறவினர்களுக்கும் கூட அதே தான்.

பிணம் அனைத்து பார்மலிடி முடிந்து வீட்டுக்கு வர மதியம் ஆனது, அதற்கு முன்னே பெரும்பாலும் எல்லா உறவினரும் நண்பர்கள் வர பிணம் வந்த ஒரிரு மணியிலேயே எல்லாம் முடிந்து இறுதிக் காரியங்கள். கடைசி வரை அம்மா ஆர்த்தி உடனே இருந்தாள். அனைத்தையும் சரியாக manage செய்தாள்.