அவன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை. கடந்த ஒரு மாதமாகவே அவனுடைய உலகம் அந்த காலண்டரைச் சுற்றியே சுழன்றது. சரியாக முப்பது நாட்களுக்கு முன்னால்… “இன்னும் 28 நாள்… இன்னும் 20 நாள்…” என்று ஒவ்வொரு நாளையும் அவன் ஆசையோடு குறித்துக் கொண்டு வந்தான்.
அவன் மனதுக்குள் ஒரு பெரிய போர்க்களமே நடந்து கொண்டிருந்தது. அந்தச் சின்னஞ்சிறு வயதில், தன் 16 வயதிலேயே தந்தையை இழந்து, குடும்பப் பாரத்தைச் சுமந்து, இந்த பாலைவன தேசத்திற்கு வந்தவன். அவன் இங்கிருந்து அனுப்பும் ஒவ்வொரு ரூபாயும், அந்தச் செங்கல் வீட்டுச் சுவரில் ஒரு கல்லாக மாறியது. அவனது வியர்வைதான் அவன் தங்கை நந்தினியின் கழுத்தில் மின்னும் சிறு நகையாக மாறியது.
“அம்மா… உன்னையும் நந்தினியையும் பார்க்கணும்னு என் உசிரே துடிக்குதுமா. இன்னும் ரெண்டே நாள்தான்..
கடிதத்தின் மூலமாக மட்டுமே தன் அன்பைப் பரிமாற முடியும் என்ற காலம் அது. ஒரு கடிதம் போய்ச் சேரவே பத்து நாட்களாகும். அவன் போட்ட அந்த கடைசி கடிதம் அம்மாவையும் தங்கையையும் எப்படி ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தான்.
அவனுடைய சூட்கேஸ் ஏற்கனவே தயாராக இருந்தது. தங்கைக்குப் பிடித்தமான வெளிநாட்டுத் துணிகள், அம்மாவுக்கு ஒரு நல்ல புடவை என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து அடுக்கினான். அந்த அறையில் இருந்த அவனுடைய நண்பர்கள், “என்ன ராசகுட்டி… இன்னைக்கே கிளம்பிட்ட மாதிரி ஒரு சந்தோஷம் முகத்துல?” என்று கேலி செய்தார்கள்.
ஆமாம், அவனுக்குச் சந்தோஷம்தான்! இன்னும் நாற்பத்தி எட்டு மணி நேரத்திற்குப் பிறகு, அவன் அந்தக் கோவை மண்ணில் காலடி எடுத்து வைப்பான். தன் ஆசைத் தங்கையை அள்ளி அணைத்துக் கொள்வான், அம்மாவின் மடியில் தலை சாய்த்துத் தூங்குவான். அந்த நினைப்பே அவனை உறங்க விடாமல் செய்தது.
அந்தச் சிறிய அறையில், தன் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்த ராசகுட்டியின் கைகள் ஒரு நிமிடம் நடுங்கின. பீரோவின் ஒரு ஓரத்தில், யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ஒரு துணி… அது வெறும் துணி அல்ல, அவனது உயிர் மூச்சு!
மெல்ல அதை வெளியே எடுத்தான். அது ஒரு பழைய, ஆங்காங்கே கிழிந்த பருத்திச் சேலை. அந்தச் சேலையைத் தன் முகத்தோடு அழுத்திப் பிடித்து, ஆழமாகச் சுவாசித்தான்.
“ஆஆஅ… அத்தை…” அவனது அடிவயிற்றிலிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பியது. அந்தச் சேலையில் இன்னும் அந்த மணம் மாறாமல் அப்படியே இருந்தது. அது அவனுடைய அத்தை மலர் பயன்படுத்தியது. அவனுக்கு அம்மாவின் மேல் பாசம் உண்டு, தங்கை மேல் உயிர் உண்டு. ஆனால், இந்த மலர் அத்தை? அவளிடம் அவனுக்கு இருந்த அந்தப் பிணைப்பு விவரிக்க முடியாத ஒன்று.
அந்தச் சேலையின் வாசனையை நுகர்ந்தபடியே பெட்டில் சாய்ந்த ராசகுட்டியின் கண்கள் மெல்ல மூடின. நினைவுகள் அப்படியே பின்னோக்கிச் சென்றன… நான்கு வருடங்களுக்கு முன்னால்!
அப்போது அவனுக்கு இருபத்தி இரண்டு வயது கூடத் தொடங்கவில்லை. அந்தச் சிறிய செங்கல் வீட்டின் கொல்லைப்புறத்தில், நிலவில்லாத அந்த இரவில் நடந்த அந்தச் சம்பவம் அவனது வாழ்க்கையையே மாற்றிப் போட்டது.
அவன் அந்தப் பழைய கிழிந்த சேலையின் வாசனையில் மூழ்கியிருக்க, நினைவுகள் 1990-களின் தொடக்கத்திற்குப் பின்னோக்கி ஓடின.
அந்தக் கிராமத்திலேயே மலர் அத்தைக்கு நிகர் அவள்தான். பெயர் மலர்விழி. பூப்போன்ற முகம் மட்டுமல்ல, அந்த ஊரே வியந்து பார்க்கும் படியான வாளிப்பான உடல் அமைப்பும் அவளுக்கு ஒரு தனி அழகைத் தந்தது.
அவளைத் திருமணம் செய்துகொள்ள அந்த ஊரே தவம் கிடந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அந்த மலரோ பழனியாண்டி என்பவனிடம் தன் மனதைப் பறிகொடுத்திருந்தாள்.
ராசகுட்டியின் அப்பா மாணிக்கத்திற்கு இந்தச் செய்தியைக் கேட்டதும் ரத்தம் கொதித்தது.
“மலர்… அந்தப் பழனியாண்டி சரியான குடிகாரன்டி! ஊருக்கே தெரிஞ்ச விஷயம் இது. அவன் கூடப் போனா உன் வாழ்க்கை நரகமாயிடும். அந்தப் பயலை மறந்துடு,”
