கண்ணாமூச்சி 4 70

வனக்கொடியிடம் சொல்லிவிட்டு மாடிக்கு படியேறினாள் ஆதிரா.. அறையை அடைந்தவள் சிபியை கீழே அனுப்பினாள்..!! ஈரக்கூந்தலை உலர்த்தலாம் என்று பால்கனிக்கு வந்தவள்.. வீட்டுக்கு முன்புறம் ஓடிய குழலாற்றை காண நேரிட்டதுமே.. வந்தவேலையை மறந்துவிட்டு வேறு சிந்தனைகளில் மூழ்கிவிட்டாள்..!! அதே குழப்ப சிந்தனைகள்தான்.. குழலாற்றுக்குள் சற்றுமுன்பு வீழ்ந்தெழுந்த வினாடிகள்.. குறிஞ்சியைப்பற்றி சிறுவயதுமுதல் கேள்விப்பட்ட புனைவுகள்.. அகழி வந்ததுமுதல் அடுக்கடுக்காக நடந்த சம்பவங்கள்.. ‘அக்காஆஆ’ என்று காதுக்குள் ஒலிக்கிற தாமிராவின் ஏக்கக்குரல்..!!

ஆதிரா உணர்ச்சிக் கொந்தளிப்புடன் உடல் சிலிர்க்க நின்றிருந்தாள்..!! அவளும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. ஆற்றங்கரை புல்வெளியில் இருவரும் ஆடிய கண்கட்டி விளையாட்டு.. இப்போது அவளுடைய ஞாபகத்துக்கு வந்தது..!! அதோ.. ஆற்றோரத்தில் கிளைகள் விரித்து அகலமாக நின்றிருக்கும் அந்த மரத்தின் அடிவாரத்தில்தான்..!! கண்களில் கருப்புத் துணியை கட்டிக்கொண்டு.. காற்றில் கைகள் அசைத்து தங்கையை தேடியவாறே.. குயிலின் குரலில் பாடினாள் சிறுமி ஆதிரா..!!

“கட்டிலும் கட்டிலும் சேர்ந்துச்சா..??”

“சேர்ந்துச்சு.. சேர்ந்துச்சு..!!”

– அக்காவின் பிடியில் சிக்கிக்கொள்ளாமல்.. அவர்களை சுற்றி வரையப்பட்டிருந்த சிறுவட்டத்துக்குள் அங்குமிங்கும் ஓடியவாறே.. வாய்கொள்ளா சிரிப்புடன் பதில்ப்பாட்டு பாடினாள் குட்டி தாமிரா..!!

“காராமணி பூத்துச்சா..??”

“பூத்துச்சு.. பூத்துச்சு..!!”

“வெட்டின கட்டை தழைச்சுச்சா..??”

“தழைச்சுச்சு.. தழைச்சுச்சு..!!”

“வேரில்லா கத்திரி காய்ச்சுச்சா..??”

“காய்ச்சுச்சு.. காய்ச்சுச்சு..!!”

3 Comments

  1. Sema story

  2. Complete the story fast it is boring

  3. Complete the story fast it is too much boring

Comments are closed.