கண்ணாமூச்சி 4 48

இப்போது பாறையில் அந்த உருவத்தை காணவில்லை.. சுற்றிநின்ற பறவை, விலங்குகளையும் காணவில்லை.. அமைதியாக, இருட்டாக வெறிச்சோடிப்போய் இருந்தது அந்த இடம்..!!

“எ..எங்க ஆதிரா..??”

“அ..அங்க.. அந்தப் பாறைல..!!”

“பாறைல எதுவும் இல்லயேடா..!!”

சிபி அந்தமாதிரி சாந்தமாக சொன்னதும்தான்.. ஆதிரா அவனுடைய மார்பிலிருந்து எழுந்தாள்..!! அவளுடைய முகம் வியர்த்துப்போய் பயம் அப்பிக்கொண்டு காட்சியளித்தது..!! இன்னும் மிரட்சி குறையாத கண்களுடனே ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.. அங்கே இப்போது அந்த உருவத்தை காணவில்லை என்றதும்.. அவளிடம் ஒரு திகைப்பு.. மூளைக்குள் ஒரு குழப்பம்..!!

“அ..அங்க.. அந்த பாறைலதான் அத்தான் குறிஞ்சி உக்காந்திருந்தா.. நா..நான் பார்த்தேன்..!!”

“அங்க யாரும் இல்லடா..!! நீயா ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டன்னு நெனைக்கிறேன்..!!”

“ஐயோ.. இல்லத்தான்.. நான் பார்த்தேன்.. என் ரெண்டு கண்ணால பார்த்தேன்..!!”

“ப்ச்.. பாருடா.. நான் சொல்றதை கொஞ்சம் கேளு..!!”

“பார்த்தேன் அத்தான்.. செவப்பு அங்கி போத்திருந்தா.. பாறைல உக்காந்திருந்தா.. சுத்தி ஒரே புகையா இருந்துச்சு..!!”

“ஆதிரா ப்ளீஸ்..!!” சிபி எரிச்சலடைவதை உணராமல்,

“நாய் நரி காக்கா கரடின்னு என்னன்னவோ மிருகம்லாம் சுத்தி உக்காந்திட்டு இருந்துச்சு.. அவ பேசுறதை கேட்டுட்டு இருந்துச்சு..!! எனக்கு ஒருநிமிஷம் அபப்டியே ஹார்ட்டே நின்னு..” ஆதிரா தொடர்ந்து புலம்பிக்கொண்டிருக்க,

“ப்ளீஸ் ஆதிரா.. ஸ்டாப் இட்.. ப்ளீஸ்..!!!!” அவன் பொறுமையிழந்து கத்தினான்.

ஆதிரா இப்போது பட்டென்று அமைதியானாள்.. கணவனின் முகத்தையே பரிதாபமாக ஏறிட்டாள்.. அவனும் இவளுடைய முகத்தையே கவலையும், தவிப்புமாய் பார்த்தான்..!! அப்புறம் ஆதிராவின் கூந்தலை இதமாக கோதிவிட்டவாறே.. குரலில் சற்று கடுமையை குறைத்துக் கொண்டு சொன்னான்..!!

“இதுதான்.. இதுக்குத்தான் இங்க வரவேணாம்னு நான் சொன்னேன்.. கேட்டியா நீ..?? அடம்புடிச்சு கூட்டிட்டு வந்த.. இப்பப்பாரு..!! தேவையா இதெல்லாம்..??”

“……………………”

“பேசாம காலைலயே மைசூர் கெளம்பிடலாம்..!!”

சிபி அந்தமாதிரி சொன்னதும் ஆதிராவுக்கு சுருக்கென்று இருந்தது.. அகழியில் ஐந்தாறு நாட்கள் தங்கியிருக்கலாம் என்ற அவளது ஆசைக்கு பங்கம் வந்துவிடுமோ என்றொரு பயம் பிறந்தது..!! ஓரிரு நாட்களாக நடந்த சம்பவங்கள் அவளுக்குள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தன.. அந்த குழப்பத்திற்கு விடை தெரிந்துகொள்கிற ஆர்வம் அவளுடைய மனதைப்போட்டு அரித்துக் கொண்டிருந்தது..!! இந்த நிலையில் அகழியில் இருந்து கிளம்ப அவளுக்கு விருப்பமில்லை.. கணவனை சமாளிப்பதுதான் சரியான வழி என்று தோன்றியது..!!

“ச..சரித்தான்.. விடுங்க.. நான்தான் எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டேனா இருக்கும்..!! இதை இத்தோட விட்றலாம்..!!” என்று சமாதானமாக சொன்னாள்.

“எப்படி விடுறது..?? நடுராத்திரில எந்திரிச்சு ‘ஆ’ன்னு கத்துற.. குறிஞ்சியை பார்த்தேன்னு ஹிஸ்டீரியா பேஷன்ட் மாதிரி பொலம்புற..!! எப்படி ஈஸியா விடமுடியும்..??”

“ப்ச்.. நான்தான் சொல்றேன்ல..!! கெட்டகனவு வந்து முழிப்பு வந்துடுச்சு அத்தான்.. அதோட தண்ணி குடிக்கலாம்னு கீழ வந்தேன்.. ஜன்னல் கதவை மூடலாம்னு இங்க வந்தேன்.. ஏதோ கன்ஃப்யூஷன்ல நானா எதையோ கற்பனை பண்ணிக்கிட்டேன்னு நெனைக்கிறேன்.. அவ்வளவுதான்.. பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்ல.. விடுங்க..!!”

ஆதிரா அவ்வாறு அமர்த்தலாக சொல்லவும்.. சிபி அவளையே இமைகொட்டாமல் பார்த்தான்..!! இப்போது அவனுடைய இதழ்களில் மெலிதான ஒரு புன்னகை அரும்பியது.. குனிந்து மனைவியின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தான்..!! அவளுடைய கன்னத்தை இதமாக வருடியவாறே..

“நீ எதுக்குடா கீழ தனியா வந்த.. என்னை எழுப்பிருக்கலாம்ல..??” என்று கனிவாக கேட்டான்

3 Comments

Add a Comment
  1. Sema story

  2. Complete the story fast it is boring

  3. Complete the story fast it is too much boring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *