கண்ணாமூச்சி 4 48

“சரி.. நாலு பேராவது கம்ப்ளயின்ட் குடுத்திருக்காங்களே.. அதுல..”

“ஒருத்தரக்கூட இன்னும் கண்டுபிடிக்க உங்களுக்கு துப்பு இல்லையேன்றீங்களா..??”

“ஐயோ.. அப்படி சொல்லல ஸார்..!!”

“பரவால.. சொல்லிக்கங்க..!! நீங்க என்னவேணா சொல்லிக்கங்க.. என்னவேணா நெனைச்சுக்கங்க..!! எனக்கும் கவலை இல்ல.. எங்க டிப்பார்ட்மன்ட்டுக்கும் கவலை இல்ல..!! நான் சொல்லிக்கிறதுலாம் ஒண்ணுதான்..!!”

“எ..என்ன..??”

“உங்க ஊர்க்காரய்ங்க ஒத்துழைப்பு இல்லாம.. எங்களால ஒன்னும் செய்ய முடியாது..!! காணாமப்போனா கம்ப்ளயின்ட் குடுக்கக்கூட வர மாட்டேன்றாய்ங்க.. அப்படியே கம்ப்ளயின்ட் வந்து விசாரிக்கப்போனா, ஒருத்தனும் வாயை தெறக்க மாட்டேன்றாய்ங்க..!! ஏதாவது சொல்லிட்டா எங்க அடுத்து குறிஞ்சி நம்மள தூக்கிட்டு போயிருவாளோன்னு எல்லாப்பயலுக்கும் பயம்..!! இவய்ங்கள வச்சுக்குட்டு என்னத்த பண்ணச் சொல்றிங்க..??”

“………………………..”

“குறிஞ்சின்ற பயத்தை விட்டு அவய்ங்க என்னைக்கு வெளில வர்றாய்ங்களோ.. அன்னைக்குத்தான் எங்களாலயும் எதாவது செய்ய முடியும்..!! அதுவரைக்கும் நீங்க என்னவேணா நெனைச்சுக்கங்க.. என்னவேணா பண்ணிக்கங்க..!!”

“உ..உங்க கோவம் புரியுது ஸார்..!! பட்.. தாமிரா கேஸ்ல நீங்க சொல்ற மாதிரி எதுவும் நடக்கலையே.. கண்ணால பாத்த சாட்சி வனக்கொடி.. அவங்க உங்க விசாரணைக்குலாம் ஒழுங்காத்தான கோவாப்ரெட் பண்ணுனாங்க..??” ஆதிரா கேட்க, அவளை கூர்மையாக ஒரு பார்வை பார்த்தார் வில்லாளன்.

“யாரு.. அந்த.. கோழிய திருட்ன மாதிரியே முழிக்குமே அந்த பொம்பளையா..??”

“ஆ..ஆமாம்..!!”

“அந்த பொம்பளையை பத்தி மட்டும் பேசாதிங்க.. கடுப்பா இருக்கு எனக்கு..!!”

“ஏன் ஸார்..??”

“பின்ன என்ன.. சும்மா கிளிப்புள்ள மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்துச்சு.. அப்டியே செவுள்ல நாலு அப்பு அப்பலாமான்னு இருந்துச்சு எனக்கு..!!”

“எ..என்ன ஸார் சொல்றீங்க..??”

“அந்த பொம்பளை சரியில்லைங்க.. எதையோ மறைக்குது.. பொய் சொல்லுது.. எனக்கு நல்லாத்தெரியும்..!!”

“ஐயோ.. அவங்க அப்படிப்பட்டவங்க இல்ல ஸார்..!!”

“ஹ்ஹ்ஹ்ம்ம்..!! இதுக்குமேல நான் என்னத்த சொல்றது..?? அந்த பொம்பளைட்ட ஏதோ தப்பு இருக்குன்னு மட்டும் எனக்கு தெரிஞ்சது.. ஆனா என்னன்னுதான் ஒன்னும் புரியல..!! நானும் என்னால முடிஞ்சளவுக்கு துருவித்துருவி விசாரிச்சுப் பாத்தேன்.. ம்ம்ம்.. புண்ணியமே இல்ல..!! நீங்க என்னடான்னா அந்த பொம்பளைக்கு சர்டிபிகேட் குடுக்குறிங்க..!!”

“ச..சரி ஸார்.. அதெல்லாம் விடுங்க.. அவங்க பொய் சொல்றாங்கன்னே வச்சுப்போம்..!! என் தங்கச்சியை கண்டுபிடிக்க நீங்க வேறென்ன ஸ்டெப்ஸ்லாம் எடுத்திங்க.. அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்க.. ப்ளீஸ்..!!”

ஒருவழியாக முக்கியமான விஷயத்திற்கு வந்தாள் ஆதிரா..!! அதுவரை எகத்தாளமாக பேசிக்கொண்டிருந்த வில்லாளன்.. அதன்பிறகு சற்று அடக்கியே வாசித்தார்.. வீராப்பாக பேசுமளவிற்கு விஷயம் எதுவும் அவரிடம் இல்லை என்பதுதான் காரணம்..!! தாமிராவின் புகைப்படத்தை மற்ற ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைத்தது.. அவளுடைய கல்லூரியிலும், தோழிகளிடமும் விசாரித்தது.. அகழி காட்டுக்குள் ஒருவாரம் தேடுதல் வேட்டை நடத்தியது.. இதைத்தவிர சொல்லிக்கொள்கிற மாதிரி எந்த உருப்படியான தகவலும் அவர் தரவில்லை..!!

“பேயை நம்புறதுக்கு போலீஸை நம்ப சொல்லுங்க உங்க ஊர்க்காரய்ங்கள.. அப்பத்தான் உங்க ஊருக்கும் ஒரு விடிவுகாலம் பொறக்கும்..!!”

3 Comments

Add a Comment
  1. Sema story

  2. Complete the story fast it is boring

  3. Complete the story fast it is too much boring

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *