கண்ணாமூச்சி 4 57

அட்லாஸ்டாக ஒரு அட்வைஸை அள்ளிப்போட்டு.. ஆதிராவையும் சிபியையும் அனுப்பி வைத்தார் வில்லாளன்..!! ஸ்டேஷனை விட்டு வெளியே வந்த இருவரும்.. தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்..!! காரில் ஏறி அமர்ந்ததும்.. ஆதிரா சற்றே எரிச்சலாக சொன்னாள்..!!

“பேச்சுத்தான் பெருசா இருக்கு.. ஆக்க்ஷன் ஒன்னத்தையும் காணோம்..!!”

“ம்ம்.. ஆமாம் ஆதிரா.. ரொம்ப அசால்ட்டாத்தான் பேசுறாரு..!! அதில்லாம.. இதுல இன்னொரு மேட்டரும் இருக்கு..!!”

“என்ன..??”

“டெட்பாடி கெடைச்சாத்தான் மர்டர் கேஸ்.. அதுவரை எல்லாமே மிஸ்ஸிங் கேஸ்தான்..!! போலீஸ் கொஞ்சம் மெத்தனமாத்தான் இருக்கும்..!!”

“ம்ம்.. புரியுதுத்தான்..!!”

அடுத்த அரைமணி நேரத்துக்கெல்லாம்.. அவர்களுடைய கார் அகழியை நெருங்கியிருந்தது..!! அகழிக்கு செல்கிற சாலை.. களமேழிக்கு பிரிகிற சாலை.. ஊட்டியை சேர்கிற சாலை என.. மூன்று சாலைகளும் சந்தித்துக்கொள்கிற இடத்தை அடைந்திருந்தது..!! முச்சாலை சந்திப்பின் ஒருபக்கம் குழலாறு ஓடிக்கொண்டிருந்தது.. ஆற்றின் அடுத்த கரையில் பிரம்மாண்டமாக நின்றுகொண்டிருந்தது சிங்கமலை..!!

“காரை ஸ்டாப் பண்ணுங்கத்தான்.. எதாவது சாப்பிட்டு போகலாம்.. பசிக்குது..!!” என்றாள் ஆதிரா.

மனைவி சொன்னதும் காரின் வேகத்தை குறைத்து.. சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தினான் சிபி..!! இருவரும் காரை விட்டு வெளியே இறங்கினார்கள்..!! இரண்டே இரண்டு சாலையோர கடைகள்தான் இருந்தன அந்த இடத்தில்.. ஒன்று தேநீர்க்கடை.. இன்னொன்று பழக்கடை..!! ஆதிராவும் சிபியும் பழக்கடையை அணுகினார்கள்..!! பீச், ப்ளம்ஸ், மங்குஸ்தான், அண்ணாச்சி, பப்பாளி, திராட்சை என.. பலவகையான பழங்களை சிறுசிறு துண்டங்களாக்கி.. அதை ஒரு பெரிய பிளாஸ்டிக் கிண்ணத்தில் நிரப்பி விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்..!! அதை முழுவதும் சாப்பிட்டால் குறைந்தது நான்கு மணி நேரத்திற்கு பசியெடுக்காது..!!

“நான் ஒரு பவ்ல் சாப்பிடுறேன்.. உங்களுக்கு..??” ஆதிரா கேட்க,

“எனக்கு வேணாம் ஆதிரா.. நீ மட்டும் சாப்பிடு..!!” பதில் சொன்ன சிபி கடைக்காரனிடம் திரும்பி,

“எவ்வளவுப்பா..??” என்று கேட்டான்.

“நாப்பது ரூவா ஸார்..!!”

சிபி கடைக்காரனுக்கு பர்ஸில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான்.. அவன் பழங்கள் நிரம்பிய கிண்ணத்தை ஆதிராவிடம் நீட்டினான்..!! நிஜமாகவே ஆதிராவுக்கு நிறைய பசியெடுத்திருக்க வேண்டும்.. அவசர அவசரமாக அந்த பழங்களை விழுங்கி காலி செய்துகொண்டிருந்தாள்..!! சிபியோ கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டியவாறு.. சிறுபிள்ளைபோல மனைவி சாப்பிடுகிற அழகையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்..!!

“வாவ்…!!!” என்றான் திடீரென.

“என்னத்தான்..??” வாயில் போட்ட பழத்துடன் கேட்டாள் ஆதிரா.

“அ..அங்க பாரேன்..!!”

“என்ன..??”

“பட்டர்ஃப்ளை ஆதிரா..!!”

அவன் கைநீட்டிய திசையில் அந்த பட்டாம்பூச்சி காட்சியளித்தது.. அதன் சிறகில் அப்படியொரு அழகுக்கலவையான பலவண்ண பூச்சுக்கள்.. இப்போது ஒரு செடியில் சென்றமர்ந்து மெலிதாக சிறகசைத்துக் கொண்டிருந்தது..!!

“எவ்வளவு அழகா இருக்கு பாரேன்..!!” சொல்லும்போதே சிபியிடம் அப்படி ஒரு உற்சாகம்.

“ம்ம்.. ஆமாத்தான்..!!” கணவனின் உற்சாகம் ஆதிராவையும் தொற்றிக் கொண்டது.

“ச்ச.. அப்படியே அந்த பட்டாம்பூச்சியாவே நானும் மாறிடலாம் போல இருக்கு..!!”

“ம்ம்.. நல்ல ஆசைதான்.. ஹாஹா..!!”

“ஹேய்.. இரேன்.. நான் போய் கேமரா எடுத்துட்டு வந்துடுறேன்.. எனக்கு இதை ஃபோட்டோ எடுத்தே ஆகணும்..!!”

3 Comments

  1. Sema story

  2. Complete the story fast it is boring

  3. Complete the story fast it is too much boring

Comments are closed.