அடுத்து போகும் வழியில் வழுக்கு பாறை அருகே ஒடை நீரை குடித்து தாகத்தை தீர்த்து கொண்டார்கள்..
ஆள் அரவமற்ற பாதையில் நடந்து செல்லும் பொழுது கொஞ்சம் பயமாக இருந்தது அவர்களுக்கு..வெறும் பறவைகளின் கீறிச்சிடும் சத்தம் மட்டும் கேட்டது..
வழுக்கு பாறை தாண்டிய உடன்,மலையேற்றம் செங்குத்தாக ஆரம்பித்தது..தினமும் இந்த வழி செல்லும் காமினியே அங்கங்கே உட்கார்ந்து ஓய்வு எடுத்து செல்வது வழக்கம்.ஆனா மூணு பேரும் அவளுக்கு சரிசமமாக நடந்தனர்.ஓய்வு எடுக்கலாமா என்று கேட்கவே இல்லை.கடைசியில் “கொஞ்சம் ஓய்வு எடுத்து செல்லலாமா”என்று வாய் திறந்து காமினியே கேட்டு விட்டாள்..
எல்லோரும் ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர்..
காமினி மூவரை ஆச்சரியமா பார்த்தாள்..
“வழக்கமா இங்கே வரும் சிட்டி ஆட்கள் எல்லாம் மலை ஏறவே கஷ்டபடுவாங்க.வாயில் அவர்களுக்கு நுரை தள்ளும்..ஆனா நீங்க எப்படி இவ்வளவு சக்தியோடு இருக்கீங்க..”என காமினி கேட்க,
மூவரும் ஒன்றும் சொல்லாமல் சிறு புன்னகை மட்டுமே சிந்தினர்.
ஆராதனா மனதுக்குள்,”அனு,மற்றும் எனக்கு காத்தவராயன் சக்தி உடம்பில் ஏறி இருக்கு,அதனால் எங்களுக்கு அவ்வளவு கஷ்டம் தெரியல..ஆனா லிகிதாவுக்கும் சக்தி இருக்கே..பஸ்ஸில் வரும் பொழுது என்ன பேச்சும் கொடுத்தும் அவகிட்ட எந்த ரகசியமும் கறக்க முடியவில்லையே என்று ஆராதனா நினைத்தாள்.
மூவரும் ஓய்வு எடுத்து கொண்டு இருக்க,ஒரு பன்றியின் அலறல் சத்தம் கேட்டது..கொஞ்சம் கொஞ்சமா சத்தம் பெரிதாகி கொண்டே வந்தது..
காமினி உஷாராகி,”உடனே எல்லோரும் எழுந்திருங்க,எல்லோரும் சீக்கிரம் அந்த பெரிய பாறை மீது ஏறுங்க..”என பயத்தில் கத்தினாள்..
செடி,கொடிகளை கிழித்து கொண்டு குன்று போல ஒரு பெரிய பன்றி ஒடி வந்தது..
“எப்படி ஏறுவது என அவர்கள் முழிக்க,காமினி முட்டி போட்டு உட்கார்ந்து என் தோள் மீது கால் வச்சி சீக்கிரம் ஏறுங்க”என கத்தினாள்.
ஆராதனா, காமினி தோள் மீது கால் வைத்து ஏற,காமினி அவளை சுமந்து கொண்டு மெல்ல எழுந்தாள்.இப்போ பாறையின் நுனி ஆராதனா கைக்கு எட்டியது.அதை பிடித்து கொண்டு ஆராதனா தாவி ஏறினாள்.அடுத்து அனு ஏறுவதற்குள் பன்றி வந்து அவர்கள் முன்னே வந்து விழுந்தது..பன்றியின் முதுகில் இரத்த காயங்கள் இருந்தன..
கடைசியாக லிகிதா ஏறும் பொழுது சிறுத்தை அங்கே பாய்ந்து வர,லிகிதா பயத்தில் கீழே விழுந்து விட்டாள்..பாய்ந்து வந்த சிறுத்தைக்கும்,பன்றிக்கும் பெரிய சண்டை வந்தது..பன்றி தன் உயிரை காத்து கொள்ள கூரான தந்தங்களை காட்டி சிறுத்தையை மிரட்டியது..அதன் மூச்சு காற்றை பெரிதாக விட்டு,காலால் தரையை கீறியும்,தந்தத்தால் பூமியை குத்தியும்,புழுதியை கிளப்பி தன் எதிர்ப்பை காண்பித்தது..
நீ கிட்டே வந்தே,உன் குடலை குத்தி கிழித்து விடுவேன் என பன்றி தன் செயலில் சொன்னது..
தன் இடுப்பில் இருந்த கத்தியை காமினி தடவி பார்க்க,அங்கே இல்லை.இருவரை மேலே ஏற்றும் பொழுது கத்தி தவறி சற்று விழுந்து இருப்பதை பார்த்தாள்.அதை எடுக்க மெதுவா காமினி நகர,சிறுத்தை அவளை பார்த்து உறுமியது .காமினி அப்படியே அசையாமல் நின்று விட்டாள்.
பன்றியை கொல்வதை விட,இவர்களை கொல்வது எளிது என சிறுத்தை முடிவு பண்ணி,காமினியை நோக்கி பாய்ந்தது..இது தான் சமயம் என பன்றி தாவி தப்பித்து ஓடியது
“தான் செத்தோம்”என காமினி ஒரு நிமிசம் கண்ணை மூட,அங்கே ஒரு அதிசயம் நிகழ்ந்தது.
அதை பாத்து,அனு,ஆராதனா இருவரும் திகைத்து விட்டனர்.
சிறுத்தை காமினி நெருங்கிய அந்த ஒரு நொடி,லிகிதா புலி போல் அந்தரத்தில் சீறிப்பாய்ந்து சிறுத்தையின் வயிற்றில் உதைத்து இருந்தாள்..அந்த ஒரு நொடி அவள் உடம்பில் கரிமா சக்தி வெளிப்பட்டு உடம்பை கல் போல ஆக்கியது..ஒரு பாறை வேகமாக வந்து மோதினால் என்ன பாதிப்பு உண்டாகி இருக்குமோ அது சிறுத்தையின் உடம்பில் நிகழ்ந்து இருந்தது..அது முதுகு தண்டுவடம் சுக்கு நூறாக உடைந்து விட்டது..
“என்ன ஒன்னும் ஆகல”காமினி கண்ணை திறந்து பார்க்க,சற்று தள்ளி சிறுத்தை கடை வாயில் இரத்தம் வழிய,எழுந்து இருக்க முடியாமல் துடித்து கொண்டு இருந்தது..
“என்ன இது அதிசயமா இருக்கு..உண்மையில் இந்த பொண்ணுங்க யார்..”என காமினி மனதில் நினைத்தாள்.ஆராதனா சந்தேகமும் வலுப்பட்டது..காத்தவராயனால் பாதிக்கபட்ட மூணாவது பொண்ணு இவ தான் என அவள் முடிவுக்கே வந்து விட்டாள்.
ஆராதனா,அனு இருவரும் கீழே குதித்தனர்..
காமினி,மூவரையும் பாத்து,”நீங்க எல்லாம் யாரு..எனக்கு என்னவோ நீங்க சாதாரண பொண்ணுங்க மாதிரி தெரியல..தினமும் இந்த வழியில் வந்து போகும் நானே ,அங்கங்கே ஓய்வு எடுத்து தான் செல்வேன்..ஆனால் நீங்க மூணு பேரும் கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காம நடந்து வரீங்க..”லிகிதாவை காட்டி,”இந்த பொண்ணு என்னடா என்றால் ஒரே உதையில் சிறுத்தையோட குறுக்கெலும்பை உடைத்து விட்டது..ஒரு சிறுத்தை புலியோட முதுகு எலும்பை உடைப்பது என்பது ஒரு நல்ல வலிமை உள்ள ஆணால் கூட முடியவே முடியாது.காட்டில் பிறந்து வளர்ந்த நான் இதை கண்ணால் கண்டதும் இல்ல.கேட்டதும் இல்ல..உண்மையை சொல்லுங்க..நீங்க யாரு.. எதுக்கு செண்பக தோட்டம் வரீங்க..”என கேட்டாள்..
கையில் இருந்த தூசியை தட்டி கொண்டு எழுந்த லிகிதா அவளிடம்,”காமினி,நாங்க எங்களை பற்றி தெரிந்து கொள்ள தான் செண்பக தோட்டம் வந்து இருக்கிறோம் காமினி..!எங்களுக்கே அங்க போனால் தான் விவரங்கள் தெரிய வரும்..”
நாங்க என்று மூவரை குறிப்பிட்டு லிகிதா சொல்வதை கேட்டு ஆராதனா அதிர்ச்சி அடைந்தாள்..நாங்க ரெண்டு பேர் எதுக்கு வந்து இருக்கிறோம் என்பதை அனு, லிகிதாவிடம் சொல்லி விட்டாளா..!என ஒரு நிமிடம் அவளை முறைத்து பார்த்தாள்..
லிகிதா அதை கவனித்து,”என்ன ஆராதனா,ஏன் அனுவை முறைச்சு பார்க்கிற,அனு எதுவும் என்கிட்ட சொல்லவில்லை. இந்தா உன் பர்ஸ் “என அவளிடம் நீட்டினாள்..

Pls stop this shitty story. Because of this, no new story is releasing. Pls pls.