“இங்க பாருங்க சென்னை கேர்ள்ஸ்,இங்கே வனத்துறை கெடுபிடி ரொம்ப ஜாஸ்தி.நாங்க மலையில் இருப்பதால் எங்களுக்கு மட்டும் அனுமதி இருக்கு..ஆனால் வெளியூரில் இருந்து வரும் ஆட்களை உள்ளே விட மாட்டாங்க..பவுர்ணமி,அமாவாசை மட்டும் தான் உள்ளே விடுவாங்க..அமாவாசை வருவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கு.இப்போ நான் உங்களை அழைத்து செல்ல வேண்டுமென்றால் நான் வனத்துறையை ஏமாற்றி தான் உள்ளே அழைத்து போகனும்..அது ரிஸ்க்..அதனால் ஆளுக்கு ரெண்டாயிரம் போட்டு ஆறாயிரம் கொடுங்க.நான் கூட்டிட்டு போறேன்..”என்று அந்த மலைசாதிப்பெண் சொல்ல..
ஆராதனா வாயை பிளந்தாள்.
“என்னது..!ஆறாயிரம் ரூபாயா..அதெல்லாம் கொடுக்க முடியாது..”
அனு உடனே ஆராதனா காதில் கிசுகிசுத்தாள்..
“கொஞ்சம் புரிஞ்சிக்க ஆரூ..வரும் அமாவாசை அன்று தான் காத்தவராயன் ஒரு பெரும் வேள்வி நடத்தி தன் உடலை பெற போகிறான்.அதுக்குள்ள நாம செண்பக தோட்டம் போய் டைம் டிராவல் எங்கே,எப்படி பண்ணுவது போன்ற எல்லா ரகசியத்தையும் தெரிந்து கொண்டு மாயமலை போய் அவன் செய்யும் வேள்வியை தடுக்கணும்….இப்போ காசு ஒரு பிரச்சினையே இல்ல..மாறன் வேறு தன் குருநாதரை இங்கே கூட்டி கொண்டு வருவதாக சொல்லி உள்ளான்..அதற்குள் நாம் அங்கே இருக்க வேண்டும் புரியுதா..”என சொன்னாள்..
இவர்கள் இங்கே பேசி கொண்டு இருக்க,அதற்குள் லிகிதா அந்த மலைசாதி பெண்ணிடம் பேசி மூவருக்கும் உண்டான பணத்தை கொடுத்து விட்டாள்.
“நீங்க ஏன் கொடுக்கறீங்க லிகிதா,நாங்க கொடுக்கிறோம்”என்று அனு சொல்ல,
“பரவாயில்லை அனு..!நீங்க தானே சென்னையில் இருந்து இங்கே வரை என்னை கூட்டிட்டு வந்தீங்க..என்னை எதிலும் எங்கேயும் நீங்க காசே கொடுக்க விடல..இந்த ஓரிடத்திலாவது நான் கொடுக்கிறேனே.”
ஆராதனா அந்த மலைசாதி பெண்ணை பார்த்து,”உன் பேரு என்ன பெண்ணே..”என்று கேட்க,
அந்த பெண் “காமினி”என்றாள்.
ஆராதனா அதற்கு,”இங்க பாரு காமினி,என்ன தான் இருந்தாலும் ஆறாயிரம் ரூபா ரொம்ப அதிகம்.”
“என்ன பண்றது சென்னை பொண்ணு..இந்த காசு மட்டும் இன்னும் வேணும் வேணும் என்று என் மனசு கேட்குது…அதுக்காக என்ன ரிஸ்க் வேண்டுமானால் எடுக்க சொல்லுது..அநேகமாக இது முற்பிறவியோட தொடர்போ
என்று நினைக்கிறேன்..நான் பரவாயில்லை…என்னோட புருஷனா இருந்தால் இன்னும் அதிகமா கேட்டு இருப்பான்.அவன் தான் எனக்கு இப்படி பணம் சம்பாதிக்க வழி எல்லாம் சொல்லி கொடுத்தது..எல்லாம் பூர்வ ஜென்ம தொடர்பு..”
“உன் புருஷன் பேரு என்ன..”ஆராதனா கேட்க,
“அவன் பேரு வீரா…”காமினி சொன்னாள்..
வீரா,காமினி இந்த பேரை எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கா.
ஆமாம் ஆரா,கனகா தம்பதியினர் மீண்டும் பிறப்பெடுத்து வந்து உள்ளனர்..
மலைசாதி பெண்ணாக காமினி அறிமுகம்
நிகழ் காலம்
காமினி மூவரிடமும்”சென்னை கேர்ள்ஸ்,நான் சொல்றத நல்லா கேட்டுக்கங்க..இப்போ இங்கே வேலை பார்க்கும் 3 வன காவலர்களில் ரெண்டு பேர் லஞ்ச் சாப்பிட வெளியே கிளம்புவாங்க.நம்ம ஆபரேஷன் அப்போ தான் தொடங்குது.மீதி ஒரு சொட்டை தலையன் தான் டூட்டியில் இருப்பான்.அவன் ஒரு சரியான வழிசல் கேசு,அவனை நான் பாத்துக்கிறேன்..நீங்க இந்த கருப்பு தண்ணி டேங்க் பின்னாடி ஒளிஞ்சிக்கோங்க..நான் சிக்னல் கொடுத்த பிறகு நீங்க கிடுகிடுவென ஓடிப்போய் நேரா வன துர்கை அம்மன் கோவில் போய் காத்து இருங்க..இப்போ அங்கே யாரும் இருக்க மாட்டாங்க..நான் நேரா அங்கே வந்து உங்களை கூட்டிட்டு போறேன்..”
“சரி காமினி,..இது என்ன டேங்க் முழுக்க நகக்கீறலா இருக்கு”என அனு கேட்க,
காமினி உற்று பார்த்து,”நகக்கீறலை பார்த்தா இது கரடியோடது போல இருக்கு.”என காமினி சொல்ல,
“என்ன இங்கே கரடி எல்லாம் இருக்கா..”அனு பயந்து பின்வாங்கினாள்..
“கரடி மட்டுமில்ல,யானை,சிறுத்தை புலி கூட இருக்கு..அப்பப்ப பொதிகை மலை காட்டுக்குள்ள இருந்து வரிப்புலியும் வந்திட்டு போகும்”என காமினி சொல்ல,அனுவுக்கு உதறல் எடுத்தது..லிகிதாவின் கண்களிலும் பயம் தெரிந்தது.
அவர்களின் பயத்தை பார்த்த காமினி”பயப்படாதீங்க..!நான் இருக்கேன் உங்களை பத்திரமா கூட்டிட்டு போறேன்.”என்று தைரியம் சொன்னாள்.
அதை கேட்டு மூவருக்கும் தைரியம் வந்தது..
காமினி சொன்னது போல் மூவரும் தண்ணி டேங்க் பின்னாடி ஒளிந்து கொண்டார்கள்..
வனச்சரகர்களுக்கு என கட்டி கொடுக்கபட்டு இருந்த பில்டிங் உள்ளே காமினி சென்றாள்..
“வணக்கம் சார்..”என இடுப்பை ஒருவாறு வளைத்து கும்பிடு போட்டாள்..
நடுத்தர வயதில் முன்வழுக்கையுடன்,வயிற்றில் தொந்தி சதைகள் பிதுங்கி சட்டையில் இருந்து வெளியே வரும் நிலையில் உருவத்தோடு இருந்த தேவசகாயம் காமினி வந்து கும்பிடு போட்டதை பார்த்து வாய் நிறைய பல்லுடன் அவளை வரவேற்றான்.தேவசகாயத்திற்கு எப்பவும் காமினி மீது ஒரு கண்.இப்படி ஒரு நாட்டுக்கட்டையை ருசிக்க வேண்டும் என்பது அவனோட நெடுநாளைய ஆசை.ஆனால் அவளை தொடுவதற்கு பயம்.அவள் கொடுக்கும் ஒரு அடியை கூட அவனால் தாங்க முடியாது என்று அவனுக்கு தெரியும்..அதனால் அவளை கண்களால் ரசிப்பதோடு சரி.
“வா காமினி..!என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டே….பொருள் எதுவும் சரியா விக்கலயோ..!என கேட்டான்..
“ஆமா சாமி..கொஞ்சம் சீக்கிரம் குடிலுக்கு போகனும்..அங்கே என் மச்சானுக்கு கொஞ்சம் உடம்புக்கு சுகம் இல்ல.அதான்.. எங்கே உங்க கூட இருந்த கூட்டாளி ரெண்டு பேரை காணோம்..”என காமினி கேட்டாள்..
“அவனுங்க சாப்பிட்டு வர போய் இருக்கானுவ காமினி..சரி என்ன வச்சு இருக்கே சொல்லு.மாமா நானே உனக்கு போனி பண்றேன்..”

Pls stop this shitty story. Because of this, no new story is releasing. Pls pls.