“நீங்க மதுரை போகணுமா..!”என்று அனு கேட்டாள்..
லிகிதா உடனே முறுவலித்து”Actually நான் வத்திராயிருப்பு வரை போகனும்,ராஜபாளையம் பஸ் கிடைக்குமா என்று பாத்தேன்..ஆனால் கிடைக்கல..சரி மதுரை போய் அங்கே பஸ் மாறி போய்டலாம் என்று பார்த்தால் அதுக்கும் வழி இல்ல”என சோகமாக லிகிதா உதட்டை பிதுக்கினாள்.
“Wow.. what a coincidence,நாங்களும் மதுரை சென்று வத்திராயிருப்பு தான் போறோம்.நாங்க மூணு டிக்கெட் புக் பண்ணி இருந்தோம்.ஆனால் எங்களோட வந்த நபர் அவசரமா அவரோட குருவை காண பொதிகை மலை போய் இருக்கார்.அதனால் எங்களிடம் ஒரு டிக்கெட் இருக்கு.நீங்க அதில் டிராவல் பண்ணி கொள்ளலாம்..”..
லிகிதா உடனே மகிழ்ச்சி அடைந்து,”சரி டிக்கெட் எவ்வளவு சொல்லுங்க..”என கேட்க
அனு புன்முறுவலுடன் “அதெல்லாம் ஒன்னும் வேணா,சும்மா வேஸ்ட்டா போக போகிற டிக்கெட் தானே..!என அனு மறுக்க,லிகிதா பணம் கொடுப்பதில் பிடிவாதமாக இருந்தாள்..
அனு சிரித்து கொண்டே”அப்ப ஒன்னு பண்ணுங்க..நீங்க மதுரையில் இருந்து வத்திராயிருப்பு வரை எங்களுக்கு டிக்கெட் எடுத்துடுங்க”என்று அனு சொல்ல லிகிதா ஒப்புக்கொண்டாள்.
“என் பேரு அனு,ஆமா உங்க பேரு என்ன..?அனு கேட்க,
“லிகிதா”என்று மென்மையாக பதில் அளித்தாள்.
அந்த நேரம் ஆராதனா வந்து,”யார்கிட்ட பேசிட்டு இருக்கே அனு,”என்று கேட்க,
அனுவும் திரும்பி பார்த்து,”வா ஆராதனா,இவங்க பேரு லிகிதா.. மாறனுக்கு எடுத்த டிக்கெட் வேஸ்ட்டா போச்சுன்னு ஃபீல் பண்ணினோம் இல்ல..இவர்களுக்கு கொடுத்துடலாம்.இவங்களும் வத்திராயிருப்பு தான் போறாங்க..”
“வாவ் கிரேட்..”என ஆராதனா லிகிதாவின் கைகளை குலுக்கினாள்..
லிகிதா இருவரை பார்த்து”உங்கள் இருவரை பார்க்கும் பொழுது,ஏதோ எனக்கு ரொம்ப attached ஆனது போல இருக்கு..”
“ஆமா எனக்கும் அப்படி தான் இருக்கு”என அனு,ஆராதனா ஒருசேர சொல்ல அங்கு எல்லோருக்கும் சிரிப்பு தான் வந்தது..
“லிகிதா,உங்களுக்கு வத்திராயிருப்பில் எல்லா இடமும் தெரியுமா..”அனு கேட்க
லிகிதா மெல்லிய புன்னகையுடன் உதட்டை பிதுக்கி,”இப்போ தான் அனு, வத்திராயிருப்பு முதன்முதலா போறேன்..அங்க போய் தான் செண்பக தோட்டம் போகும் வழி பற்றி விசாரிக்க வேண்டும்.”
அனு பேச வாயெடுக்க, ஆராதனா அனுவின் கைபிடித்து அமைதியாக இருக்க விரலால் சைகை செய்தாள்..
ஆராதனா லிகிதாவிடம்”சீட் நம்பர் 21,22,23 இந்த மூன்று சீட்டில் உங்களுக்கு எது விருப்பமோ அதை எடுத்துங்க லிகிதா.21 மட்டும் சிங்கிள் பெர்த் வரும்..22,23 டபிள் பெர்த்..நீங்க போய் வெயிட் பண்ணுங்க.நாங்க ஒரு ரெண்டு நிமிசத்தில வந்து விடுகிறோம்..”என அனுவை தனியாக அழைத்து சென்றாள்..
“ஆராதனா..என்னை எதுக்கு பேச விடாமல் தடுத்தே..!நாமும் செண்பக தோட்டம் தானே போக போறோம்..இதை சொல்லவிடாமல் ஏன் தடுத்தே..”
“ஆமா அனு,நாமும் செண்பக தோட்டம் தான் போக போறோம்..அதை அவளிடம் சொல்லும் பொழுது,அவ ஏன் அங்கே போறீங்க என்று ஒருவேளை கேட்டு விட்டால் நீ என்ன பதில் சொல்வே..அவ யாரென்று தெரியாமலேயே நாம எதுக்கு போறோம்,ஏன் போறோம் என்ற விசயம் சொல்வீயா..”என்று ஆராதனா படபடவென வெடிக்க,
அனு பொறுமையாக,”இதில் கோபப்பட என்ன இருக்கு ஆரு..நாம போக போற இடத்தை அவகிட்ட சொல்வதால் நமக்கு எந்த பாதிப்பும் வரப்போறது இல்ல..உன்னோட பத்திரிக்கை மூளை எல்லோரையும் சந்தேக கண்ணோடு பார்க்க வைக்குது..நான் உணர்வு பூர்வமாக அவளை பார்க்கிறேன்..எனக்கு அவளை பார்த்தால் எந்த தப்பும் தோணல..அதுவும்…” என அனு ராகம் இழுத்தாள்..
“என்ன சொல்லு அனு..”
“நம்மை போல அவளும் காத்தவராயனால் பாதிக்கப்பட்டு இருப்பாளோ என்ற உணர்வு எனக்கு..”அனு சொல்லவும்,ஆராதனாவுக்கும் அது சரியென பட்டது..
“ச்சே..இந்த நேரத்தில் மாறன் இல்லாது போய் விட்டானே..அவன் ஒருவேளை இருந்திருந்தால் இவளை பார்த்த உடன் சரியாக சொல்லி இருப்பான்..”என ஆராதனா நினைத்தாள்.
மூவரும் வத்திராயிருப்பு சென்று சேர பொழுது விடிந்து விட்டது.அதற்குள் வத்திராயிருப்பு நகரமே விழித்து பரபரப்பாய் இயங்கி கொண்டு இருந்தது.
அங்கிருக்கும் நபர்களிடம் செண்பக தோட்டம் போவது பற்றி விசாரித்தனர் .அவர்கள் இங்கிருந்து தாணிப்பாறை என்ற சிற்றூருக்கு போக சொன்னார்கள்..
தாணிப்பாறை சென்று கேட்டால் சதுரகிரி மலை ஏறி போகும் வழியில் ரெட்டை லிங்கம் தாண்டிய உடன் பிரியும் ஒற்றையடி பாதையில் அடர்ந்த காட்டுக்குள் வரும் என்று சொன்னார்கள்..
ஆனால் அவர்கள் சென்ற நேரம், வனத்துறையினரால்
மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது..
மூவரும் சோர்ந்து போய் என்ன செய்வது என்று தெரியாமல் ஓரிடத்தில் உட்கார்ந்தனர்.
அங்கே மலைத்தேன்,மற்றும் புனுகு பூனை திரவியம் விற்று கொண்டு இருந்த மலைசாதிப்பெண் இவர்களை நெருங்கி,”ஹாய் மாடர்ன் பொண்ணுங்களே..!என்கிட்ட நல்ல சுத்தமான மலைத்தேன் இருக்கும்மா,வீட்டுக்கு வாங்கிட்டு போறீங்களா..”என்று கேட்டாள்.
மூவரும் வேண்டாம் என தலை அசைத்தனர்..
“என்னமா..!மேலே இருக்கும் சாமியை பார்க்க முடியவில்லை என்று வருத்தமா..”என கேட்டாள்..
“இல்ல பெண்ணே..நாங்க சாமியை பார்க்க வரல..இங்கே மேலே இருக்கும் செண்பக தோட்டத்தையும்,அங்கே மக்கள் வழிபடும் மதிவதனி மரத்தையும் பார்க்க வந்தோம்..”என்று சொல்ல அந்த மலைசாதி பெண் அவர்களுக்கு உதவி செய்ய நினைத்தாள்.
“எங்கே இருந்து வரீங்க.”என்று அந்த மலைவாழ்பெண் கேட்க,
“நாங்க மூவரும் சென்னையில் இருந்து வரோம்..”என்று கோரசாக சொன்னார்கள்..
“சரிம்மா,நான் உங்க மூணு பேரை மேலே கூட்டிட்டு போறேன்.எனக்கு எவ்வளவு காசு தருவீங்க..”என்று கேட்டாள்.
“உனக்கு எவ்வளவு வேணும்..!தயங்காம கேளு பெண்ணே..”என லிகிதா தான் முதலில் வார்த்தையை விட்டாள்..அவளுக்கு எப்படியாவது அங்கே சென்று விட வேண்டும் என்ற துடிப்பு..
ஆராதனா சற்று திரும்பி முறைத்தாலும் லிகிதா அதை கண்டுகொள்ளவில்லை..

Pls stop this shitty story. Because of this, no new story is releasing. Pls pls.