அசுரன் Part 36 35

“காலையில் டீக்கு காசு கொடுக்கும் பொழுது உன் பர்ஸை கீழே தவற விட்டு விட்டே ஆராதனா.அப்போ எடுத்து பார்க்கும் பொழுது இதில் உள்ள உன் அப்பா,அம்மா ஃபோட்டோ பார்த்து நீ எதுக்கு வந்து இருக்கே என தெரிந்து கொண்டேன்..”பிரியங்காவின் தொப்புளை தொடும் பொழுது கண் முன்னே தெரிந்த நிகழ்ச்சிகளை விவரித்தாள்.அதில் வந்த அப்பா,அம்மா முகம் ,உன் பர்ஸில் உள்ள போட்டோவை வைத்து நீயும் என்னை போல உன் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வந்து இருக்கிறாய் என புரிந்து கொண்டேன்.நம்ம நாலு பேரோட அப்பா,அம்மாவும் அங்கே சென்ற பிறகு தான் அவர்களுக்கு குழந்தைகளாக நாம் பிறந்து இருக்கோம்.நம்ம நாலு பேருக்கு உண்டான தொடர்பு அங்கே போனால் தெரிந்து விடும்..”

“அப்போ மதிவதனி தான் உன் தோழி பிரியங்காவா..!அவளை தேடி கண்டுபிடிக்கும் பிரச்சினை இப்போ தீர்ந்தது. “என ஆராதனா விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன..

இவர்கள் பேசுவது எதுவும் காமினிக்கு புரியவில்லை..

ஆனால் மேலே வட்டமிடும் கழுகுகளை பார்த்த உடன் அடுத்த வரவிருக்கும் ஆபத்தை காமினி உணர்ந்து கொண்டாள்.”யம்மா.. வீர மங்கைகளே..சீக்கிரம் வாங்க போகலாம்..இந்த உயிருக்கு போராடும் சிறுத்தையை சாப்பிடுவதற்கு இங்கே காட்டு நாய் கூட்டமும்,நரிக்கூட்டமும் இப்போ இங்கே வந்து விடும்.அப்புறம் நம்ம நிலைமை அதோகதி தான்.இப்பவே கழுகு வட்டமிட ஆரம்பித்து விட்டது பாருங்க..அப்புறம் நாம தான் அதுங்களுக்கு டின்னர்..போலாமா..”என காமினி சொன்னாள்..

மீண்டும் மலை ஏற்றம் தொடங்கியது..ரெட்டை லிங்கம் தாண்டிய உடன் பாதை இன்னும் குறுகலாக மாறி விட்டது..சில இடங்களில் ஏறும் பொழுது முட்டி,முகத்தில் வந்து மோதியது..போக போக சமவெளி வந்து விட்டது..மரங்களின்‌ அடர்த்தி குறைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் காணப்பட்டன..அதில் நடுநாயகமாக பழுத்து இலைகள் உதிர்ந்த நிலையில் பட்ட மரமாய் இருந்த மரத்தை கண்டனர்..அதை பார்த்த உடன் மூவருக்கும் உள்ளுக்குள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது..

காமினி சொல்லாமலே மூவரும் அந்த மரத்தின் முன்னே நின்றனர்..மரத்தின் முன்பு உட்கார்ந்து தியானம் செய்ய அவர்களின் பிறப்பின் ரகசியம் ஒவ்வொன்றாக மனதுக்குள் வெளியாக தொடங்கியது..அந்த ரகசியம் இன்னொருவனுக்கும் தெரிந்து விட்டது..

அவனின் குரல் வெளிப்பட்டது..

“ஹாஹாஹா”என காத்தவராயன் சிரிக்கும் சத்தம் கேட்டு மூவருக்கும் தியானம் கலைந்தது..காமினியும் இந்த சத்தத்தை கேட்டு பயந்தாள்..

வாருங்கள், எந்தன் பள்ளியறை காம தேவதைகளே.!நீங்கள் எதற்காக பிறப்பு எடுத்த ரகசியம் அறிந்து கொண்டீர்களா..!
எனக்கு சுகம் கொடுத்து என்னை இன்பக்கடலில் மூழ்கடித்த அழகு நங்கைகளே உங்கள் வரவுக்காக தான் காத்து இருந்தேன்..என்னை அழிக்க பிறந்தவர்கள் என்று தெரிந்தும் நான் ஏன் உங்களை விட்டு வைத்து இருக்கிறேன் என்று குழப்பமாக உள்ளதா..! என்று அவன் கேட்ட உடன் மூவரும் ஒருவருக்கொருவர் புரியாமல் பார்த்தார்கள்.

“என்னுடலை நான் திரும்ப அடைந்த உடன் உங்கள் அனைவரையும் என் ஆசை தீர அனுபவிக்க வேண்டும்.எனக்கு நீங்களும் வேண்டும்,அதே நேரத்தில் என் உடலும் எனக்கு வேண்டும்,அதற்கு என்ன வழி என்று யோசித்தேன்..அப்போ தான் எனக்குள் எந்த திட்டம் உதித்தது. நீங்கள் என்னை அழிக்க நான் வாழ்ந்த காலத்திற்கு செல்லும் பொழுது இங்கே நான் செய்யும் யாகத்தை யாராவது ஒருவர் தடுக்க வேண்டும்.அந்த ஒருவர் என் வம்சத்தில் வந்தவராக இருந்தால் மட்டுமே சாத்தியம்..அப்படி பிறந்த ஒருவனை அவன் வாழ்ந்த காலத்திற்கு சென்று அங்கேயே நான் ஏற்கனவே அழித்து விட்டேன்.இப்போ காத்தவராயன் வம்சம் நிகழ் காலத்தில் இல்லை..இனிமேல் நீங்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்தாலும் இந்த காத்தவராயன் உருப்பெறுவதை தடுக்க முடியாது..சரி..நான் என் பிரியங்காவை அடையும் காலம் நெருங்கி விட்டது..வரட்டுமா செல்லங்களா..என் உடலை பெற்று வந்த பிறகு மீண்டும் உங்களை வந்து சந்திக்கிறேன்..இந்த உலகில் பேரரசிகளாக முடிசூட்டி கொள்ள தயாராக இருங்கள்”என்று சொல்லிவிட்டு காத்தவராயன் மறைந்து விட்டான்..

என்ன செய்வது என்று தெரியாமல் மூவரும் மனமுடைந்து உட்கார்ந்து விட்டனர்..காத்தவராயன் அங்கு தோன்றி மறைந்த பிறகு காமினி மனதில் மாற்றம் நிகழ்ந்தது..அவள் இவர்களுக்கு உதவி புரிய எண்ணம் கொண்டாள்..

“பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்..
எல்லை இலாத நின் பெருஞ்சீர்”என்ற திருவாசகத்தின் வரிகளை உச்சரித்து கொண்டு மாறன் அங்கே நின்று கொண்டு இருந்தான்..

1 Comment

  1. Pls stop this shitty story. Because of this, no new story is releasing. Pls pls.

Comments are closed.