உதவிக்கு வரலாமே 104

அய்யா விட்ருங்கையா . ஒரே புள்ளை அய்யா . அவன் வாழ்கையே பாழாய் போய்டும் அய்யா . இந்த ஊர விட்டே நாங்க போயிடுறோம் . உங்க பொண்ணுகிட்டே இனிமே ஜென்மத்துக்கும் என் பையன் வராம பாத்துக்றேங்க .

என்று கதற ஆரம்பித்துவிட்டார் . சற்று நேரம் கழித்து அவர் அப்படியே அருகில் இருந்த ரம்யாவின் காலை பிடித்து

” அம்மா விட்டுற சொல்லுமா . இனிமே அவன் உன் பின்னாடி வராம பாதுக்றேன்மா”

என்று அழ ஆரம்பித்தாள் .

ரம்யாவிற்கு ரொம்ப தர்மசங்கடமாக இருந்தது . அவள் தந்தையை பார்த்தாள் . ரம்யாவின் அப்பாவிற்கும் மோகனின் அம்மா அப்படி செய்தது சற்று அதிர்ச்சியையும் கொஞ்சம் இரக்கத்தையும் வரவழைத்தது . அப்பொழுது அங்கிருந்த பெண் காவலர் ஒருவர் மோகனின் அம்மாவை தூக்கி சுவரோரம் இருந்த பெஞ்சு பலகையில் உட்காரவைத்தாள் .நடந்ததை பார்த்துகொண்டிருந்த மோகன் சற்றே அதிகமாக வாய்விட்டு அழுதான் . பாண்டியனின் கண்களிலும் நீர் வழிந்தது .

ரம்யாவின் அப்பா ஏட்டை அழைத்தார்

அப்பா : இந்த ரெண்டு பொறுக்கி பசங்கள்டையும் எல்லாத்தையும் எழுதி வாங்கிட்டு சாயங்காலம் அனுப்பிடு . அவங்க பேரண்ட்சை உடனே அனுப்பிடு .

ஏட்டு : சரிங்க அய்யா .

அப்பா : ரம்யா நீ உள்ளே வாம்மா

என்று சொல்லிவிட்டு உள்ளறைக்கு சென்றார் . ரம்யா மோகனை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள் . மோகன் சட்டென முகத்தை திருப்பிக்கொண்டான் .

ரம்யாவுக்கு வேதனையாக இருந்தது . உள்ளறைக்கு சென்று அப்பாவுடன் அமைதியாக உட்கார்ந்து கொண்டாள் . ரம்யாவின் அப்பா கான்ஸ்டபிளை அழைத்து ரம்யாவின் ஸ்கூட்டியை தனது வீட்டில் விட்டுவிட சொல்லிவிட்டு
ரம்யாவுடன் சுமோவில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார் .

ஏட்டு மோகன் மற்றும் பாண்டியனின் பெற்றோரை அனுப்பிவிட்டு உள்ளே வந்து பல வெற்று தாள்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார் .

ஏட்டு : கான்ஸ்டபில் அந்த பசங்கள கூட்டிட்டு வாங்க

மோகனும் பாண்டியனும் ஏட்டு முன்னே கொண்டு வரப்பட்டனர் .

ஏட்டு : ஏன் தம்பிங்களா , பாத்தா படிச்சவங்க மாதிரி தெரியுரிங்க ஏன்பா AC பொண்ணை கலாட்டா பண்ணிங்க . AC ரொம்ப கோவக்காரர் . ஏதோ அந்த பொண்ணும் உங்க அம்மாவும் கேட்டதால விட்டுட்டார் .சாயந்திரந்தான் விட சொன்னார் . பாத்தா பாவமா இருக்கு இந்த வெத்து பேப்பர்ல எல்லாம் கையெழுத்து போட்டுட்டு போங்க . அப்படியே ஒரு பேப்பர்ல உங்க அட்ரெஸ் போன் நம்பர் மத்த விவரம் எல்லாம் எழுதிக் குடுங்க .

இருவரும் ஏட்டு சொன்னபடி செய்துவிட்டு அவருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துவிட்டு வெளியே வந்தனர் . மோகன் அம்மாவுடன் சென்றான் . பாண்டியன் அவனுடைய பெற்றோருடன் சென்றான் .

வீட்டிற்கு வந்த மோகன் அம்மாவிடம் நெடுஞ்சான்கிடையாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதான் . இனிமேல் இப்படி தவறு செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தான் . மோகனின் அம்மா கோவத்தில் இருந்தாலும் மோகனின் இந்த செய்கையால் நெகிழ்ந்து போனாள் . இனிமே இதை பற்றி பேசவேண்டாம் என்று முடிவு செய்தனர் . குளித்து உடைமாற்றி கொண்டு மோகன் தனது மொபைலை எடுத்து பாண்டியனுக்கு கால் செய்தான்

பாண்டியன் : ஹலோ ! சொல்லு மோகன் . அம்மா ஒன்னும் தப்பா நெனைக்கலையே ?

மோகன் : இல்ல மச்சான் . அம்மாவை சமாளிச்சுட்டேன் . ஆனா மனசு சரி இல்லடா . தண்ணி போட்டாதான் மனசு வலி & உடம்பு வலி சரி ஆகும் டா . உன்னோட பேரன்ட்ஸ் ஏதாவது சொனாங்களா ?

பாண்டியன் : எங்க வீட்ல ஒன்னும் பிராப்ளம் இல்ல . அதில்லாம நான் போலிஸ் ஸ்டேஷன் போறது ஒன்னும் புதுசு இல்லையே . நீ சொன்ன மாதிரி தண்ணி போட்டாதான் சரியாய் இருக்கும் . எங்க வரட்டும் ?

மோகன் : ராஜா அண்ணன் ரூமுக்கு போய்டலாமா ? அண்ணன் இருப்பாரா ?

பாண்டியன் : கரெக்ட்டு மச்சான் . அண்ணன் காலைலதான் ஊர்ல இருந்து வந்தார். கண்டிப்பா ரூம்ல தான் இருப்பார் . நான் 10 மினிட்ஸ்ல வந்துடறேன் .

மோகன் : ஓகே மாமா . நானும் சீக்கிரம் வந்துடறேன் .

ராஜா அண்ணன் என்பவர் மோகன் பாண்டியன் இருக்கும் ஏரியாவில் தனியாக பிளாட்டில் வசிப்பவர் . வயது 40 . மனைவி மற்றும் குழந்தைகள் எல்லாம் தென்தமிழ்நாட்டில் ஒரு பெரிய நகரில் வசிக்கிறார்கள் . ராஜா இங்கே சொந்தமாக பிஸினஸ் செய்கிறார் . மாதம் இருமுறை சென்று குடும்பத்தினரை பார்த்துவிட்டு வருவார் . நல்ல வசதி . மோகனையும் பாண்டியனையும் நன்றாக கவனித்துகொள்வார் . அவர்களிருவரும் அவருடைய அபார்ட்மண்டில் தான் அடிக்கடி குடித்து கும்மாளமிடுவர் .

பாண்டியனையும் மோகனையும் காயங்களுடன் பார்த்த ராஜா மிகவும் பதறினார்.