உதவிக்கு வரலாமே 104

“ஆஆஅ”

என்று கத்திக்கொண்டு பாண்டியன் தன் பிடியை விட்டு கையை உதறினான் . விஷயம் எல்லை மீறி போனதை உணர்ந்த மோகன் , பாண்டியன் கீழே போட்ட சாவியை எடுத்துக்கொண்டு ரம்யாவிடம் சென்று

“சாரி சாரி . ப்ளீஸ் உடனே கிளம்புங்க” என்று சொல்லி சாவியை நீட்டினான். அவனை எரித்துவிடுவது போல் பார்த்தவள் சாவியை வாங்கிகொண்டு உடனே அங்கிருந்து செல்வதுதான் சரி என்று நினைத்து , வெடுக்கென்று சாவியை பிடுங்கிக்கொண்டு வண்டியை கிளப்பி சென்றாள் .

பாண்டியன் : டாய் அவள விடாதடா மாப்ளே – என்று கத்தினான் .

பாண்டியன் அருகில் வந்து மோகன் அவனை பளார் பளார் என்று ரெண்டு அறைவிட்டான் .

பாண்டியன் : எதுக்குடா என்ன அடிக்குரே மச்சி

மோகன் : பாவி பாவி , மொத்த காரியத்தையும் கெடுத்துட்டியேடா நாயே நீயாடா நண்பன் ?

சொல்லிகொண்டே மோகன் பாண்டியனின் சட்டையை காலரோடு பிடித்து நெருக்கினான் . அப்பொழுதான் பாண்டியன் மீது அதீத பிராண்டி வாடை வந்ததை கவனித்தான் .

மோகன் : தண்ணி போட்டுருகியா ?

பாண்டியன் : ஆமாம் . சும்மா ஒரு தில்லுகாக .

மோகன் : நாசமா போச்சு . நீ ஒரு பெரிய புடுங்கின்னு நேனைசுகிட்டு உன்னை கூட்டிட்டு வந்த என்ன செருப்பால அடிக்கணும் . வரும்போது நல்லாதானே வந்தே அப்புறம் எப்படா குடிச்சு தொலைச்சே .

பாண்டியன் : நீ ரம்யா வண்டிய நிறுத்தி பேச கூப்பிட போனெல்ல . அப்போ மரத்துக்கு பின்னாடி நின்னு ஒரு குவார்ட்டர் பிராந்தியை கல்ப்பா அடிச்சுட்டேன் டா மாப்ள . சாரி டா .

அப்படியே மோகன் மேல் சரிந்து கொண்டான் . மோகன் தலையில் அடித்து கொண்டான் .

நடந்த அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் சற்று தொலைவில் ஒரு டாடா சுமோவின் முன் சீட்டில் இருந்து பார்த்து கொண்டு இருந்தது . அந்த கண்கள் கோவத்தில் ரத்த பிழம்பாய் கொதித்து போய் இருந்தது .

அந்த கண்களுக்கு சொந்தகாரர் சாட்சாத் ரம்யாவின் அப்பா – Assistant Commissioner of security officer !

படபடப்புடன் ரம்யா காலேஜுக்கு சென்று தன் இருக்கையில் அமர்ந்தாள் . சற்றுமுன் நடந்த அனைத்தும் திரும்ப திரும்ப அவள் மனதில் புயலடித்து . அப்பாவிடம் சொல்லலாமா என்று யோசித்தாள் . விஷயம் தெரிந்தால் அப்பா அவர்களை அடித்தே கொன்றுவிடுவார் , அதனால் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்தாள் .இனியோரு முறை பிரச்சனை செய்தால் சொல்லலாம் என தன்னை தானே சமாதான படுத்திக்கொண்டாள் . மனம் பாடத்தில் லயிக்கவில்லை . எதோ மந்திரித்து விட்டது போல் இருந்தாள் . அப்பொழுது பக்கத்தில் இருந்த அவள் உயிர் தோழி சுபா

சுபா : என்னடி ஆச்சு உனக்கு ? வந்ததிலிருந்து ஒரு மாதிரியா இருக்கே .

ரம்யா : ஒண்ணும் இல்ல பா . கொஞ்சம் தலைவலி

சுபா : அதுக்காக 4 லெக்சர் முடிஞ்சும் நீ நோட்ஸ் எடுக்காம இருக்கே ?

ரம்யா அப்பொழுதுதான் தான் நோட்ஸ் எடுக்காததை உணர்ந்தாள் .

ரம்யா : சுபா உன்னோட நோட் எனக்கு இன்னைக்கு தருவியா ? நான் எல்லாத்தையும் copy பண்ணிட்டு நாளைக்கு தரேன் ப்ளீஸ் .

சுபா : அதுகென்னடி . தாராளமா எடுத்துட்டு போ .

ரம்யா : தேங்க்ஸ் .