உதவிக்கு வரலாமே 104

அரைமணி நேரம் கழித்து தாமஸ் பின்வருமாறு ரிப்ளை அனுப்பினான்

தாமஸ் : நான் தாமஸ் , Chief Manager , XYZ Bank . தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாமா ?

ரம்யா இந்த மெசேஜை படித்து குழம்பி போனாள் . யாரென்று தெரியாமல் எனக்கு ஏன் மெசஜ் அனுப்ப வேண்டும் என்று தோன்றியது . பின்வருமாறு ரிப்ளை செய்தாள் .

ரம்யா : நீங்கள் தான் மெசேஜ் அனுப்பி இருந்தீர்கள் . என்னை தெரியாமல் ஏன் அனுப்பினிங்க ?

தாமஸ் : நேற்றுதான் நான் ஜாப்பில் இருந்து ரிசைன் பண்ணேன் . அதனால ஆபிஸ் சிம் கார்டை ஆபிசில் கொடுத்துவிட்டு புது சிம் வாங்கினேன் . So என்னோட போன் புக்கில் இருக்கும் அனைவருக்கும் புது நம்பரை அனுப்பினேன் . உங்கள் நம்பர் என்னுடைய போன் புக்கில் “ரம்யா” என்று இருக்கிறது .ஆனால் நீங்கள் யாரென்று தெரியவில்லை . என்னுடைய போன் புக்கில் இருக்கும் பலரை எனக்கு நினைவு படுத்திக்கொள்ள முடியவில்லை . அதனால் தான் உங்களை பற்றி கேட்கிறேன் . நீங்கள் ரம்யா மேடமா ?

ரம்யா : நான் ரம்யா தான் . சாரி ! நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை

தாமஸ் : பரவாயில்லை மேடம் . நீங்கள் XYZ பாங்கின் ஊழியரா ?

இப்போது ரம்யா போனை சார்ஜில் போட்டுவிட்டு காலேஜ் கிளம்ப சென்றாள் . குளித்து முடித்து நீல நிற சல்வார் அணிந்து அதற்க்கு மேட்சாக மேக்கப் செய்து கொண்டு , சாப்பிட போனாள் . அம்மாவிடம் கொஞ்சிவிட்டு மதிய உணவையும் எடுத்து கொண்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய போனவளுக்கு மொபைல் ஞாபகம் வந்தது . வந்து மொபைலை எடுத்து தாமஸின் கடைசி மெசேஜை படித்துவிட்டு ரிப்ளை டைப் செய்து அனுப்பினாள் .

ரம்யா : நான் வேலை எதுவும் செய்ய வில்லை . நான் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி .

மொபைலை கைபையில் போட்டுவிட்டு ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து காலேஜுக்கு விரைந்தாள் .

ரம்யாவின் மெசேஜை படித்த தாமஸின் மனதில் ஒரு சின்ன திட்டம் உதித்தது . ரம்யாவை அன்பால் மடக்க முடியும் என்று தோன்றியது . உடனே போனை எடுத்து ரிப்ளை டைப் செய்தான்

தாமஸ் : சாரி சிஸ்டர் ! எங்கேயோ சிறு தவறு நிகழ்ந்து உங்கள் நம்பர் என்னிடம் வந்திருக்கிறது போல் தெரிகிறது . உங்களை தொந்தரவு செய்ததற்கு மன்னிக்கவும் . ஆல் தி பெஸ்ட் சிஸ்டர் .

என்று டைப் செய்து அனுப்பினான் . காலையிலே மோகன் & பாண்டியண் புறப்பட்டு சென்று விட்டார்கள் . ராஜாவும் வெளியே சென்று விட்டார் . தாமஸ் மட்டும் தனியே ராஜாவின் வீட்டில் இருந்தான் . ரம்யாவின் ரிப்ளைகாக காத்திருக்க தொடங்கினான்

வகுப்பறைக்கு வந்த ரம்யா , முதலில் சுபாவை திட்டிவிட்டு நோட்சையும் அந்த புத்தகத்தையும் கொடுத்தாள் . நினைவில்லாமல் அந்த புத்தகத்தை கொடுத்ததற்கு சுபா மன்னிப்பு கேட்டாள் . லேக்சுரர் வந்து பாடத்தை ஆரம்பித்தார் . ஏனோ ரம்யாவின் மனது பாடத்தில் லயிக்கவில்லை . நேற்று ஏற்பட்ட பல விஷயங்களையே அசை போட்டது . திடீரென சைலென்ட் மோடில் இருந்த மொபைல் அதிர்ந்தது

மொபைலை மேஜைக்கடியில் வைத்து ரகசியமாக பார்த்தாள் . இரண்டு மெசேஜ் தாமஸிடம் இருந்து வந்திருந்தது . இரண்டும் ஒரே மெசேஜ் . முதல் மெசேஜ் அனுப்பி ரொம்ப நேரம் ஆகியும் பத்தி இல்லாததால் இரண்டாம் முறை தாமஸ் அனுபியிருந்தது தெரிந்தது . மெசேஜை படித்த ரம்யா ஆச்சர்யத்தின் எல்லைக்கே சென்றாள் . காரணம் “சிஸ்டர்” என்கிற வார்த்தை . பார்த்த அணைத்த ஆண்களும் தன்னை பிரெண்டாகவோ , காதலியாகவோ மாற்ற துடிக்கும் வேலையில் , தன்னை பார்காமலே நான் கல்லூரி மாணவி என்று தெரிந்தும் “சிஸ்டர்” என்று அழைத்தது மிகவும் பிடித்திருந்தது ரம்யாவுக்கு . தாமஸ் மிக நல்லவனாக இருப்பான் என்று ரம்யாவின் மனதில் சின்ன அபிப்ராயம் ஏற்பட்டது . உடனே ரிப்ளை டைப் செய்தாள் .

ரம்யா : இட்ஸ் ஓகே அண்ணா .

ரம்யாவின் பதிலை பார்த்த தாமஸ் , ரம்யா தன் வலையில் சிக்க தயாராகி விட்டாள் என புரிந்து கொண்டான் .

தாமஸ் : ரொம்ப disturb பண்ணிட்டேனா ?