உதவிக்கு வரலாமே 104

ரம்யா : இறந்து போன உங்க லவ்வர் பேரு என்ன ?

தாமஸ் : சொன்னா நீ நம்ப மாட்டே .

ரம்யா : ஏன் ? அப்படி என்ன அவங்க பேர்ல இருக்கு ?

தாமஸ் மறுபடியும் ஒரு அம்பை எய்து ரம்யாவின் மனதை கலங்கடிக்க நினைத்தான்

தாமஸ் : அவ பெரும் “ரம்யா” தான் .

இதை படித்த ரம்யாவுக்கு தோமஸிடம் தன்னை அரியாமல் நெருங்குவதாக உணர்ந்தாள் .

ரம்யா : நெஜமாவா ? நம்பவே முடியலை

தாமஸ் : நேசம்தான் . அதனால்தான் நீங்க யாரென்று தெரிந்து கொள்ள விரும்பி மெசேஜ் செய்தேன் சிஸ்டர் .

ரம்யா : சரி அண்ணா . உங்க பேரன்ட்ஸ் எல்லாம் எங்க ? நீங்க என்ன பண்றீங்க ?

தாமஸ் : பேரன்ட்ஸ் சொந்த ஊரில் இருக்காங்க . நான் பேங்க் வேலையை விட்டு இப்போ பிசினஸ் தொடங்க போறேன் மா . இங்க தனியாதான் இருக்கேன் .

ரம்யா . ஓ ! ஆல் தி பெஸ்ட்

தாமஸ் : தேன்க்ஸ் . உங்கள ரொம்ப ரொம்ப தொந்தரவு பண்றேனா ?

ரம்யா : அப்படி எல்லாம் இல்லை அண்ணா . உங்ககிட்ட பேசுறது எனக்கு பிடிச்சுருக்கு

தாமஸ் : ஒ ரியலி ! நன்றி

ரம்யா : நோ பார்மாலிடீஸ் .

தாமஸ் : ஓகே சிஸ்டர் .

இதற்குள் மதிய உணவு வேளை வந்தது . ரம்யா சிறிது நேரம் கழித்து மெசேஜ் அனுப்புவதாக தாமஸிடம் சொல்லிவிட்டு சுபாவுடன் சாப்பிட சென்றாள் . மனமெல்லாம் தாமஸ் பற்றிய நினைவாகவே இருந்தது .

ரம்யா ஏனோ தாமசை பற்றியே நினைத்து கொண்டிருந்தாள் . சாப்பிட்டு முடித்தவுடன் மொபைலை எடுத்து தாமஸுக்கு மெசேஜ் டைப் செய்தாள் .

ரம்யா : சாப்பிட்டிங்களா அண்ணா ?

தாமஸ் : இல்லமா . சமையல் பண்ணிட்டு இருக்கேன்

ரம்யா : ஒ ! உங்களுக்கு குக் பண்ண தெரியுமா ?

தாமஸ் : எஸ் ! எல்லா சமையலும் பண்ணுவேன் . நாலு வருஷமா குக் பண்றேன் .

தாமஸ் அடுக்கடுக்கான பொய்களை அள்ளி விட்டான் . ஆண்கள் சமையல் செய்வதை பெண்கள் மிகவும் விரும்புவார்கள் என்று தாமஸுக்கு தெரியும்

ரம்யா : குட் ! சீக்கிரம் சாப்பிட்டு எனக்கு மெசேஜ் பண்ணுங்க

தாமஸ் : சரிமா .

மணி மதியம் 1.00 ஆகியிருந்தது . மொபைலை எடுத்து பிட்சா ஆர்டர் செய்துவிட்டு தாமஸ் குளிக்க சென்றான் . குளித்து முடித்து பிட்சாவை சாப்பிட்டு விட்டு மொபைலை எடுத்த பொது மணி 1.45 . ரம்யாவுக்கு மெசஜ் டைப் செய்தான் .

தாமஸ் : சாப்பிட்டேன் சிஸ்டர் . சாம்பார் சாதம் & கத்திரிக்காய் பொரியல் .

லெக்சரை கவனிக்காமல் ரம்யா ரிப்ளை டைப் செய்தாள் .

ரம்யா : குட் அண்ணா . இன்னைக்கு ஆபீஸ் போகலையா ?

தாமஸ் : இன்னைக்கும் நாளைக்கும் லீவ் . அதான் ரெஸ்ட் எடுக்கறேன் .