உதவிக்கு வரலாமே 104

சுபா : வெல்கம் மை டியர் .

மதிய உணவு இடைவேளையில் ரம்யா ஏனோ தானோ என்று சாப்பிட்டு எழுந்தாள் . தனது கைப்பையை திறந்து மொபைலை எடுத்து பார்த்தாள் .
மூன்று மிஸ்டு கால்கள் . காலேஜ் நேரத்தில் சைலண்ட் மோடில் போட்டு வைத்தது நினைவுக்கு வந்தது . அவசரமாக பார்த்த போது அந்த மூன்று அழைப்புகளும் அப்பாவிடம் இருந்து வந்திருந்தது என்று தெரிந்தது .
அப்பா நம்பரை டயல் செய்து காதில் வைத்தாள் .

அப்பா : ஹலோ ! ரம்யா மா . எங்கடா இருக்கே ?

ரம்யா : காலேஜ்ல இருக்கேன்பா . எதுக்குப்பா மூணு தடவை கால் பண்ணிருகிங்க . ஏதாவது ப்ராப்ளமா அப்பா ?

அப்பா : ச்சே ச்சே . அதெல்லாம் ஒன்னும் இல்லைமா . அப்பா உங்க காலேஜ் பின்னாடி இருக்கிற G7 போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கேண்டா . அப்பாவோட ஜீப் சர்வீஸ் போயிருக்கு . அதான் உன்னோட வண்டில இன்னைக்கு வீட்டுக்கு போலாம்னு நெனச்சேன் .

ரம்யா : சரி அப்பா . நான் என்னமோ ஏதோனு பயந்துட்டேன் . இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துடறேன் அப்பா .

அப்பா : சரிடா செல்லம் . அப்பா உனக்காக வெயிட் பண்றேண்டா

என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள் . அப்பாவிடம் பேசியது ரம்யாவிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது . தனது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் . அடுத்த ஒரு மணிநேரம் காற்றாய் பறந்துவிட , ரம்யா சுபாவிடம் காலை எழுதாமல் விட்ட நோட்ஸை வாங்கிகொண்டு புறப்பட்டாள் .

G-7 காவல் நிலைய வாசலில் வண்டியை நிறுத்திய ரம்யா அங்கே சர்வீசுக்கு போனதாக அப்பா சொல்லிய சுமோ அங்கே நிற்பதை பார்த்து குழம்பினாள் . உள்ளே சென்றவள் அங்கே அப்பா நடுநாயகமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து நேரே அவரிடம் சென்று

“என்னப்பா வண்டி சர்வீஸ் போயிருக்குன்னு சொன்னீங்க வெளிய அங்க நிக்கு……..”

என்று ஆரம்பித்தவள் வலதுபுறம் தான் கண்ட காட்சியை பார்த்து வாயடைத்து போய் அதிர்ச்சியில் உறைந்தாள் .

அங்கே மோகனும் பாண்டியனும் ஜட்டியோடு உட்கார்ந்து இருந்தார்கள் . ருவறுக்கும் முகமெல்லாம் வீங்கி உடம்பெல்லாம் வரி வரியாக லத்தியின் கைவண்ணத்தால் கன்றி போய் இருந்தது . மோகன் அழுது கொண்டிருந்தான் . அருகிலேயே இருவருது பெற்றோரும் நின்று இருந்தார்கள் .

அப்பா : காலைல இந்த பொறுக்கி பசங்க ரெண்டுபேரும் உன்கிட்டே கலாட்டா பண்ணதை பார்த்தேன்மா . அதான் தூக்கிட்டு வந்துட்டேன் . ராஸ்கல்ஸ் ரெண்டு பேர் மேலயும் கஞ்சா கேஸ் போட்டு 15 நாள் ரிமான்ட் பண்ண போறேன் .

ரம்யா : ஐயோ என்னப்பா இது . ச்சே பாவம்பா . அவங்க பண்ணது தப்புதான் . அவங்க பேரன்ட்ஸ் எவ்ளோ கஷ்ட படுறாங்க பாருங்க .

அப்பா : அவங்க புள்ளைய ஒழுங்கா வளர்த்திருந்தா ஏன் இதுங்க தறுதலையா திரியபோகுதுங்க .

ரம்யா : காலைலேர்ந்து நான் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கேன் பா . கண்டிச்சு விட்ருங்க ப்ளீஸ் . இல்லாட்டி என்னாலதான் இப்படி ஆகிடுச்சுனு கில்டியா இருக்கும்பா .

அப்பா : என்னடா பேசுறே நீ . அவங்க பண்ண தப்புக்கு நீ ஏன் கில்டியா நெனைக்கணும் .

ரம்யா : இல்லப்பா நான் சொல்ல வரது உங்களுக்கு புரியல . பிரச்சனையை பெருசு பண்ணவேணாம் என்ற அர்த்தத்தில் சொன்னேன் பா .

அப்பா : பிரச்சனையாவது பெருசாகறதாவது . இந்த ரெண்டு பேரும் இனிமே உன் வழிக்கே வராம பண்ணிடறேன் . யோவ் ஏட்டு அந்த F.I.R ரெடி பண்ணியா இல்லையா

இந்த உரையாடலை கேட்ட மோகனின் அம்மா படாரென்று ரம்யாவின் அப்பா காலில் விழுந்து