வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் மூன்று 87

திட்டங்கள் மெல்ல நடந்தேறியது. நான் அன்றே, அவர்கள் வீட்டுக்கு வந்தேன். அடுத்த நாள் வார இறுதி!

அடுத்த நாள் காலையிலேயே மோகன் என்னைத் தேடி வந்தான்.

என்ன மாமா காலையிலேயே?

இப்பச் சொல்லு மதன்!

என்ன சொல்ல?

நீ, இங்க தங்குறதுனால எனக்கு இங்க லாபம்னு ஏதோ சொன்னியே?

நான் அப்டி சொல்லலியே?! லாபம் இருந்தாலும் இருக்கலாம்னு சொன்னேன்.

எல்லாம் ஒண்ணுதானே?

இல்லியே?

விளையாடாத! என்ன உன் ப்ளான்? எதுக்கு இங்க வந்திருக்க?

கூல் மாமா! ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க?

அவனது பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கோண்டிருந்தது. அவனை என் ஆட்டத்திற்கு ஆட வைப்பதுதான் என் ப்ளானும். பின் மெதுவாய்ச் சொன்னேன்.

என்னால எத்தனையோ நன்மைகள் இருக்கலாம். உதாரணமா, நீங்க ஹரீசை இத்தனை நாளா ஏமாத்திட்டு வந்திருக்கீங்களே அதை அவர்கிட்ட சொல்லாம இருந்தாலே, உங்களுக்கு நன்மைதானே?

குப்பென்று இருந்தது மோகனுக்கு!

நீ, என்ன சொல்ற? அப்டியெல்லாம் ஒண்ணுமில்லியே?!

ஹா ஹா ஹா! எங்க, என்னைப் பாத்துச் சொல்லுங்க! நான் சொல்லுறது என்னான்னு உங்களுக்குப் புரியாது?

அவனால் மறுக்க முடியவில்லை. அதே சமயம், என்னிடம் தோற்பதையும் ஏற்க முடியவில்லை. கோபமாய் சொன்னான்.
போய் சொல்லு பாக்கலாம் ஹரீஸ்கிட்ட. அவன் நம்பிட்டான்னா, நான் தோத்துட்டேன்னு ஒத்துக்கறேன்!

ஹா ஹா ஹா. அப்ப ஹரீசை ஏமாத்துறேன்னு ஒத்துக்குறீங்க? அப்டித்தானே?!

உடன் பின் வாங்கினான்… இல்ல இல்ல…, நான் அப்டிச் சொல்லலை!

கூல் மாமா! ஏன் டென்ஷன் ஆகுறீங்க? என்கிட்ட ஏன் உங்க வீரத்தை காமிச்சு எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க? நான் நல்லது பண்ண நினைச்சாலும், நீங்களே கெடுத்துக்குவீங்க போல?

இப்போது அவன் கொஞ்சம் தணிய ஆரம்பித்திருந்தான்.

பின்ன, நீ என்கிட்ட பேசுற முறை சரியா?

இங்க பாருங்க மாமா, தப்பு பண்றது நீங்க! தவிர, என் மூலமா ஏதோ லாபம் இருக்கலாம்னுதான என்கிட்ட இப்டி பேசிட்டிருக்கீங்க. அப்ப நீங்கதான் கொஞ்சம் பொறுமையா இருக்கனும். நீங்க என்கிட்ட எகுறுனா பாதிப்பு உங்களுக்குதான்.

நான் மட்டுந்தான் தப்பு பண்றேனா? என் கூட உக்காந்து பேசிட்டிருக்கியே, நீயும்தான் ஒரு வகையில தப்பு பண்ற?

பாத்தீங்களா, இன்னும் உங்க வீம்பு போகலை? ஒரு விதத்துல நீங்க சொல்றதும் சரிதான். என் ஸ்டேட்டசுக்கு, உங்களை மாதிரி, துரோகம் பண்ற ஆளு கூட சரி சமமா உக்காந்து பேசிட்டிருக்கேன்ல, அது தப்புதான்!

சரி, உங்க தப்பு என்னான்னு எனக்குத் தெரியும். எங்க, எப்டி அதைச் சொல்லனும்னும் தெரியும். என்னோட தப்பு என்னான்னு நீங்க சொல்லுவீங்க??? ம்ம்ம்?

என் பேச்சில், மோகன் கொஞ்சம் வெளிறிப் போய்தான் இருந்தான். நான் துரோகம் என்று எதைச் சொல்லுகிறேன் என்ற குழப்பம்? மறைமுகமாக அவனது குடுமி, என் கையில் என்பதில் கொஞ்சம் பயந்தும் போயிருந்தார்.

ஏன் மதன் இப்படி பேசுற? இப்ப என்ன வேணும் உனக்கு?

சொல்றேன், அதுக்கு முன்னாடி ஒண்ணு ஞாபகம் வெச்சுக்கோங்க. ஒரு வேளை என்னை நம்பாம ஹரீஸ் உங்களை நம்புறார்னே வெச்சுக்கோங்க! எனக்கு இருக்கிற சக்திக்கு, நீங்களும், ஹரீசும் சேந்து நின்னாலும், என்னை எதிர்த்துட முடியும்னு நினைக்கறீங்களா? சொல்லுங்க? இல்ல எதிர்த்தாலும் ஜெயிச்சிட முடியுமா?

அவனால் பேச முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சம், அவனை என் கண்ட்ரோலுக்குள் கொண்டு வர ஆரம்பித்தேன்.
காட்டில் இருக்கும் ஒரு மிருகத்தை பிடித்தால், ஆரம்பத்தில் வெறியுடன் இருக்கும். எப்படியாவது தப்பிக்க நினைக்கும். கொஞ்சம் ஆக்ரோஷமாகத் தாக்கக் கூட முனையும். ஆனால், காலப்போக்கில், தப்பிக்க வேறு வழியில்லை என்று உணரும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, அடிமையாகி விடும். அந்த அடிமையாக்கும் வேலையைத்தான் நான் ஆரம்பித்திருந்தேன்.

இப்போது தோல்வியை புரிந்த அவன், என்னை சமாதானப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்தான்.

கோவிச்சுக்காத மதன். சரி சொல்லு. என்கிட்ட என்ன சொல்லனும்? நான் என்ன செய்யனும்?

கொஞ்சம் கொஞ்சமா வார்த்தைகள் ஒரு முதலாளியிடம், வேலைக்காரன் பேசும் முறையை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

குட்! இப்டி பேசுனா, எனக்குப் பிடிக்கும். இதை விட்டுட்டு ஏன் ஓவரா திமிறுறீங்க?

சரி சொல்லு!

சொல்றேன், ஆனா இப்ப இல்ல. இப்ப நான் வெளிய கெளம்பனும். முக்கியமான மீட்டிங் இருக்கு. ஈவ்னிங் உங்க கிட்ட பேசுறேன். ஓகே?

ம்ம்ம்! ஓகே!

உண்மையில், அப்படி ஒரு வேலையும் இல்லை. ஆனால், அந்தாள் என் கண்ட்ரோலில் கொண்டு வர, இது போன்ற நடைமுறைகள்தான் ஒத்து வரும்.

அன்று மாலை…

மீண்டும் என்னைத் தேடி வந்தான். காலையில் இருந்த தோரணை, அதிகாரம் மறைந்திருந்தது. கொஞ்சம் என் மேல் பயமும், மரியாதையும் கூடியிருந்தது.

மீட்டிங் எப்டி இருந்தது மதன்?

ம்ம்.. நல்லா இருந்துது. ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு.

வாவ். கங்கிராட்ஸ்!

தாங்க்ஸ்! சொல்லுங்க, என்ன விஷயம்?

இல்ல மதன், ஈவ்னிங் ஏதோ சொல்லுறேன்னு சொன்ன? தயங்கித் தயங்கி வந்தது குரல்.
ஓ… ஆமால்ல, மறந்தே போயிட்டேன்! வேண்டுமென்றே, எனக்கு இது பத்தோடு பதினொன்று என்பது போல் சொன்னேன்.

அதுவும் அவனைக் கடுப்பேத்தியது!

பின் அவனைப் பார்த்து மெதுவாகச் சொன்னேன்.

5 Comments

  1. Raji enaku mail pannu

    1. Raji waiting un msg ku

  2. ஒரு காம கதை போல் அல்லாமல், ஒரு நாவல் போல் மிகவும் interesting ah படித்துக் கொண்டிருக்கிறேன். கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

    1. Apdithan irukum honey rose virupam irutha peslam vanga

    2. Yen mail ku valavanmadhan yen mail

Comments are closed.