அவள் என் கையைப் பிடித்தாள். டேய், ரொம்ப ஃபீல் பண்ணாத, அப்பிடில்லாம் நான் உன் மேல நம்பிக்கை இல்லாம, உடனே அந்த முடிவுக்குப் போகலை. நான் ஒரு நாள் இதுக்காக ஃபோன் பண்ணேன். நீ எடுத்தவுடனே, என்னனு கேக்காம திட்டி வெச்சுட்ட. அப்புறம் நான் வீட்டுக்கு வந்தப்பயும், உன்கிட்ட பேச முயற்சி பண்ணதுக்கு, நீதான், உனக்கு டைம் இல்லை, ஏகப்பட்ட வேலை இருக்குன்னு பேசுன… அதுலதான் கொஞ்சம் மனசு நொந்து இப்படி நடந்துகிட்டேன்! நீ ஏன் அப்படி பண்ண?
அது…. அன்னிக்கு உன் ஃபிரண்டு கூட சண்டை அதான்…என்று கொஞ்சம் தடுமாறினேன். ப்ச்.. அது ஏதோ மூட் அவுட். விடு. தப்புதான்! இப்ப இதை ஒத்துக்கப் போறியா இல்லையா???
அவள் என்னையே ஏதோ நம்பாமல் பார்த்தாள். பின் கேட்டாள், காசு கொடுத்துதான் அன்பை நிரூபிக்கனுமா என்ன?
சும்மா லூசு மாதிரி பேசாத? நான் நல்ல மார்க் வாங்குனப்ப உன்னால முடிஞ்ச கிஃப்ட்டை நீ கொடுக்கலை? வெறுமனே அன்பை மட்டும் காமிச்சிருக்க வேண்டியதுதானே? உன் அனிவர்சரிக்கு ஹரீஸ் கிஃப்ட் தராம இருந்திருந்தா சண்டை போட்டிருக்க மாட்ட? நீ என் மேல காட்டுரது உண்மையான பாசம்ன்னா, என்கிட்டயும் சண்டை போடனும்ல?
இப்ப சொல்றதுதான், நான் இனி பழைய மாதிரி நடந்துக்க மாட்டேன். உன்கிட்ட உண்மையான அன்போட இருப்பேன். திட்டுவேன், சண்டை போடுவேன், ஆனா உனக்கு ஒண்ணுன்னா, முன்ன இருப்பேன். நீயும் அப்படி இருப்பன்னா, இதை ஒத்துக்கோ!
அவள் என்னையே பார்த்தாள். பின் புன்னகை செய்தாள். பிசினஸ் மேன் இல்ல, அதான் பேச முடியாம மடக்குற?! சரி ஓகே! உனக்காக இதை நான் ஒத்துக்குறேன்.
ஆனா, நீ அவங்களை என்னப் பண்ணப் போற? இதுல ஹரீசுக்கு எந்த வருத்தமோ, சங்கடமோ வரக் கூடாது. என்கிட்டயே அவிங்களுக்காக சண்டை போடுரவர், நீ ஏதாவது பண்ணப் போயி, எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ? என்னால, உங்க ரெண்டு பேருக்கு நடுவுல பிரச்சினை வந்தா, அதைத் தாங்க முடியாது!
கவலைப்படாத, அப்படி ஒரு சிச்சுவேஷன் வராது! நான் அவிங்களுக்கு திட்டம் ரெடி பண்ணிட்டேன்!
அப்பிடியா? என்ன ப்ளான்?
ம்ம், பகைவனை உறவாடிக் கெடு!
மூன்று மாதங்கள் கழித்து…
ஹரீஸீன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது! என் சட்டையை பிடித்திருந்தான். ராஸ்க்கல், எங்கடா உங்க அக்கா? எதுக்குடா, அவ சூசைட் செஞ்சுட்டான்னு சொல்லி, இங்க வர வெச்சிருக்க?
நான் செய்திருந்த செயல் அப்படி!
இன்று அவர்கள் கல்யாண நாள். அவளை செல்ஃபோனை ஆஃப் பண்ணி வைக்கச் சொல்லிவிட்டு, நான் ஹரீசை வெளியூரிலிருந்து, அழைத்து இப்படி ஒரு நாடகம் ஆடியிருந்தேன்.
அரக்க பரக்க ஓடி வந்தவனை, கெஸ்ட் ஹவுசில் வைத்து அந்த க்ளிப்பிங்கை காட்டியிருந்தேன்.
அது நானும், ஹரீசின் சித்தப்பாவும், தண்ணியடிக்கும் போது பேசிய பேச்சின் ஒரு பகுதி!
*******************
ஏங்க மாமா, எப்ப, ஹரீசோட சொத்தையெல்லாம் எடுத்துக்கப் போறீங்க?
நீ சொன்ன மாதிரிதானே மதன் நடந்துட்டிருக்கு. நான் ஒரு ரூட்டு போட்டிருந்தேன். திடீர்னு, நீ வந்து புது ரூட்டு சொன்ன. நீ சொல்ற படிதானே போயிட்டிருக்கு?
அது சரிதான்! இப்பதான் ஹரீஸ் ஊர்லியே இல்லையே, இப்பியே டாகுமெண்ட்ல கை வெக்கலாம்ல?
அது வெக்கலாம். ஆனா…
ஆனா, என்ன மாம்ஸ்?
மாம்ஸா?
அதான் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம்ல?
அதுக்குன்னு வயசு…
வயசு வித்தியாசம் பாக்கனுங்கிறீங்களா? சரி பாத்துடலாம். அப்படியே, ஸ்டேட்டஸ் வித்தியாசம் பாக்கலாமா?
என்ன மதன் இப்டி பேசுற?
பின்ன என்ன மாமா, இந்தத் திட்டத்துனால எனக்கு ஏதாவது லாபம் இருக்கா? சொத்துல நான் பங்கு கேட்டேனா? எல்லாச் சொத்தும் உங்களுக்குதானே? எனக்கு இது மாதிரி ஆயிரம் மடங்கு சொத்து இருக்கு! நான் யாரைவது தூக்கனும்னு நினைச்சா, எனக்கு யார் உதவியும் தேவையில்ல!
பைசா பெறாத இந்த சொத்துக்கு, அதுவும் உங்க கைக்கு போற சொத்துக்கு, நான் ஏன் இவ்ளோ மெனக்கெடனும்? இந்தத் திட்டம் போடனும்? எனக்கு லாபமேயில்லாத ஒரு விஷயத்துக்கு இவ்ளோ நாள் நான் இங்க தங்கனும்? ம்ம்ம்?
நீங்கல்லாம் இப்ப காசு பாத்த ஆளு! நான் பரம்பரை கோடீஸ்வரன். என் ஒரு கம்பெனிக்கு ஈடாகாது, உங்க சொத்து. இப்ப உங்க கூட அடிக்கிற தண்ணியையும், நேரத்தையும் இன்னொரு மீட்டிங்ல ஸ்பெண்ட் பண்ணியிருந்தா, ரெண்டு காண்ட்ராக்ட் சைன் பண்ணியிருந்திருப்பேன் தெரியுமா?
ஏன் மதன் கோவிச்சிக்கிற?
Raji ma unaku tha comments pls reply