கண்மூடித்தனமான நம்பிக்கை, அதுவும் தகுதியில்லாதவிங்க மேல வெச்சிருக்காருங்கிறதைத் தாண்டி வேறெந்த பிரச்சினையும் இல்லை. அவிங்க சித்தப்பா பேச்சைக் கேட்டுத் திட்டுனா கூட, என்கிட்ட தனியா சாரி சொல்லுவாரு. சொன்னாலும், ‘நீ எப்பிடி இப்படியெல்லாம் நடந்துக்குற’ன்னு என்கிட்டயே வருத்தப்படுவாரு!
நான் அவரு கம்பெனிக்கு வரலைன்னு சொன்னப்ப கூட, இதுக்கு எதுக்கு இஞ்சினியரிங் படிச்ச, என்னைக் கல்யாணம் பண்ணிகிட்டதுனால, உன் திறமை அதிகமானா, இன்னும் வெளிய வந்தாதான் எனக்கு பெருமையே ஒழிய, இப்படி வீட்டோட இருக்கிறது எனக்கு அசிங்கம்னு ரொம்ப பேசுனாரு!
என்னை ரொம்ப விரும்புறாருடா. என்னைப் பத்தி தெரிஞ்சவுடனே, அவரு சொன்னது, உனக்கு நான் எல்லாவுமா இருப்பேன், இனிமே நீ ரொம்ப சந்தோஷமா இருக்கனும்னு சொன்னாரு. உனக்காக நான் ஃபீல் பண்ணப்ப கூட, உனக்கும் நாம் சொந்தமா இருப்போம்னு உண்மையாச் சொன்னாருடா. என்னைத் திட்டுனா கூட, பாசத்தோட அருமை புரிஞ்ச நானே எப்படி இப்படி நடக்கலாம்னுதான் வருத்தப்படுவாரு! அவர் ரொம்ப நல்லவர். அதுதான் அவரோட மிகப் பெரிய ப்ளஸ். ஆனா அவர் சித்தப்பாவுக்கும் அது ப்ளஸ்ஸா போயிடுச்சி!
பேசிக்காவே அவரு பாசத்துக்காக ஏங்குறவருடா! ஒரு விதத்துல அவரும் நம்மளை மாதிரிதாண்டா! நமக்கு பெத்தவிங்க இருந்தும் இல்லாத மாதிரி. அவருக்கோ, உண்மையாவுமே இல்ல. நமக்குனாச்சும் தாத்தா இருந்தாங்க, ஆனா அவருக்கு? இவிங்க சித்தப்பா, சித்தி முதல்ல அவிங்க அப்பா, அம்மாவோட பணத்துக்காக வந்தாங்க. அப்புறம் போலியா நடிச்சு, அப்படியே இருந்துட்டாங்க!
அவர் கதையை என்கிட்ட சொல்லியிருக்காரு. ஆரம்பத்துல அதுல எனக்கு பெரிய தப்பு தெரியலை. ஆனா, அவிங்க சித்தப்பா, சித்தி சுயரூபம் தெரிஞ்சதுக்கப்புறம், எனக்கு அது வேற அர்த்தங்களைக் கொடுக்குது. அவங்க சித்தப்பா, அவரை பார்ட்டிக்கு அழைச்சிட்டு போயிருக்காரு, மறைமுகமா எல்லா வித கெட்ட பழக்கங்களுக்கும் பழக்க நினைச்சிருக்கார். ஆனா, இவரு எதுலியும் மாட்டிக்கலை. சுயமா, நல்ல பழக்க வழக்கங்களோட வளந்தாரு. அதையே, அவரு எங்க சித்தப்பா, எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து வளத்தாரு, அவ்ளோ நம்பிக்கை என் மேலன்னு புரிஞ்சு வெஞ்சிருக்கார். மனுஷனுக்கு இவ்ளோ பாசிட்டிவான எண்ணம் இருக்கக்கூடாது.
கல்யாணம் ஆகி இந்தக் காலத்துல, அவரை நான் ரொம்ப லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்! இப்பியும், இந்த உண்மைல்லாம் தெரிஞ்சுதுன்னா, அவர் தாங்க மாட்டாருடா!
கெட்டவனா இருந்தா, செஞ்ச தப்புக்கு ஃபீல் பண்ணத் தேவையில்லை! ஆனா, நல்லவனாச்சே, நம்மளையே நம்பி வந்தவளுக்கு இந்த நிலை வரக் காரணமாயிட்டோமே, அவ சொன்னதை கேக்கலியேங்கிற குற்ற உணர்ச்சிலியே செத்துடுவாரு! எனக்கு அதுதான் பயமா இருக்கு! எனக்கு அவர் கூட சந்தோஷமா வாழனும்டா! அவ்ளோ நல்லவருடா! அவள் கண்கள் கலங்கியிருந்தது.
அவள் பேசப் பேச, எனக்கு, அவள் ஹரீஸ் மேல் வைத்திருந்த காதலைப் பார்த்து கொஞ்சம் பொறாமை கூட வந்தது. அதே சமயம், உறுதியும் பூண்டேன், அவள் வாழ்வில், மகிழ்ச்சியை கொண்டு வருவது என்று!
நாளைக்கு என்ன வேலை உனக்கு? அடுத்த நாள் இரவு, சாப்பிடும் போது அவளிடம் கேட்டேன்!
ஒரு வேலையும் இல்லை! சொல்லு!
நாளைக்கு காலைல 8 மணிக்கு ரெடியா இரு. ஒரு இடத்துக்கு போகலாம்.
கொஞ்சம் இடைவெளி விட்டுச் சொன்னேன். பிரச்சினையை என்கிட்ட சொல்லிட்ட, அதுனால அதை மறந்துடு, இன்னமும் நீ அதை நினைச்சு ஏதும் குழம்பிகிட்டு இருக்காத. நாளைக்கு உன்னைப் பாக்குறப்ப, உன்கிட்ட அதே பழைய தைரியம், தன்னம்பிக்கை இருக்கனும்னு எதிர்பாக்குறேன். இது என் ஆசை!
அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின் புன்னகை செய்தாள். சரி!
அடுத்தா நாள் காலை. நானே அவளை காரில் அழைத்துச் சென்றேன். சொன்ன படியே பழைய கம்பீரத்தை அடைந்திருந்தாள். நல்ல ஒரு காட்டன் சாரியில், கட்டப்பட்டிருந்த நேர்த்தியில், மரியாதையூட்டும் அலங்காரத்தில், கொஞ்சம் ஸ்டைலாகவும் அவளைப் பார்க்கும் போது, எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. புடவையைப் போல், ஒரு பெண்ணை செக்சியாகவும், மிகுந்த கம்பீரமாகவும் காட்டக் கூடிய உடை ஏதேனும் உண்டோ?
எங்க போறோம்?
நீயே தெரிஞ்சிக்குவ!
அவள் முறைத்தாள், நான் புன்னகைத்தேன்.
கொஞ்ச நேரப் பயணத்தில், கார் எங்களது அலுவலக ஹெட் ஆஃபிசை அடைந்தது. அவள் முகத்தில் குழப்பம் இருந்தாலும், அமைதியாக என்னுடன் வந்தாள். எனது அறையில் அவளை அமர வைத்து காத்திருக்கச் சொன்னேன்.
பின் சிறிது நேரம் கழித்து, அவளை மீண்டும் அழைத்துக் கொண்டு ஒரு கான்ஃபரன்ஸ் அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு பெரிய குழுவே இருந்தது. அவர்களிடம் அறிவித்தேன்.
ஜெண்டில்மென், நான் சொன்ன மாதிரி, மீட் மிஸ் _______. நம்ம க்ரூப்போட புது போர்டு மெம்பர், எனக்கு அடுத்த பெரிய ஷேர்ஹோல்டர், அண்ட் மை சிஸ்டர்!
ப்ளீஸ் கிவ் அ பிக் ஹேண்ட்!
கான்ஃபரன்ஸ் அறையில் பெரிய கரகோஷம்! அவள் முகத்தில் பல உணர்ச்சிகள். யாருக்கும் தெரியாமல் என்னை முறைத்தாள். எதை வெளிக் காட்டினாலும், அது என்னை அவமானப்படுத்தும் என்பதால் அமைதியாக எல்லாருக்கும் நன்றி சொன்னாள். இருந்தாலும், தான் கம்பெனி நிர்வாகத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும், நான் எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் தெரிவித்தாள். அவள் அதைச் சொன்ன போது, என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு சொன்னாள்.

Raji ma unaku tha comments pls reply