வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்று 114

அதில் மறைமுக செய்தி இருந்தது. நீ கொடுத்தா நான், வாங்கிக்கனுமா?

சிறிது நேரம் கழித்து, என் அறையில்!

நான் உன்கிட்ட என்ன கேட்டேன், நீ என்ன பண்ணிட்டிருக்க? நான் சொத்தா கேட்டேன்? இல்ல இதுக்கு ஆசைப்பட்டுதான் நான் வந்தேன்னு நீயா நினைச்சுகிட்டியா?

தாத்தா என்கிட்ட பணம் கொடுத்ததுக்கே, இங்கியே வேலை செய்யச் சொன்னதுக்கே ஒத்துக்காதவ இப்ப நீ சொன்னா நான் கேட்கனுமா? அவிங்க முன்னாடி சொன்னா, உனக்கு கஷ்டமா இருக்கும்னுதான் நான் கம்முனு இருந்தேன். என்னுடைய முடிவுகளை எடுக்க நீ யாரு? நான் உன்கிட்ட எதிர்பாக்குறது பாசம்தான், ஆனா நீ அதையும் விலை போட்டுட்டீல்ல? அவள் மிகுந்த உணர்ச்சி வயப்பட்டிருந்தாள்! கோபத்தில் சிறிது கண் கலங்கியும் இருந்தது.

நான் அவளையேப் பார்த்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினேன்!

அவள் குடித்து முடித்த பின், அவள் முன் சில டாக்குமெண்ட்களையும், பாஸ்புக்கையும் நீட்டினேன். டாக்குமெண்ட், கம்பெனி ஷேர்களில் 20% அவளது பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. அவளது அக்கவுண்ட்டில், சில கோடிகள் டெபாசிட் செய்யப்பட்டு இருந்தது. அவள் இன்னும் கடுப்பானாள்.

முதல்ல டாக்குமெண்ட்ல இருக்குற தேதியைப் பாரு.

பார்த்தவள் அதிர்ந்தாள். ஷேர்களை அவள் பெயருக்கு மாற்றியது, தாத்தா இறந்து ஒரு மாதத்தில் நடந்திருந்தது. அதே போல், அக்கவுண்டில் இருக்கும் பணமும், ஒரேடியாக இல்லாமல், ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒரு முறை என்று இரண்டு முறை போடப்பட்டு இருந்தது. நான் இன்னொரு லெட்டரையும் அவளிடம் நீட்டினேன். அது தாத்தா, எனக்கு உயிலுடன் சேர்த்து எழுதியிருந்த கடிதம்.

அதில், நான், அவளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அவளுக்கு தேவைப்படும் சமயத்திலோ அல்லது எப்போது கொடுத்தால் ஏற்றுக் கொள்வாளோ, அப்போது ஒப்படைக்கச் சொல்லியும் இருந்தது. அது அவரது கடைசி ஆசை என்றும் இருந்தது.

அவளுக்கு தாத்தாவின் அன்பைப் பார்த்ததும் மீண்டும் கண் கலங்கியது. பின் என்னைப் பார்த்தாள்.

நான் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தேன். ஆனா, தாத்தாவே, என்ன செய்யனும், எப்படி செய்யனும்னு எல்லாமே சொல்லிட்டாரு. இந்தப் பணம், உன்னோட ஷேர் படி, உனக்கு வர வேண்டிய க்வாட்டர்லி ப்ராஃபிட். இன்னிக்கு இதை உனக்கு கொடுக்கனும்னு தோணுச்சு!

ஆனா, எனக்கு பணம் முக்கியமில்லைன்னு உனக்கு தெரியாதா?! இப்போதும் அவள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதில் வேகம் குறைந்திருந்தது.

நீ நல்லவ. பணம் முக்கியமில்லைன்னு நினைக்கிறவ.

ஆனா, நீ இருக்கிற உலகம் அப்படி கிடையாது. அதிலும் பணம் அதிகம் இருக்கிர இடத்துல, வக்கிரம் பிடித்த ஆட்களும் அதிகம். நீ உன்னைக் காப்பாதிக்கனும்னா, இது இருக்குறது நல்லது.

ஆக, திறமை மேல நம்பிக்கை வைக்காத, பணத்து மேல வைன்னு சொல்லுற இல்ல?

பைத்தியம் மாதிரி பேசாத? வெறும் திறமையோ, பணமோ யாரையும் காப்பாத்தாது. எல்லாமே, எப்படி உபயோகப்படுத்துரதுங்கிறதுலதான் இருக்கு. கராத்தே கத்துக்கோன்னு சொல்ற மாதிரிதான் இதுவும்! இல்லாதவங்கன்னா ஓகே. உனக்கு இருக்குங்கிறப்ப எதுக்கு இந்த பிடிவாதம்?

ஓ, காசு கேட்ட ஆளுங்க மூஞ்சில, இந்தப் பணத்தைக் காமிச்சு, என் வாழ்க்கையை காப்பாத்திக்கச் சொல்ற? அப்படித்தானே?!

அவளையே பார்த்தேன். கோபத்தில் அவள் பெருமூச்சு வாங்கினாள்!

கோபத்துல வார்த்தையை விடாத! அமைதியா இரு! அவிங்க சாதாரண மாமனார், மாமியார் மாதிரி கொஞ்சம் சீர் எதிர்பார்த்திருந்தா, நானே இதைக் கொடுக்கச் சொல்லியிருந்திருப்பேன். ஆனா, அவிங்க நடந்துகிட்ட விதம், நீ அனுபவிச்ச கொடுமையை, நான் அவ்வளவு சாதாரணமா விட்டுட மாட்டேன்! இதை சொன்ன போது என் கண்களில் தெரிந்த கோப வெறியைப் பார்த்து அவளே தடுமாறினாள்.

மெல்ல என் கையைப் பிடித்தாள், சாரி என்றாள்!

நான் மெதுவாகச் சொன்னேன், இதை யூஸ் பண்ணி உன் ஆபத்துல இருந்து தப்பிச்சிக்கோன்னு சொல்லலை. இது இருக்குறதே, எதிர்காலத்துல உனக்கு பல ஆபத்துகளை தடுக்கும்னு சொல்லுறேன். சீறுனாத்தான் பாம்புக்கு கூட மரியாதை! இல்லாட்டி, அதுக்கும், மண்புழுவுக்கும் வித்தியாசம் காமிக்க மாட்டாங்க மனுஷங்க.

தாத்தாவோட ஆசை, எனக்கும் உனக்கு ஏதாவது செய்யனும்னு இருந்தது, இனி உன் கையில கொஞ்சம் பணமும், துணைக்கு நானும், நீ பொறுப்பெடுத்துக்க சில கடமைகளும் இருந்துச்சுன்னா, அதுவே உன்னை கொஞ்சம் வழிநடத்தும்.

அன்னிக்கு ஹரீஸ்க்காக அவ்ளோ ஃபீல் பண்ணி பேசுன! ஒரு வேளை நீ அன்னிக்கு சூசைட் பண்ணியிருந்தா, பொய்யான கூட்டத்துல அவரை தனியா விட்டுட்டு போயிருந்தா, அது அவருக்கு எவ்வளவு பெரிய ஆபத்து? இல்ல நீ சூசைட் பண்ணதுக்கு காரணம் அவிங்க சித்தப்பா, சித்திதான், அதை அவர்கிட்ட சொல்ல வந்தப்ப, அவர் காது கொடுத்து கேக்கலைன்னு தெரிய வந்திருந்தா குற்ற உணர்ச்சிலியே செத்துட மாட்டாரு?

அவளுக்கு, அது வரை இது தோணவில்லை என்பதை அதிர்ந்த, விரிந்த அவள் கண்கள் சொல்லியது!

அதுவும் இல்லாம…சிறிது இடைவெளி விட்டவன் சொன்னேன், என்னால, நீ தற்கொலை வரை போனதை இன்னும் ஜீரணிக்க முடியலை. ஒரு வகையில, அதுக்கு நானும்தானே காரணம்! நான் உன் மேல இன்னும் கொஞ்சம் அன்பா இருந்திருந்தா, நீ நேரடியா என்கிட்ட வந்து சொல்லியிருப்ப, இப்பிடி தற்கொலைக்கு போயிருக்க மாட்ட! இதை என் தப்புக்கான பிராயிச்சத்தம்னு எடுத்துகிட்டாலும் சரி, உனக்கு உரிமையுள்ள பங்குன்னு நினைச்சாலும் சரி, இல்ல தாத்தாவோட கடைசி ஆசைன்னாலும் சரி, நீ இதை ஒத்துகிட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்! ப்ளீஸ்!

1 Comment

  1. Raji ma unaku tha comments pls reply

Comments are closed.