வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்று 114

ஹரீஸூடன் அவளுக்கு திருமணம் என்று முடிவு செய்த இரண்டு நாளில், என் தாத்தா மரணமடைந்தார். தாத்தாவின் இறப்பு என்னை பாதித்தடை விட, அவளை பாதித்ததுதான் மிக அதிகம். இறக்கும் தருவாயிலும், என்னிடமும், அவளிடமும், நீங்க ரெண்டு பேருந்தான் ஒருத்தருக்கொருத்தர் துணையா இருக்கனும் என்று சொல்லி விட்டு இறந்தார். தாத்தாவின் மரணத்தில்தான், அவள் எவ்வளவு தாத்தாவின் மேல் அன்பு வைத்திருந்தாள், எவ்வளவு பாசத்திற்க்காக ஏங்கினாள் என்பது அவள் கதறலில் தெரிந்தது. அப்பொழுதும், அவளிடம் இருந்து தள்ளி நின்றேனே ஒழிய, அவளை சமாதானப் படுத்தக் கூட இல்லை.

அந்தச் சமயத்திலும் கூட, தாத்தாவின் இறுதிச் சடங்குகளை தான் செய்வதாகவும், தான் அவருக்கு மகன் போல என்று என் தந்தை நாடகமாடுகையில், அவள்தான் என்னை தனியாக இழுத்து, அவரு டிராமா போட்டுட்டிருக்காரு, நீ வேடிக்கை பாத்துட்டிருக்க? அவரை மட்டும் இதுக்கு அலவ் பண்ண, உன் தாத்தா மட்டுமல்ல, நானும் இந்த ஜென்மத்துல உன்னை மன்னிக்க மாட்டேன். உனக்கு வேணா, உணர்ச்சி இல்லாம இருக்கலாம். ஆனா, மத்தவிங்க உணர்ச்சியை மதிக்கக் கத்துக்கோ என்று திட்டினாள்.

அதன் பின் நான் எல்லாவற்றையும் கையில் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக என் தந்தையை ஓரம் கட்டினேன். தாத்தாவின் உயில் படி, அனைத்துச் சொத்துக்களும் எனது பெயருக்கு மாறியது. தாத்தாவின் ஆசைப்படி, அவளுக்கும் ஹரீசுக்கும் கல்யாணம் நடந்தது!

ஹரீஸை பார்க்கும் போது மிக நல்லவராய்தான் தோன்றினார். ஏனோ, எனக்கு அவரது சித்தப்பா, சித்தியைதான் பிடிக்கவில்லை. அவர்கள் ஹாரீஸிடம் பேசுவது, என் தந்தை, என் அம்மாவிடம் நடித்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது. இருந்தும் நான் அமைதியாக இருந்து விட்டேன். ஹரீஸும் நல்ல புத்திசாலியாகத்தான் இருந்தார். ஆகையால், அவர்கள் விஷயம் என்று ஒதுங்கி இருந்து விட்டேன்.

அதுதான் இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறி நிற்கிறது!

அவள் இன்னும் என்னைத் திட்டிக் கொண்டு இருந்தாள். அவளைப் பார்க்க பார்க்க, என் மனதுள் குற்ற உணர்ச்சி பெருகியது. ஆரம்பத்திலிருந்து, அவள் என்னிடம் அன்பாகத்தான் இருக்கிறாள். நான் திருப்பி எந்த விதமான உணர்வையும் காட்டாவிட்டாலும், என் மேல் அவளுக்கிருந்த பாசம் அப்படியே இருந்திருக்கிறது. இத்தனைக்கும் கூடப் பிறந்தவள் கூட இல்லை!

இவளுக்கென்ன தலையெழுத்து? தாத்தாவே இவள் பங்கிற்கு கொஞ்சம் சொத்து எழுதி வைக்கிறேன் என்று சொன்னதற்கு வலுக்கட்டாயமாய் மறுத்தவள், இன்று தனக்கு யாரும் இல்லை என்று தற்கொலை வரை போயிருக்கிறாள். அப்படி, இவளிடம் கூட அன்பைக் காட்டாமல், என்ன ஒரு வாழ்க்கை வாழ்கிறேன் நான்???

எந்த சம்பந்தமும் இல்லாமல், என் மேல் உருகி உருகி அன்பினைக் கொட்டும், இவளிடம் கூடத் திருப்பி அன்பினைக் காமிக்காமல், என் அம்மாவையும், அப்பாவையும் குறை சொல்ல என்னத் தகுதி இருக்கிறது?

எதற்க்கு அப்படி வாழனும்? அப்படி வாழ்ந்து என்ன சாதித்து விடப்போகிறேன். நான், என்னை மாற்றிக் கொண்டேயாக வேண்டும் என்கிற எண்ணம், என் மனதில் வலுப் பெற்றது.

மெல்ல வாய் விட்டுச் சொன்னேன். சாரி!

திட்டிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். அதான் ஏற்கனவே சொல்லிட்டியே, இப்ப எதுக்கு சொல்ற?

அப்ப சொன்னது, நான் உன்கிட்ட பேசுன முறைக்கு. இப்ப சொல்றது, நீ எவ்ளோ என் மேல பாசமா நடந்துகிட்டாலும், உன்னை புரிஞ்சிக்காம இருந்ததுக்கு.

எனக்கு, அம்மா போனதுக்கப்புறம், யார் மேலயும் நம்பிக்கையே வரலை. ஒரு மாதிரி, மனசு கல்லா மாறிடுச்சி. அப்படியே, என்னைச் சுத்தி, நானே ஒரு வேலி போட்டுகிட்டேன்.

தாத்தாவோட இறப்புல நீ ஃபீல் பண்ணது, என்கிட்ட பேசுனது எல்லாமே, நீயும் பாசத்துக்காக எவ்ளோ ஏங்குற, எனக்காக எவ்ளோ யோசிக்கிற எல்லாமே தெரியும். ஆனா, அப்ப உனக்கு ஆறுதலா இருந்திருந்தா, நீ கல்யாணத்துக்கு ஓகே சொல்லியிருப்பியா, சொல்லியிருந்தாலும், அங்க போயும் என்னைப் பத்தி, நான் தனியா இருக்கேனேன்னு யோசிச்சிட்டு இருந்திருப்பன்னு எனக்கு தோணுச்சு, அதான், அப்பவும் சரி, கல்யாணத்துலியும் சரி, உன்னை விட்டு தள்ளியே நின்னேன். குறைந்த பட்சம், நீ உனக்கு கிடைச்சிருக்கிர புது குடும்பத்தோட சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சேன். ஆனா, அது உனக்கு இப்படி ஒரு சிக்கலை கொண்டு வரும்னு நினைக்கலை.
இப்படியே தள்ளி நின்னதாலத்தான் உன்கிட்டயோ, உன் ஃபிரண்டு லாவண்யாகிட்டயோ கூட பெருசா உணர்ச்சியை காமிச்சுகிட்டதில்லை.ப்ச்…

பேசிக் கொண்டிருந்தவன், திடீரென்று உணர்ச்சி வசப்பட்டேன். இனி உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்லாத. யாரிருந்தாலும், இல்லாட்டியும் நான் இருப்பேன் உனக்கு!

அதான் சொல்றேன், சாரி! என்று தலை குனிந்தேன்

அவள் உணர்ச்சிவயப்பட்டிருந்தாள் என்பதை கலங்கிய கண்களே சொல்லியது. வேகமாக என்னை இழுத்து அவள் மார்போடு அணைத்துக் கொண்டாள். என் முடியை கோதிக் கொடுத்தாள்.

இப்பொழுதும் என்னைத்தான் அவள் ஆறுதல் படுத்துகிறாள்!

அப்படியே கொஞ்ச நேரம் இருந்தோம். மனதுக்கு நெருக்கமான சில பெண்களிடம் இருந்து மட்டுமே வரும் ஒரு பிரத்யோக வாசனை, அவள் உடலில் இருந்து வந்தது. இது நாள் வரை இதனை நான் கவனித்திருக்க வில்லை அல்லது அறிந்திருக்கவில்லை. இது கண்டிப்பாக காமத்தின் வாசனை இல்லை. அன்பின் வாசனை. அதில் கொஞ்சம் தாய்மையின் வாசமும் இருந்தது.

1 Comment

  1. Raji ma unaku tha comments pls reply

Comments are closed.