வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்று 109

அவளும் வீம்பாகவே பேசினாள்! எனக்கு 3, 4 வருடங்கள் முன்பே பிறந்தவளாயிற்றே?

என் பிரச்சினையை நான் பாத்துக்குறேன். உன்கிட்ட சொல்லனும்னு அவசியமில்லை! நீ போ!

நான் அவளை நெருங்கினேன்! அவள் பின்னாடியே சென்றாள்!

சொல்லு! என்ன பிரச்சினை?

நீ வெளிய போ!

சொல்லு!

நீ வெளிய போ!

சுவர் வரை பின்னாடியே சென்றவள், அதற்கு மேல் நகர முடியாமல் நின்றாள். நான் அவளை நெருங்கினேன்!

சொல்லு!

நீ போடா! நான் பாத்துக்குறேன் என் பிரச்சினையை! நீ யாரு இடையில?

சொல்லு! அழுத்தமாக வந்தது குரல்!

இப்போது அவள் கண்களில் கொஞ்சம் கண்ணீர் எட்டிப் பார்த்தது!

எனக்கோ மனமே தாங்கவில்லை! எத்தனையோ சமயங்களில் தைரியமாக நின்றவள், இன்று கண்ணீர் விடுகிறாளே! இன்னும் என்ன எனக்கு வீம்பு என்று என்னை நானே கடிந்து கொண்டேன்!

அவள் கைகளை அமைதியாக, அழுத்தமாகப் பிடித்தேன். அவளைப் பார்த்துச் சொன்னேன்.

நாம பேசிகிட்டதில்லைதான். ஆனா, உன்னைப் பத்தி, எனக்கு நல்லா தெரியும்! என்னைப் பத்தி உனக்கு நல்லா தெரியும். உன் கேரக்டர்க்கு, எங்க இருந்தாலும், நீ சந்தோஷமா இருப்பேன்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, இந்த சூழ்நிலையில உன்னைப் பாத்ததும் என்னால தாங்க முடியலை! அதுனாலத்தான் கோவத்துல கத்துனேன்! மத்தபடி என் வீடு, அப்புடில்லாம் நான் நினைக்க மாட்டேன்னு உனக்கே தெரியும்!

நான் என்ன வெளில பேசினாலும், உனக்கு ஒண்ணுன்னா நான் இருப்பேன்! அதே மாதிரி, எனக்காக யாராவது உண்மையா ஃபீல் பண்ணுவாங்கன்னா, அது இப்போதைக்கு நீ மட்டும்தான்னும் எனக்கு தெரியும்!

அவள் கண்கள் விரிந்தது! அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பத்து வருடங்களில், இன்றுதான் அவளிடம் இந்த மாதிரி பேசுகிறேன் என்று அவளுக்கு ஆச்சரியம்! அவள் கண்களில் கண்ணீர் அதிகமானது!

சொல்லுக்கா! ப்ளீஸ். என்ன உன் பிரச்சினை?

அவள் இன்னும் என்னை வெறித்துப் பார்த்தாள்!

அக்காவா?!

பளாரென்று என்னை அறைந்தாள். பின் என் மார்பிலேயே சாய்ந்து அழத் தொடங்கினாள்!

பத்து வருடங்கள் கழித்து இன்றுதான் அக்கா என்று அழைத்திருக்கிறேன்!

அவள் இந்த வீட்டுக்கு வந்து, சில மாதங்கள் கழித்து, அவளாக நெருங்கி என் மேல் பாசம் காட்ட முயன்ற போது கூட, அவளை உதாசீனப்படுத்தியவன்! அதற்குப் பின்பும், எப்பொழுதாவது, மிகக் குறைவாக பேசியவன், அதுவும் அவளாக என்னிடம் பேசினாலொழிய பேசாதவன், இன்று நானாக அக்கா என்று சொன்னவுடன் அவளால் தாங்க முடியவில்லை!

தனக்கென்று யாரும் இல்லை என்று புலம்பியவளிடம், நான் இருப்பேன் என்று காட்டிய அன்பினை, அவளால் தாங்க முடியவில்லை! அவள் பாரம் தீர, என் மார்பிலேயே நீண்ட நேரம் அழுதாள்!

அவள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரச்சினையை மட்டுமல்ல, இத்தனை நாளாக அவள் மனதில் இருக்கும் ஒரு விதமான அனாதை என்ற உணர்வையும், ஏன் இவ்வளவு நாளாய் இந்த அன்பைக் காட்டவில்லை என்ற கோபத்தையும், இன்னும் அவள் மனதில் இருந்த சின்னச் சின்ன கவலைகள் எல்லாவற்றையும் சேர்த்தே கரைத்தாள்! ஆகையால் ரொம்ப நேரம் அழுதாள்!

அவளை அணைத்த படியே நானும் இருந்தேன்.

அழுதது அவளாயினும், அவளுடன் சேர்ந்து எனது இறுக்கம், கவலையும் கூட கரைவது போன்ற ஒரு உணர்வு! அவ்வளவு சோகத்திலும், நானும் இதே மனநிலையில் இருப்பேன் என்று எண்ணியிருந்தாள் போலும்.

1 Comment

  1. Raji ma unaku tha comments pls reply

Comments are closed.