வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஒன்று 112

என்னையும் தேற்றுவது போல், அவள் கைகள், என் முதுகை முழுதாக தடவிக் கொடுத்தது! என்னை ஆசுவாசப்படுத்தியது!

அக்கா இல்லையா? மூத்தவள் கடமையை செய்கிறாள் போலும். அந்த நிலையிலும் எனக்கு சிரிப்பு வந்தது! அவள் எப்போதும் இப்படித்தான், பாசத்தை அள்ளி வழங்கிக் கொண்டே இருப்பாள்!

நீண்ட நேரம் அழுதவளின் அழுகை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது! சிறிது நேரம் கழித்து விலகினாள்!

பாட்டில் தண்ணீரை நீட்டினேன்! குடித்தவள் தாங்க்ஸ் என்றாள்! அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு!

கொஞ்சம் இரு வரேன்!

சமையலறை சென்று இரண்டு கப்களில் டீ எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்ற போது, அவள் முகம் கழுவி கொஞ்சம் பளிச்சென்று இருந்தாள்! நான் டீயுடன் வந்ததை விட, நான் திரும்ப வந்தது, அவளுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது!

தாங்க்ஸ்!

குடி!

குடித்து முடித்தும், இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தோம். சிறிது நேரம் கழித்து சொன்னேன்.

இப்ப சொல்லு! என்ன உன் பிரச்சினைன்னு?

அவள் என்னை பார்த்தாள்! அதில பல கேள்விகள்!

நீ உண்மையான அக்கறையில கேக்குறியா? இத்தனை நாள் இல்லாம, இன்னிக்கி என்ன புதுசா பாசம்? என் மேல பரிதாபப்படுறியா? உன்னை மாதிரியே, எனக்கும் யாருடைய பரிதாபமும் புடிக்காதுன்னு தெரியாதா உனக்கு? எல்லாத்துக்கும் மேல, திடீர்னு நீ வந்து, அக்கான்னு சொல்லி, கொஞ்சம் பாசம் காட்டுனா, நான் ஃபீல் பண்ணி சொல்லிடனுமா? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்!

எனக்கும் புரிந்தது. மெதுவாகச் சொன்னேன்.

இதுவரைக்கும் நடந்ததை மாத்த முடியாது! அதுக்குன்னு சில விளக்கங்கள் இருக்கும். மாத்த முடியாட்டியும், ஏன் அப்புடி நடந்துன்னு பேசி புரிஞ்சிகிட்டு, இனி அப்படி நடக்காம பாத்துக்கலாம். ஆனா, அது அவ்ளோ முக்கியம் இல்லை இப்ப!

இப்ப முக்கியம், உன் பிரச்சினைதான். என்னால, நீ தற்கொலை வரை போனதை என்னால புரிஞ்சிக்கவே முடியலை. அப்படி என்ன பிரச்சினை உனக்கு?

அவள் இன்னும் வாய் திறக்கவில்லை!

நான் ஒண்ணும் வாய் வார்த்தைக்காக சொல்லலை. நான் தள்ளிதான் நின்னேனே ஒழிய, வெறுத்தது கிடையாது. உன்னை எனக்கு எப்பியுமே பிடிக்கும். இன்னும் சொல்லப் போனா, நீ எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன்! பெரிய இன்ஸ்பிரேஷன். சுத்தி நடக்குற எந்தப் பிரச்சினையும் நம்மை பாதிக்காம, தன்னைத் தானே ஒழுங்கா எப்புடி வளத்துக்குறதுன்னு உன்னைப் பாத்துதான் கத்துகிட்டேன்.

உன் ஒழுக்கம், தைரியம், மனவலிமை முக்கியமா, காசு பெருசில்லைன்னு நினைக்கிறது எல்லாமே எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம்! அப்படிப்பட்ட நீ இன்னிக்கு இப்பிடி பண்ணங்கிறதை என்னால தாங்க முடியலை.

நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். எப்போதும் உணர்ச்சியைக் காட்டாத கல்லைப் போல இருப்பவன், இன்று இவ்வளவு பேசியது, அவளுக்கும் மிக்க ஆச்சரியம். அவளும் உணர்ச்சிவயப்பட்டு இருந்ததை அவள் கலங்கிய கண்கள் சொல்லியது.

மெல்ல அவள் கையைப் பிடித்தேன். நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணதையே என்னால தாங்க முடியலை! ஆனா நீ என்னான்னா, உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்றதை எப்டி எடுத்துக்குறது?! இப்டில்லாம் நீ யோசிக்கக் கூட மாட்டியே? ஹரீஷ் என்ன ஆனாரு? உன் மாமானார், மாமியார் என்ன ஆனாங்க? மறந்தும் நான், அவள் அப்பா, அம்மாவைப் பற்றி கேட்கவில்லை.

எனது அன்பில் மிகவும் கரைந்தாள். இருந்தும் தயங்கினாள்! என் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள்! அவள் உதடுகள் மட்டுமல்ல உடலும் நடுங்கியது!

அவள் சொல்லி முடித்தாள்!

கடுங்கோபத்திலும், திக்பிரம்மை பிடித்தும் இருந்தேன். செயல்களை விட, செய்யத் துணியும் ஆட்கள், அவர்கள் ஸ்டேட்டஸ், வயது, உறவு இவைதான் எனக்கு மிகுந்த பாதிப்பைத் தந்தது.

என் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள். எனக்கே, இப்படி இருக்கையில், இவளுக்கு எப்படி இருக்கும்!

அவள் சொன்னது அப்படி!

கல்யாணம் பண்ணிக் கொடுத்ததோட கடமை முடிஞ்சுதுன்னு, அம்மாவும், அப்பாவும் இருந்துட்டாங்க. நீ சும்மாவே என்கிட்ட பேச மாட்ட. அந்த வீட்டுக்கும் வந்தது கிடையாது. அங்க என்ன நடக்குதுன்னு யாருக்காச்சும் தெரியுமா?

என்ன இப்டி சொல்ற? ஹரீஸ் நல்லவர்தானே? உனக்கு புடிச்சுதானே மேரேஜூக்கு ஓகே சொன்ன.

நல்லவர்தான்! ஆனா ரொம்ப நல்லவர், அதான் பிரச்சினை. பிசினஸ், படிப்பு இதுலல்லாம் பயங்கர புத்திசாலியா இருக்கிற ஆளு, கண்மூடித்தனமான பாசத்துல அடி முட்டாளா இருக்குறாரு!

என்ன சொல்ற? பொதுவா நீ மத்தவிங்க மேல பாசமா இருக்கனும்னுதானே நினைப்ப. நீ எப்பிடி இதுல தப்பு சொல்ற?

நாம பாசம் வெக்குறதுக்கும், மரியாதை வெக்குறதுக்கும் ஒரு தகுதி வேணும்! ஆனா, தொடர்ந்து தன்னை ஏமாத்திகிட்டு இருக்குற ரெண்டு பேரை கண்மூடித்தனமா நம்புற முட்டாளை என்னன்னு சொல்றது? நான் ஏமாத்துவேன், இருந்தும் உன் புருஷன் நம்புவான், அவன்லாம் ஆம்பளையா, அவன் லூசுன்னு என்கிட்டயே ஏளனமா சொல்றவிங்களை என்ன சொல்றது?

நீ யாரைச் சொல்ற?

1 Comment

  1. Raji ma unaku tha comments pls reply

Comments are closed.